செல்ல சரவணனும் உற்சாகமாக உள்ளே வந்தான்
”அம்மா கிளம்பும்மா லன்ச் ரெடியாம் போலாம்” என சொல்லியவன் சட்டையை அவிழ்க்க அதைக் கண்ட வைதேகியோ
”எதுக்குடா சட்டையை கழட்டற”
”இது நல்லாயில்லைம்மா பாரு கசங்கிப் போச்சி, இப்படியா போறது நான் போய் வேற சட்டையை உடுத்திக்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் மலர் அணிந்திருந்த புடவையின் நிறத்தில் ஒரு சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டு கண்ணாடியில் தன்னையே பார்த்து ரசித்துவிட்டு வெளியேறி வர வைதேகியோ
”மாப்பிள்ளை போல இருக்கடா“
”போம்மா நீ ஒண்ணு” என சொல்லிக் கொண்டே தாயை அழைத்துக் கொண்டு மலரின் வீட்டிற்குச் செல்ல அங்கு மலரும் அவளின் தாய் தந்தையரும் அன்புடன் வரவேற்றனர். முதலில் வைதேகிக்கு புரியவில்லை பின் மலர் அணிந்திருந்த புடவையைக் கண்டு சற்று அவருக்கு சந்தேகம் வந்தது
”ஓஹோ இப்பதான் புரியுது சரவணன் ஏன் வேற சட்டையை உடுத்தினான்னு இவளுக்காகதானா ம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்க்கலாம்” என நினைத்தபடியே உணவு சாப்பிட அமர கூடவே சரவணனும் அமர்ந்தான். இருவருக்கும் மலரே பரிமாறினாள் என்ன வைதேகிக்கு மட்டும் கேட்டு கேட்டு பரிமாறியவள் சரவணனுக்கு அவளே தன் விருப்பம் போல பரிமாற அவனும் ரசித்து ருசித்து பாராட்டி தள்ளியபடியே சாப்பிட்டு முடித்தான். இதில் மலருக்கு திருப்தி, மகிழ்ச்சியுடன் இருந்தாள், அவர்கள் இருவரின் உற்சாகத்தையும் கண்ட வைதேகிக்கு ஒரு ஆசை முளைத்தது இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் என்ன என்று கூட நினைத்தார் ஆனாலும் சற்று தயக்கம் கொண்டார் காரணம் மலர் ஒரு டாக்டர் ஆனால் சரவணன் அவனுக்கு வேலை கூட இல்லையே என வருந்தினார்.
லன்ச் முடிந்ததும் சரவணனும் வைதேகியும் வீடு திரும்பினார்கள்