சிறுகதை - சுருக்கும் ஊஞ்சலும் - ரஞ்சகுமார்
வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் 'கண்டிவீதி' வி¡¢கிறது. வீதியின் இடது ஓடத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊ¡¢ன் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தொ¢கிறது. அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கைகளின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்து தி¡¢ந்து, இரைதேடும், இந்தக் காக்கைகள் கூட ஓ¡¢டத்தில் சோம்பியிருக்கின்றனவே! அவ்வளவு வெயிலா?
கடைவாசலுக்கு நேரே றோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி. அக்கம்வேலிக்கும் றோட்டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக் கொண்டு அசைபோடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கண்கள் அரைத்தூக்கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப்பிக் கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போதும் 'ஆவ், ஆவ்' என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே? இன்று இதற்கு என்னவந்தது? ஆறுதலாகப் படுத்திருக்கிறதே! கன்னத்தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தொ¢ய மெதுவாக இது அசைபோடுவதைப் பார்க்க, ஒரே சினமாக இருக்கிறது.
கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி, அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும், சற்றுப் பொ¢தாகவும் காட்சியளிக்கிறது. 'அப்போதிக்கா¢ ஆசுப்பத்தி¡¢'. வயல் வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக- இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத நிலையிலிருந்த-சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலங்கிச் சாய்கிறது. ஆசுபத்தி¡¢ விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப் பிடிக்கிறாரா இல்லையா?, என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக எனக்குப்படுகிறது.