மற்றவர் முகத்தில் சற்று முன் தோன்றிய ஆச்சர்யத்திற்கான காரணம் என்ன ஏது என்று கேட்காது சில நாட்களாக சமையலில் எழுந்திருந்த ஆர்வத்தினால், இயல்பாக மற்ற உணவு வகைகளைப் பார்க்க நகன்றாள் சாந்தி. அவளோடு கூட வந்த கவிதா, "உங்களுக்குத் தெரியுமா? நீங்க வரதுக்கு முன்னாடி நாங்க வனஜா கிட்டே அந்த ரெசிபி பத்தி கேட்டுட்டு இருந்தோம்.. அது ரொம்ப கஷ்டம் அப்படி இப்படின்னு பில்ட் அப் கொடுத்துட்டு இருந்தாங்க.... நீங்க வந்து சும்மா சூப்பரா நோஸ் கட் கொடுத்தீங்க..." என்றாள்.
"ஓ!" என்றாள் சாந்தி ஆச்சர்யமாக. இது அவளுக்கே செய்தி தானே.
"ஆனாலும் எப்படிங்க சாந்தி செஞ்சே பார்க்காமல் கரெக்டா சர்க்கரை ஜாஸ்த்தின்னு கண்டு பிடிச்சீங்க..."
"எல்லாம் பழக்க தோஷம் தான்... கோட்(code) எழுதின அனுபவம் வச்சா நாம எல்லாம் கோட் ரெவ்யு (code review) பண்ணி பக் (bug) கண்டு பிடிக்கிறோம்... அதே மாதிரி தான்..." என்றாள் சாந்தி புன்னகையோடு.
எதையும் மனதில் சந்தோஷத்துடனும், ஈடுபாடுடனும் செய்தால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் மட்டும் அல்லாது, கடினமான வேலைகளை செய்வதும் இன்பமாக சுலபமாக இருக்கும் என்று அவ்வப் போது அவள் சகோதரி சொல்வது அவள் நினைவில் வந்தது. உண்மை தானே... சில நாட்கள் முன்பு வரை சமையல் என்பது புரியாத ஒரு புதிராக இருந்தது ஆனால் இன்று மனதில் ஆர்வத்துடன் ஈடுபாடுடன் அதை செய்யும் போது அது ஒரு சுலபமான சுவாரசியமான விஷயமாக மாறி போனது....எப்போதும் போல் நிவிதாவிற்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டாள்...
*********
நாட்கள் வேகமாக ஓடின... அரவிந்தும் குடும்பத்தோடு சென்னை திரும்பி மீண்டும் பழைய வாழ்கையை ஆரம்பித்தாகி விட்டது... அலுவலக வேலைகளில் மும்முரமாகி விட்ட சாந்திக்கு இப்போதெல்லாம் சமையல் செய்யவோ நிவிதாவின் குறிப்புகளை பார்க்கவோ நேரம் இருப்பது இல்லை.... அன்று அவளின் டீமில் இருந்த ப்ரியா அவர்கள் அனைவருக்கும் தானே பிரியாணி