(Reading time: 24 - 48 minutes)

பிறர் அறியா முகம் - ப்ரீத்தி

ஹாய் நான்தாங்க ரிஷிகா “the popular anchor”“ என்று கண்ணாடி முன் நின்று தன்னை தானே பார்த்துக்கொண்டு பிறருக்கு சொல்லுவது போல் துள்ளலுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் 23 வயதான அவள். வர்ணிக்கும் அளவிற்கு பூலோக அழகி இல்லை என்றாலும்.... மனதில் உள்ள உறுதியான (positive) எண்ணங்களே அவளை வெளியிலும் சரி உள்ளத்திலும் சரி அழகாக காட்டியது.

Pirar ariya mugam“அதை நாங்க சொல்லணும்....” எங்கோ இருந்து ஒரு மர்ம குரல் மட்டும் கேட்டது.

சுற்றும் முற்றும் அந்த குரலுக்கு சொந்தக்காரனை தேடியவள் எங்கும் கண்ணில் படாததால் மீண்டும் கண்ணாடியின் புறம் திரும்பிக்கொண்டு “இது ஏதோ உள்நாட்டு சதி ரிஷிகா சோர்ந்து போக கூடாது....” தோரணையாக சொல்லிக்கொண்டாள்...

“ஆமா ஆமா இந்த மூஞ்சிக்கு உள்நாடே அதிகம் தான்...” என்றது அந்த குரல்... இப்போது பொறுமை இழந்தது அவளுக்கு, “டேய் குண்டா எங்கடா இருக்க? பயந்தாங்குளி கண்ணுல பட்டாய் அவ்வளவுதான்” என்று அவள் சில அடிகள் முன்னே வைக்க, திபுதிபுவென ஓடினான் அவளது தம்பி மனோ. இருவரும் போட்டிபோட்டு ஓட, எதிரில் வந்த ரேவதியின் மீது இடித்து நின்றாள் ரிஷிகா.

“ஹே ஹே நிறுத்துங்க காலையிலேயே ஆரம்பிக்காதிங்க, உனக்கு இன்னைக்கு சீக்கரம் போகனும்னு சொன்னல கிளம்பு மறக்காம dining டேபிள் மேல வச்சிருக்க டிபன் பாக்ஸ் எடுத்துக்கோ...” என்று கூறியவாறு தன் பணிக்கு தேவையான பத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் வட்டாட்சியரான அம்மா ரேவதி.

“நீங்க தான்மா கரெக்டா என்னை புரிஞ்சுக்குரிங்க” என்று கூறி மேஜையை நோக்கி சென்றாள்.

“எதுக்கு இந்த ஐஸ் இப்போ திடிர்னு?” என்று சந்தேகமாக கேட்டார் ரேவதி.

“வேறெதுக்கு நல்லா சுட சுட நம்ம ரமா அம்மா போட்ட வடை மணம் அப்படியே மூக்கை தழுவி போச்சா எப்படியும் பாகப்பிரிவினை நீங்க தானே பண்ணுவீங்க எனக்கு கொஞ்சம் அதிகமா வைப்பீங்கனுதான்” என்று கண்ணடித்து போகிறபோக்கில் வீட்டில் வேலை செய்யும் ரமாவையும் ஐஸ் வைத்து நாசுக்காய் கூறினாள்.

ப்படியோ அடாவடியாக பேசி வீட்டையே அலறவைத்து அங்கிருந்து கிளம்பி ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தின் முன் வந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினாள் ரிஷிகா.

வரும் வழியெல்லாம் அனைவருக்கும் உற்சாகமாக காலை வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தவள் அவளது அறைக்கு அருகே அவளது தோழி ரோஸ்லின் பாதி விழிகள் உள்ளே போய் முகமே ஒளியிழந்து சோர்ந்து ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதை கண்டாள்.

அருகில் சென்றவள் “என்னடி என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” ஆதரவாக கேட்டாள்.

“தெரியலை ரிஷி என்னமோ பண்ணுது ஒரே மயக்கமா இருக்குடி” என்று பரிதாபமாக கூறினாள்.

பின்னால் மாட்டி இருந்த பையை கலட்டி அதில் தான் கொண்டு வந்த க்ளுகோசை எடுத்தவாறு “பரவால்லையே ரோஸ் இன்னும் கல்யாணம் கூட ஆகலை அதுக்குள்ள நல்ல நியூஸ் குடுத்திட்ட.... கள்ளி...” என்று அவளை கிண்டல் செய்தவாறே அவள் அருந்த க்ளுகோசை நீட்டினாள் ரிஷி.

இவளது உரையாடலின் விதம் தெரிந்தமையலோ அல்லது பேசும் சக்தியற்றோ ரோஸ்லின் வெறும் முறைப்பை மட்டும் பதிலாக தந்து க்ளுகோசை குடித்தாள்.

“சரி சரி விடு எதுவும் வேலை இல்லைனா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் போட்டுடு” என்று கூறினாள்.

“என்னது லீவா?!” என்று திருதிருவென முழித்தவள். “ரிஷி நான் எக்குதப்பா மாட்டி இருக்கேன்டி” என்று பதறினாள்.

“என்னடி உளறுற என்ன விஷயம்?”

“இன்னைக்கு நான் தான் மிஸ்.நர்மதாவை இன்டர்வியூ செய்யனும்...”

“fashionista   நர்மதா மேடத்தையா????” என்று அவரது புகழ் அறிந்தமையால் வியந்து கேட்டாள்.

