" ஹேய் என்னடி சொல்லுறே ? கல்யாணமா ? நீயும் நானுமா ? " என்று கிட்ட தட்ட அலறினான் கிருஷ்ணா , மீராவுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்று தற்பொழுது ஒரே அலுவலகத்தில் பணிப்புரியும் அவளது ஆருயிர் நண்பன்.
" ஏன்டா கத்தி ஊரை கூட்டுறே ? உன்னை என்ன கொலையா பண்ணேன் நான் ? "
" ரெண்டுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல டி " என்று பதில் கூறி அவளிடம் பரிசாக இரண்டடி பெற்றுக்கொண்டவன் ,
" சரி சரி விஷயத்துக்கு வா ...என்ன திடீர்னு உனக்கிந்த விஷப்பரிட்சை ? " என வினவினான்.
" நேத்து புக் படிக்கும்போது தான் யோசிச்சு பார்த்தேன் டா "
" அது சரி உனக்கு பொழுது போகலைனா என் தலையைதான் உருட்ட தோணுமோ " என்று கேட்க
" ப்ப் ச்ச் போடா ....... நமக்காக தான் யோசிச்சேன் , உனக்கும் கல்யாணத்துலே இஸ்டம் இல்ல ..எனக்கும் இல்ல ..ஆனா நம்ம வீட்டுலே கண்டிப்பா அப்படியே விட்ருவாங்களா சொல்லு ? யாரோ ஒரு பையன் பொண்ணு கிட்ட போய் எனக்கு கல்யனதுலே இஸ்டம் இல்லன்னு சொல்றதுக்கு பதிலா நீயும் நானும் கமிட் ஆனா என்ன தப்பு ? கணவன் மனைவி என்ன பெரிய குதிரை கொம்பான உறவா? இப்போ வேற வேற வீட்டுல இருக்குற நம்ம நட்பு நாளைக்கு ஒரே வீடுல தொடர போகுது.... " என்று மூச்சு விடாமல் பேசியவளை பார்த்து அசந்துபோனான் கிருஷ்ணன் .
" என்னடா இப்படி பார்க்குறே ? "
" ம்ம்ம்ம் நீயெல்லாம் ஏண்டி வக்கீலுக்கு படிக்கலே ?
" என்னடா கொழுப்பா ? "
" பின்ன என்ன ? உன் பிடிவாதம் எனக்கு தெரியாதா? உனக்கொரு விஷயம் முடிவு பண்ணிட்டா எவ்ளோ மொக்கையா காரணம் சொல்லியாச்சும் சாதிச்சிருவியே நீ " என அவன் நகைக்க
மீராவின் முகம் அஷ்டகோனளானது......
"என்னடா உனக்கு இது புடிக்கலையா? யாரையாச்சும் விரும்புறியா ? நான் நல்ல யோசிச்சுதான் இந்த முடிவெடுத்தேன் . நம்மளை பத்தி யோசிச்சு பாரு ... உன்கிட்ட பேசாம நானும் என் கிட்டே பேசாம நீயும் இருக்க முடியுமா? "
" ஹேய் ஏண்டி இப்போ லூசு மாதி பேசற? "
"இல்லடா நம்ம நட்பு நமக்கு புரியுது சரிதான் . ஆனா எல்லாரும் அதை சரியா பார்பாங்களா ? என்னாலே யாருக்காவும் உன்னை விட்டு கொடுக்க முடியாது ..அதை நெனச்சு கூட பார்க்க முடில " என்று சிறுபிள்ளை போல இடமும் வலமும் தலையாட்டிய தோழியை ஆதரவாக தோளோடு அணைத்தவன் ,
" மீரா .... ஹேய் .... இங்க பாரேன் ....... உனக்காக நான் எதாவது செய்ய மாட்டேன் நு சொல்லிருகேனா? எதனை ரிஸ்க் எடுத்துருக்கேன் ...என்ன இது கொஞ்சம் லைப் லாங் ரிஸ்க் பட் உனக்காக எடுக்குறேன் "
என்று கண் சிமிட்டிய தோழனை பார்த்து அழகு காட்டியவள்
" வேவேவேவேவேவே ...நியாயப்படி நான்தாண்டா அத சொல்லணும் " என சிரித்தாள்.. அவளின் வெள்ளைசிரிப்பில் தானும் இணைந்து கொண்டான்....
