(Reading time: 16 - 31 minutes)
சிறுகதை - சுருக்கும் ஊஞ்சலும் - ரஞ்சகுமார்
சிறுகதை - சுருக்கும் ஊஞ்சலும் - ரஞ்சகுமார்

   

இப்போது அவள் அந்தப் பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம், நான் பெண்கள் எந்தநிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ? அந்த நிறம்.

   

இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால்....? நான்றாகப் பார்க்கலாம்.

   

இந்த நேரத்தில் எங்கே வருகிறாள்? ஆகப்பத்தி¡¢க்காக இருக்கும். இந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்தி¡¢க்குப் போகுமளவுக்கு நோயா? சீ...கூடாது. அப்படியிருப்பதை நான் விரும்பவில்லை.

   

இப்பொழுதுதான் நன்றாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணாடி மாட்டியிருக்கிறாள். சிவந்த முகத்திற்கு கறுத்தக் கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.

   

ஆமாம், இந்தச் சனியன் பிடித்த ஊ¡¢ல்கூட இப்படிப் பெண்கள் இருக்கிறார்களா? ஏன் இருக்கக் கூடாது? ஒருவேளை இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்-என்னைப்போல வெளியூர்க்காரர்களாக இருக்கலாமல்லவா? இங்கே 'பாம்' எதாவது....

   

என்ன! இவள் கடைக்கல்லவா வருகிறாள்? நான் சற்று உஷாராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்.

   

கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்கப் பார்க்கிறது. வாசல் தூணைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொள்கிறாள்,

   

"கவனம்....பாத்துவரக்கூடாதா"

   

"It's alright thank you"

   

ஆகா! மதுரமான குரல்...இவள் 'இங்கிலீசு' தொ¢ந்தவள். நானும் எனக்குத் தொ¢ந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டும்.

   

"What do you want?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.