போட்டது. தனது நிலைமையை நினைத்து நொந்துக் கொண்டான், தேவையில்லாமல் இவளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என நினைத்து கவலையுடனே வேலையில் இறங்கினான்
இரவு 7 மணி வாக்கில் வீட்டிற்கு திரும்பினாள் மலர்.
அவளது தாய் சந்தியாவோ வைதேகியின் வீட்டு படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களுடன் இணைந்து சரவணனும் கதை பேசினான். அதைக் கண்டபடியே வந்த மலரோ வண்டியை நிப்பாட்டிவிட்டு இறங்கினாள், அவள் வரவும் சரவணனின் முகம் சூம்பிவிட்டது
”அய்யோ இவள் எதுக்கு இங்க வர்றா, வர்றதை பார்த்தா ஊசி போடுவாளா நாம கிளம்பலாம்” என நினைத்தவன் மெதுவாக வீட்டிற்குள் செல்ல முயல அதைக்கண்டு
”நில்லுடா” என்றாள் மலர் அதைக் கேட்டு அவனோ
”இதப்பாருங்க என்னைப் பார்த்து டான்னு எல்லாம் சொல்லக்கூடாது” என்றான் கோபமாக
”அப்படியா எதுக்கு என்னைப் பார்த்து ஓடற”
”நான் ஒண்ணும் ஓடலை நைட் 7 மணியாச்சி, டின்னர் செய்யலாம்னு போறேன்”
”டின்னரா ஓ உனக்கு சமையல் தெரியுமா”
“ம் தெரியும்”
”ஆமா என்ன டின்னர்”
”இன்னும் முடிவு பண்ணலை”
”நான் சொல்றதைச் செய்”