“ம்ம்ம்ம்.... ஆனால் என் நிலைமையை பார்த்தால் என்னால் முடியும்னு தோணலை ரிஷி” என்று பேசவே சக்தி இன்றி திணறி தட்டு தடுமாறி பேசினாள் அவள். அவளை பார்க்கவே பரிதாபமாக ஒருபுறம் தோன்றினாலும், மறுபுறம் இப்போது சென்று முடியாத நிலைமை என்று கூறினால் திட்டு விழுமே என்று பயம் வந்தது இருப்பினும் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவளையும் அழைத்துக்கொண்டு அவளது மேலாளர் அறைக்கு சென்றாள்.

அங்கே அவளது தோழிக்காக பேச சென்று இறுதியில் வந்த முடிவு ரிஷிக்கே நன்மையா அல்லது தீமையா என்று புரியாமல் வந்து நின்றது. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்துக்கொள்ள அமைதியாகவே வெளியே வந்தாள் ரிஷி.

அவளது அமைதியை தவறாக உணர்ந்துக்கொண்டு “சாரி ரிஷி எனக்காக பேசப்போய் கடைசியில் அவர் உன்னையே இண்டர்வ்யூ எடுக்க சொல்லுவாருனு நான் எதிர்பார்க்களை!? உனக்கு இருக்கும் வேலையில் இது வேறையா?” என்று கூறி சற்று அழுத்துக்கொண்டு.

“அட ரோஸ் என்ன உளறுற? நான் பார்க்குற வேலைக்கா??? ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே....” என்று நக்கலாக ஆரம்பித்துவிட்டு, “அதெல்லாம் இல்லை ரோஸ் எனக்கு நர்மதா மேடமை இன்டர்வியூ பண்ண போறேனேன்னு ஒரு இன்ப அதிர்ச்சி அவ்வளவுதான் என்னாலையே நம்ப முடியலை....” என்று இன்னமும் அவள் கண்களில் அதே ஆர்வம்...

அதை கண்ட ரோஸ்லின் கண்கள் அவளின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.... “சரி இதுல நான் இந்த இன்டர்வியூகாக தயார் பண்ணின கேள்விகள் அப்பறம் அவங்களை பத்தின விவரம் இருக்கும் ஒருமுறை பார்த்துக்கோ சரியா?! என்னால பேசவே முடியலை ரிஷி நான் கிளம்புறேன்” என்று கூறி அவள் நகர்ந்து சென்றாள்.

அவள் தந்த காகிதங்களை வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் அவள் நுழைய அங்கு அவளது மற்றொரு தோழி இருந்தாள், “நீ என்னடி இங்கே பண்ணுற?” என்று கேள்வி கேட்டவாறே காகிதங்களை மேஜை மீது வைத்தாள் ரிஷிகா.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ரிஷிக்கு தொலைபேசி அழைப்பு வர அதை எடுத்து பேச துவங்கினாள்...

அவள் பேசிக்கொண்டிருக்கும் போது அவளது தோழி ரிஷி வைத்திருந்த காகிதங்களை எடுத்து படிக்க துவங்க, பத்திரம் அவை முக்கியமானவை என்று ரிஷி கையசைவால் கூறியதையும் பொருட்படுத்தாமல் பிரித்துபிரித்து பார்த்தாள். இறுதியாக மேஜையில் வைக்க சென்றவள் சிலவற்றை கீழே போட்டுவிட, ரிஷியிடம் இருந்து திட்டு வாங்கும் முன் அவளே எடுத்து அடுக்கியும் வைத்தாள்.

இந்த குளறுபடியில் அவள் கையில் இருந்து தடுமாறி மேஜை அடியே சில காகிதகள் சென்று தப்பியது. ரிஷியும் அதை கவனிக்காமல் போய்விட, சில நேரங்களில் எதிர்பாராமல் நடப்பது கூட சில நன்மைகளுக்கே என்பதுபோல் சிக்கிய சில குறிப்புகள் மட்டும் ரிஷியின் மூளைக்குள் சென்றது.

நேரம் நெருங்க நெருங்க, ஒரு புது உணர்வை எதிர்கொண்டாள் ரிஷிகா.. எத்தனையோ நேர்முக உரையாடல்கள் செய்திருக்கிறாள். நிறைய துறைகளில் இருப்பவர்களை சந்தித்திருக்கிறாள் ஆனால் அவள் ஆவலாக எதிர்பார்ப்பது ஒரு பெண்மணியை.... அவரின் புகழ் உலகெங்கும் இல்லையென்றாலும் இந்தியாவில் சில மாநிலங்களில் உண்டு. வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். ஒருசில மாதங்களாக தான் இவரை பற்றிய செய்திகள் கேள்விபட ஆரம்பித்தாள், அதன் முதலே ஒரு ரசிகை ஆகிபோனாள் ரிஷிகா. பெரிதாக எந்தவித நேர்முக உரையாடலும் நர்மதா தந்ததில்லை என்பதால் அவரை பற்றின செய்திகள் எதுவும் பெரிதாக தெரியாது அவரின் புகைப்படங்கள் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. இது அவளுக்கு ஆர்வத்தை மென்மேலும் கூட்டியது.

மீண்டும் மீண்டும் அந்த காகிதங்களை பார்த்தவள் இவ்வளவு தானா ரோஸ்லின் தயாரித்தது என்று தோன்றிக்கொண்டே இருக்க, நேரமின்மையால் அந்த என்னத்தை தவிர்த்து நர்மதாவின் தொழிலை பற்றி அதிகமாக கேட்டு தெரிந்து கொள்ள நினைத்தாள்.

5..4..3..2..1..என்று கையசைப்பை காட்டி துவங்கலாம் என்று அனுமதி தந்தார் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.