அடுக்கும் வேலையில் மூழ்கினான்.
சிறிது நேரம் கழித்து டெம்போவில் இருந்த துணி வைக்கும் பெட்டிகளை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு பின்னால் ஹாரன் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான், மலர்தான் தனது ஸ்கூட்டியில் இருந்தபடி சரவணனைப் பார்த்து கையாட்டி அழைத்தாள், அவனும் அவளை நோக்கிச் சென்றான் போகும் போதே கர்ச்சீப்பால் மாஸ்க் போல ரெடி செய்துக் கொண்டே சென்றான். அவனின் செயலை மனதுள் பாராட்டியவள் அவன் வந்ததும்
”பரவாயில்லையே ஏதோ கர்ச்சீப்பையாவது யூஸ் பண்ணியே ஏன் உன்கிட்ட மாஸ்க் இல்லையா”
”வீட்டுக்குள்ள இருக்கு” என்றான் முணுமுணுப்பாக அவனின் பேச்சைக் கேட்டதில் அவளுக்கு சிரிப்பாக இருந்தது
”இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்க”
”பின்ன புதுசா ஊருக்கு வந்தவன இப்படியா மிரட்டறது”
”இதப்பாரு நான் ஒரு டாக்டர், உனக்கு நல்லது சொன்னேன் அது தப்பா”
”எது நீங்க ஒரு டாக்டரா” என அலறினான் சரவணன்
”ஷ்ஷ் ஏன்டா அலர்ற”
”டாவா” என மீண்டும் அலற
”இப்படியே கத்தின ஊசி போடுவேன்” என சொல்ல இருகையால் தனது வாயை பொத்திக் கொண்டான் சரவணன், அவனின் வெகுளியான குணம் அவளுக்கு பிடித்திருந்தது
”அந்த பயம் இருக்கட்டும், பக்கத்திலதானே இருக்க இரு இரு உனக்கு தடுப்பூசி போடாம நான் விடமாட்டேன்” என சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட சரவணனுக்கு தூக்கிவாரிப்