இந்த முகம், அவன் வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு புதிதாக இருந்தாலும் கோபப்படவேண்டியவளின் மனம் இதமானதை உணர்ந்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. " எப்படித்தான் இவன் மேல நமக்கு கோபமே வராமல் இருக்கு? பேருக்கேற்ற மாதிரி இவன் உண்மையிலே கிருஷ்ணன் தான்.... அந்த கிருஷ்ணனை எப்படி எல்லாருக்கும் பிடித்ததோ அதேபோல் தான் இவனும் " என்று மனதிற்குள் பேசிகொண்டவள், தனக்கும் அவனை பிடித்திருக்கிறது என்பதை என்பதை ஏன் உணரவில்லை ? ஒரு வேளை உணர்ந்திருந்தாலும் கூட தனக்கு பிடித்த நண்பன் என்று மட்டும்தான் நினைத்திருபாளோ?
" ஹேய் .............. என்னடா சைலண்ட் ஆகிட்டிங்க மேடம் "
" ம்ம்ம்ம்ம் ஒண்ணுமில்ல ..அதிருக்கட்டும் அதெப்படி உன் மேல எனக்கு அக்கறையே இல்லன்னு நீ சொல்லலாம் ? "
" ஹா ஹா ஆமா பின்ன என்னவாம் .... தாறு மாறா ஒரு தேவதை பக்கத்துலே உட்கர்ந்திருக்கு ...எங்க உன்னை பார்த்துகிட்டு வண்டியை எங்கயாச்சும் மோதிடுவோமோ பயந்து நானே ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுனா ? நீ இப்போதான் என்னை பார் யோகம் வரும் நு சொல்ற"
" கழுதை கழுதை, உதைபடுவ டா... என்னை பார் யோகம் வருமா ? உனக்கு லொள்ளு ஜாஸ்தியா போச்சு " என்றபடி அவன் காதை திருக வந்தவளின் கைகளை பிடித்தவன் சன்ன குரலில் ,
" மீரா.......... நிஜம்மா தேவதை மாதிரி இருக்க தெரியுமா ? அழகான மனைவி அன்பான துணைவி கிடைச்சா யோகம் தானே " என்றபடி அவள் கண்களுக்குள் ஊடுருவினான்.
அவனின சன்ன குரலா? ஸ்பரிசமா ? அருகாமையா ? ஏதோ ஒன்று அவளை மௌனமாக்கியது. அந்த அழகா நிமிடத்தை கலைக்க விரும்பாமல் கிருஷ்ணனும் சாலையில் கவனம் செலுத்தினான்.
விருந்து முடிந்து நண்பர்கள் அனைவரும் பாட்டு பாடலாம் என முடிவெடுத்தனர்.... இடையிடையே புதுமண தம்பதியரான கிருஷ்ணன் - மீராவை சீண்டவும் மறக்கவில்லை ..அதற்கேற்றாற்போல் மீராவின் முறை வர , என்ன பாடல் பாடுவது என கோரி அவள் கிருஷ்ணனின் முகம் பார்த்தாள்....
" ம்ம்ம்ம்ம் மன்மதனே நீ பாடு மீரா ..உன் குரலில் அந்த சாங் கேக்கனும்னு எனக்கு ரொம்பே நாள் ஆசை " என்று அவன் கண் சிமிட்ட, மற்ற நண்பர்கள் "ஹோ " என கோரஸ் பாடினர்..
" என்ன இவன் இப்படி பண்றான் .... கண் சிமிட்டுறான் ... ஏற்கனவே எல்லாரும் கலாய்க்கிறாங்க... வீடுக்கு போனதும் கவனிச்சுக்குறேன் " என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள் அவனை முறைக்க,
"ஹேய் பாடு பாடு ...அப்பருமா உங்க மாமாவை லுக் விடு " என மேலும் சீண்டினாள் அவளின் அருமை தோழி சம்யுக்தா ....
அனைவரின் முன்னிலையில் ஏதும் பேச இயலாதவள் தன் தேனான குரலில் பாட ஆரம்பித்தாள்
"நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டு இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ....
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னை வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மெண்டு முழுங்கவோ
உந்தன் முன்னாடி மஞ்சம் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளூ....
ஆயுளின் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்
பார்த்து கொள்ளு... "
என்று பாடியபடி அவள் கோபமாய் பார்க்க, அவனோ காதல் கணைகளை கண்களால் தொடுத்தான்.
" ஓகே ஓகே அடுத்து கிருஷ் நீதான் பாடனும் " என்று சுரேஷ் சொல்ல ....
" அவ உன்னை மன்மதனே நு சொல்லிட்டா நீ எப்படிப்பா ? மைதிலியா இல்ல ரதியா? " என வாரினான் ஸ்ரீதர்...
" எனக்கு ரதியும் வேணாம் மைதிலியும் வேணாம் என் மீரா போதும்" என்றபடி மீண்டும் அவளை பார்த்து கண்ணடித்தான் கிருஷ்ணன்.
" சரி பாடு பாடு "
" பாடுறேன் பட் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்"
" என்னடா "
" நான் பாடி முடிக்கிற வரை மீரா கண்ணை கட்டியிருக்கணும் " என சொல்ல அதிர்ந்தாள் மீரா ..
" ஏன் .... ? "
" ஏன்னா உன் கண்ணை பார்த்தால் என்னால பாட முடியாதுடி செல்லம் " என அவன் கொஞ்ச
" கிருஷ்............................ " என அடிக்குரலில் மிரட்டினாள் மீரா .
இதற்கெல்லாம் பயந்தவனா நம் கிருஷ்ணன் ....
" இப்போ நான் பாடணுமா வேணாமா " என அவன் கேட்க,
பொறுமை இழந்த சம்யுக்தா மீராவின் கண்களை மூடினாள்.....