போகும் வழியெல்லாம் ரவி அவனுக்கு உபதேசம் செய்துக் கொண்டே சென்றார், அவனுக்கு இது பழகிவிட்டது, தினமும் இது போன்ற உபதேசங்களை கேட்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம் அவரே மறந்தாலும் இவனே எடுத்துதருவான்
மாலை நேரத்தில் இருவீட்டினரும் துணிமணி எடுக்க ஜவுளிகடைக்குச் சென்றார்கள். அங்கு மலரின் பின்னாலேயே சரவணன் சென்றுக் கொண்டிருந்தான், அதைக் கண்ட ரவியோ நொந்துப் போனார்
”இவனை பாரு என்ன செய்றான்னு எப்ப பாரு ஒண்ணு அம்மா பின்னாடி அலையறான், இல்லைன்னா மலர் பின்னாடி அலையறான், இவன் பின்னாடி மத்தவங்களை அலைய விட்டாதானே நல்லாயிருக்கும் விடக்கூடாது, இவனை என்ன செய்றேன் பாரு” என ரவி சந்தியாவிடம் சொல்லிவிட்டு சரவணனை தேடிச் செல்ல அவரோ
”ஆமா சரவணன் பின்னாடி அலையதான் இவர் இருக்காரே போதாதாம்மா இவருக்கு” என சொல்லிவிட்டு அவர் துணிகளை எடுக்க ரவியோ சரவணனை பிடித்தார்
”என்னடா செய்ற இங்க”
”மலரப்பா வாங்க இந்த புடவையை பாருங்களேன் இது மலருக்கு ரொம்ப நல்லாயிருக்கும்ல”
“ரொம்ப முக்கியம் ஏன்டா இப்படி மானத்தை வாங்கற, பொண்டாட்டி பின்னாடி அலையாத வா இப்படி உன் பின்னாடிதான் அவள் அலையனும்“
”எதுக்கு இப்படியெல்லாம் நினைக்கறீங்க மலரப்பா, அவளுக்கு அப்பா பாசம் விட்டுப்போககூடாதுன்னு உங்க சார்பா நான் இருக்கேன் இது தப்பா”
”ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடு ஆமா உனக்கு துணி எடுத்தியா”
”அம்மா எடுப்பாங்க”