(Reading time: 24 - 48 minutes)

 

முகமூடி

து ஒரு கதை அல்ல சுயசரிதம்... ஆனால் என்னைபற்றி அல்ல... பேச்சிலேயே பலரை மயக்கும் வித்தை எனக்கு உண்டு என்று பலர் கூற கேட்டிருக்கிறேன் ஆனால் எழுத்தளவில் இது என் முதல் படைப்பு. என்னையும் ஒருவரின் பேச்சு ஈர்த்தது, ஆம் நான் கண்டு வியந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு. அன்றும் எப்போதும் போல் சூரியன் தன் ஆயிரம் கரங்கள் கொண்டு அனைவரையும் வாட்டிவதைத்து கொண்டிருந்தான்.

Mugamudiசென்னையின் ஒரு பிரதான இடத்தில் உள்ள ஒரு பூங்காவில்தான் அவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டவை....

எங்க அம்மா அப்பா எனக்கு வைத்த பெயர் வினோத். ரொம்ப சுட்டித்தனமா சுத்திட்டு எப்பவும் ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருப்பேன். படிப்பிலே முதல் ஆளாக இருந்தேன். ஆனால் இந்த விளையாட்டுனாலே என்னமோ எனக்கு பிடிக்காது, முக்கியமா கிரிக்கெட் அதுதான் பசங்களுக்கு அடையாளமே ஆனால் எனக்கு அதுமேல ஈர்ப்பு வந்ததே இல்லை. சும்மா ஒரு இடத்தில் ஒக்காந்து பேசிட்டே இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோணும் இல்லை வித விதமா ஆடைகள் வரைய தோணும். ஸ்கூல்ல நிறைய நாடக போட்டிகள் நடக்கும் நான் நல்லா வரைவேன்னு என்னையே டிரஸ் டிசைன் பண்ண சொல்லுவாங்க எனக்கு பெருமையா இருக்கும். அப்போவெல்லாம் இப்படி ஒரு துறை இருக்குனே தெரியாதே... முக்கியமா பெண்கள் அணியும் எல்லா டிரஸ்ம் நான் வடிவமைச்சதாக தான் இருக்கும், இப்படி பேச துவங்கியவரின் கண்கள் பழைய கால எண்ணத்தில் ஓட கண்கள் அருகே அழகாக சுருங்க சிரித்தார். 

இப்படி ஏற்பட்ட பலக்கத்தாலோ என்னவோ வகுப்புல பொண்ணுங்க எல்லாம் எதுவாக இருந்தாலும் என்கிட்டவே கேட்பாங்க. என்னை சுத்தி எப்பவுமே பொண்ணுங்க கூட்டம் இருந்திட்டே இருக்கும். முதலில் கண்டுக்காம இருந்த பசங்களும் பருவ வயது வந்ததும் ஓட்ட ஆரம்பிச்சாங்க... அந்த வயசுல எல்லாமே நல்லாத்தான் இருந்துச்சு அதெல்லாம் ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைனு சொல்லியே சமாளிப்பேன். வீட்டில அம்மா அப்பா எப்பவுமே நான் வரையுற எல்லா டிசைன்ஸ்க்கும் பாராட்டுவாங்க... அந்த ஊக்கத்துல சில சமயம் நானே மிச்சம் இருக்க பழைய துணியில வடிவமைச்சு போட்டுக்காட்ட ஆரம்பிச்சேன். விளையாட்டா ஆரம்பிச்சது தான்.... என்று இடைவெளி விட்டவரின் கண்களில் அன்று போலவே வலியின் பிரதிபலிப்பு இருந்தது...மீண்டும் தொடர்ந்தார். முதல்ல சிரிப்பாக தான் இருந்துச்சு ஆனால் எனக்கு அப்படி பண்ணிக்குறது கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சுது.. ஒருவேளை அந்த கலைல இருக்க ஆர்வம்னு என் மனசுல நினைச்சுகிட்டேன்.

அப்பா இப்படி நான் பண்ணிகுரதை பார்த்து ரொம்ப கோவப்பட்டார். ஏன் நான் இப்படி பண்ணிக்குறேன் ஏன் அப்பாக்கு கோவம் வந்திச்சு அப்போ அந்த வயசுல புரியலை. புரியுற காலமும் வந்திச்சு. நான் 10த் படிக்கும் போது காரணத்தையும் தெரிஞ்சுகிட்டேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றம் நான் ஒரு திருநங்கைனு உணர வைத்தது. புரிஞ்ச அப்பறம் கொஞ்ச மாசம் யார்கிட்டயும் சொல்லாம ரொம்பவே அழுதேன். யாருகிட்ட பகிர்ந்துக்குரதுன்னு புரியாம என் வகுப்பு நண்பன்கிட்ட 11வது படிக்கும் போது பகிர்ந்துகிட்டேன். அதுதான் நான் வாழ்க்கையில் பண்ணின முதல் பெரிய தப்பு.

