ஆசுப்பத்தி¡¢க்கு இடதுபுறம் கொஞ்சத் தூரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ் தொ¢கிறது. குவாட்டஸின் முன்விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி கட்டப்பட்டு அதில் சிலதுணிகள் காய வி¡¢க்கப்பட்டிருக்கின்றன, சுவரோடு சாய்ந்து 'சாயும் இடம்' இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பி¡¢யமற்றவைபோல, பலவந்தமாக ஆட்டப்படுவதாக எனக்குப்படுகிறது. அனேகமான வேளைகளில் அந்தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால்போட்டுக்கொண்டு, தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு, இருப்பதைக் காணலாம். இப்போ அதுவெறுமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினூடாக 'றெயில்வேலைன்' தொ¢கிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு. அந்தப் பச்சைக்குமேல் நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே. வானத்தைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா, வெயில்! இந்த வெயில் நாசமாய்ப்போக!
முன்புறம் இப்படிக் கிட்டவாகக் காடு இல்லை. ஆசுபத்தி¡¢, குவாட்டஸ் எல்லாம் தாண்டி பொ¢ய வயல்வெளி. 'லக்ஷபான'விலிருந்து 'யாழ்ப்பாணக்குடா'வுக்கு 'கரண்ட்'டைச் சுமந்துசெல்லும் நீள நீளமான கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான 'போஸ்ட்' களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீலநிறமாகத்தான் காடு தோன்றுகிறது. எங்களூ¡¢ல் தொலைதூரப் பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாழ இதே காட்சிதான்.
மேலே கூரைக்குத் தகரம்தான் போட்டியிருக்கிறார்கள். அதனால் ஒரே வெக்கையாக அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எ¡¢ந்து தள்ளுகிறது. போதாத குறைக்கு பின்னாலிருந்து 'பொய்லர்' சூடு முதுகை எ¡¢க்கிறது. தண்ணீர் கொதிக்கும் 'தள தள' சத்தம் வேறு காதுக்கு நாராசமாக இருக்கிறது.
கண்டி வீதியில் செருப்புச்சத்தம் 'சரசர' என கையில் பிரப்பங் கூடையுடன் கருணே நடந்து போகிறான். அதற்குள் 'போத்தில்'கள் இருக்கும். போகிற அவன் மெல்லிதாக என்னைப்பார்த்துச்