ஆனால் இருவருக்குமே தெரியவில்லை திருமண பந்தத்தின் மகத்துவமும் அதன்வழி மாறும் விதியும் !
அன்றைய நாட்களின் நினைவுகளில் முகம் கனிந்தாள் மீரா...
அன்றிரவு காரில்,
" கிருஷ்ணா"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ? "
" ஹேய் கிருஷ்ணா ?"
"சொல்லு .............. "
" நான் இப்போ என்ன கேட்டேன்னு இவ்ளோ சைலண்டா இருக்க நீ? ..... ஏன் நான் அழகா இல்லையா ? " என்று கணவனின் பாராட்டுதலுக்கு காத்திருந்து ஏமாந்தவள் தலை குனிந்த தாமரையாய் அமர்ந்திருந்தாள்......
மனைவியின் சினுங்களை ரசித்தவன் மனதிற்குள்ளே " அப்படி போடு.......... நான் பாராட்டுலேனா அம்மணிக்கு ஏன் முகம் சிணுங்குது ... இருடி இன்னைக்கு என்னை பண்றேன்னு மட்டும் பாரு " என்று ரகசியமாய் புன்னகைத்து கொண்டான்.
" கிருஷ்ணா......................"
" என்னடி "
" என்னடா கேள்வி கேட்டா ரொம்பே சீன் காட்டுற...நீ ஒன்னும் சொல்ல வேணாம் போ " என்று முகம் திருப்பி கொண்டாள்..
" கார் ஓட்டும்போது நான் ரோட்டை பார்ப்பேனா இல்ல உன்னை பார்ப்பேனா? " என மீண்டும் சீண்டியவன் அவளின் மௌனம் பொறுக்காமல் காரை நிறுத்தினான்.
சாலை விளக்கொளியில் தேவதையாய் மிளிர்ந்தவள் கண்டு மீண்டும் அசந்து போனான்...
" இவளும் தான் எவ்வளோ அழகு ...இத்தனை வருஷம் இவளை இப்படி ரசிச்சதில்லையே ..இதுதான் காதலா ?
கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
தினசரி புது புது அனுபாவம் எதிரிலே
உலகமே ..
உன்னால் இன்று புதியதாய் உணர்கிறேன் ..
உற்சாகத்தை முழுவதாய்
என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன் ..
இது என்ன மாயம் ..மாயம் ..மாயம்
இதேதுவரை போகும் ..போகும் ..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே "
அவன் எண்ண அலைகளுக்கு தோதாக வானொலியில் பாடல் இசைக்க , கிருஷ்ணன் ,
" மீரா "
" ............................."
" மீரா இங்க பாரு "
"..........................................."
" என் மேல உனக்கு அக்கறையே இல்லடி .... பட் நான் அப்படி இருக்க முடியுமா ? அதுனாலேதான் எதுவும் சொல்லாம இருந்தேன் " என புதிர்போட்டான்...
ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் கோபத்துடன் அவன் புறம் திரும்பினாள்...
" யாரு எனக்கு உன் மேல அக்கறை இல்லையா ? உனக்குத்தான் என்னை பார்க்கவே பிடிக்கல அதான் இவ்ளோ கேட்டும் என் பக்கம் பார்த்தியா ? இதுல இவருக்குதான் என் மேல ஜாஸ்தி அக்கறையாம் " என பொரிந்து தள்ளினாள்.
" அட மக்கு.... உன்னை பார்த்த என்னால எப்படி காரோட்ட முடியும் ? " என கண் சிமிட்டினான்...