(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

”நீ சும்மாயிரு எல்லாம் நீ கொடுக்கற இடம்தான்” என சொல்ல சரவணன் வண்டியை விட்டு இறங்கி நின்று தந்தை மகள் பேசுவதை கவனமாகப் பார்த்தான், அவர்கள் பேசுவது கேட்கவில்லை ஆனாலும் அவர்களின் முகத்தில் தெரிந்த கோபத்தைக்கண்டு ஏதோ புரிந்துக் கொண்டான்

  

”அப்பா அவருக்கென்ன குறைச்சல் எனக்கு அவரை ரொம்பவே பிடிச்சிருக்கு”

  

”அவன் சரியான பயந்தாங்கொள்ளிம்மா, எதுக்கெடுத்தாலும் பயப்படுவான், அம்மா புள்ளை வேற அவனை நீ கல்யாணம் செய்துக்கிட்டா நீதான் கஷ்டப்படுவ, கல்யாணம் ஆனபின்னாடியும் அவன் அவங்க அம்மா பின்னாடிதான் அலைவான்மா அவன் வேணாம்மா உனக்கு”

  

”அப்பா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை அப்பா இல்லாதவரு, அம்மாதான் உலகமா இருக்கறவரு அப்படி பாசமா நடந்துக்கறாரு, அம்மாவுக்கே இவ்ளோ பாசம் காட்டறாருன்னா எனக்கு காட்ட மாட்டாராப்பா நீங்களா எதையாவது கற்பனை செய்துக்காதீங்க ப்ளீஸ்பா”

  

”முடியாதும்மா அவங்க அம்மாவை விட்டு அவனோட அப்பா பிரிஞ்சிட்டாங்களாம் அதுக்கு என்ன காரணமும் தெரியலை, அதே போல நீங்களும் பிரியறதுக்கா தேவையில்லை முன்ஜாக்கிரதையா இரு அவன் வேணாம் உனக்கு”

  

”அப்பா எதை எதுகூட முடிச்சிப் போட்டு பேசறீங்க, ஆன்ட்டிக்கும் அவங்க புருஷனுக்கும் ஏதோ பிரச்சனை, அதனால அவங்க பிரிஞ்சிருக்காங்க, அதே போல நாங்களும் இருப்போம்னு நீங்க நினைக்கறது முட்டாள்தனம்”

  

”நீ அதிகமா பேசற மலரு, அப்பா நான் சொல்றதை கேட்டு நட”

  

”முடியாதுப்பா எனக்கு சரவணன்தான் வேணும்”

  

”என்னையே எதிர்த்து பேசறியா உன்னை“ என அடிக்க கையையே ஓங்கிவிட்டார் ஆனாலும் அடிக்கவில்லை மலரோ அஞ்சவில்லை தைரியமாக நின்றாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.