காட்டுத்தீ போல பருவிச்சு செய்தி, போறவர இடத்தில எல்லாம் கிண்டல் பண்ணாங்க. எப்பவும் என்கூடவே பேசிட்டு இருந்த பொண்ணுங்க பார்வைல ஒரு ஏளனம், ஒரு அருவருப்பு. ரொம்பவே காயப்பட்டு போனே... பசங்க சொல்லவே வேண்டாம் கேட்க கூடாத வார்த்தையெல்லாம் கேட்டேன். சரி வீட்டில என்ன சொல்வாங்கன்னு எதிர்ப்பார்த்து போனேன் அதுதான் என்னோட கடைசி நாள் என்னோட வீட்டிலனு தெரியாமலேயே... ஒரு விரக்தி புன்னைகையை தழுவியது அந்த உதடுகள்...

ன்னைக்கு வீட்டுக்கு போனதும் பரபரப்பா அம்மாவும் அப்பாவும் வெளிய கிளம்ப தயார் ஆனாங்க என்னையும் கிளம்ப சொன்னாங்க எங்கனு கேட்க தோணலை. அவசரமா கிளம்பி ஒரு ரயிலில ஏறினோம், மும்பை போற ரயில். போய்சேர 2 நாள் ஆச்சு ஆனா என்கிட்ட ரெண்டு பேருமே நல்லா பேசலை... அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியும் அதனால கொஞ்சம் ஏமாற்றத்துல இருப்பாங்கனு விட்டுட்டேன் ஆனால் நான் தூங்குனதா நினைச்சு இரவு நேரத்துல அவங்க பேசினது நான் வாழ்க்கைல கொஞ்சமும் எதிர்பார்க்காதது.

சோகமான குரலில் முதலில் ஆரம்பிச்சது அம்மாதான் கண்டிப்பா உங்க முடிவு இதுல மாறாதாங்க? ஒரு ஆசரமத்தில கூட சேர்க்கலாம் இல்லை.. என்று அவர் கூறும் போதே நான் ஏன் இப்படி மாறினேன்னு முதல் தடவை வருத்தப்பட்டேன். அதுக்கு அப்பா தந்த பதில்ல நான் செத்துட்டேன்.

மாறுறதா? விளையாடுறியா? ஆசரமத்தில என்னனு சொல்லி சேர்ப்ப? என் பிள்ளைனா? வேண்டவே வேண்டாம். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்கலைன்னு நினைச்சுக்குறேன் என்று கூறியவரின் குரலில் அப்பட்டமாக வெறுப்பு தெரிந்தது.

மொத்தமா இடுஞ்சு போயிட்டேன். எனக்குள் இப்படி ஒரு மாற்றம் வந்ததையே என்னால நம்ப முடியாத ஒரு நேரத்துல இவங்களோட பேச்சு இன்னும் என்னை நோக அடுச்சுருச்சு அப்பத்தான் முடிவு பண்ணேன்... என்னை சிரமப்பட்டு தொலைக்குற கஷ்டத்தை கூட அவங்களுக்கு தரக்கூடாதுன்னு... சத்தமே இல்லாம வேற compartment போயிட்டு காலைல ரயில் நின்னதும் அந்த மும்பை நகர ஜனக்கூட்டத்தில் கலந்திட்டேன்.     

எங்கேங்கையோ சுத்தி கடைசியில் கால் ஓய ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்தேன். ரொம்ப நேரம் கழிச்சு வெளிய வந்த ஒரு பெண்மணி என்னை மேலையும் கீழையும் அளவெடுத்தாங்க...

என்ன? வீட்டுல இருந்து ஓடிவந்திட்டியா? என்று சாதாரணமா கேட்டாங்க.

இல்லைன்னு தலையாட்டினே...

வேணும்னே தொலைச்சிட்டாங்களானு திரும்பியும் கணிச்சாங்க ஆனால் இம்முறை சரியாக...

ஆமாம்னு தலை ஆட்டினே... உடனே பக்கத்தில இருக்க கடையில சாப்பிட உணவு வாங்கிதந்தாங்க எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருந்துச்சு அவங்கள்ட எல்லாத்தையுமே சொல்லிட்டேன். பொறுமையா கேட்டவங்க தானும் ஒரு திருநங்கைனு சொன்னப்ப ஆச்சர்யபடலை ஏன்னா அவங்கள்ட்ட ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தேன்...  பெண்மையைவிட ஆண்மை தான் அதிகம் தெரிஞ்சது அவங்ககிட்ட, ஆனால் நல்ல மனசு இருந்துச்சு அவங்களுக்கு...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.