”அப்பா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்”
”என்னம்மா”
”சரவணனைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கப்பா” என சட்டென கேட்க ரவியோ சற்று நிதானித்தார்.
”தம்பி நல்ல தம்பி, சூதுவாது அறியாத புள்ளை, அவரை பத்தி இப்ப எதுக்கும்மா”
”இல்லைப்பா அதுவந்து”
”அம்மாடி நீ டாக்டர், உனக்கு ஏத்தமாதிரியே அப்பா நான் உனக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்திருக்கேன், அவர் வேலை செய்ற ஆஸ்பிட்டல்லயே கூட நீ வேலைக்கு போகலாம் சரியா”
”ஆனா அப்பா” என ஏதோ பேசவர
”சரவணன் தம்பி நல்லவருதான் ஆனா உனக்கு அவரு ஏத்தவர் இல்லையேம்மா”
”அப்பா அவரை எனக்கு பிடிச்சிருக்குப்பா”
”இந்த விசயம் எனக்கு முன்னாடியே தெரியும்மா”
”தெரியுமா தெரிஞ்சுமா இப்படி பேசறீங்கப்பா”
”அம்மாடி மலரு உன் மனசுக்கு சரவணனை பிடிச்சிருக்கு தப்பில்லை, சரவணனை யாருக்குதான் பிடிக்காது, பாசக்காரனாச்சே ஆனா, உன் வாழ்க்கைக்கு சரவணன் பொருத்தமில்லாதவன்மா அதான் பார்க்கிறேன்”
”ஆனா அப்பா“