(Reading time: 8 - 15 minutes)

 

வளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

மனதின் ஓரத்தில் ஒரு சின்ன நெருடல்.

கல்லூரி நாட்களில் அவனிடம் அடிக்கடி சொல்வான் சந்துரு. எனக்கு பொண்டாட்டின்னா அது மதுவந்தி தான் டா.

அவன் சொன்ன நிமிடத்தில் சற்று அதிர்ந்து தான் போனான் பத்ரி. ஆனால் நண்பனின் காதலுக்கு குறுக்கே செல்ல விரும்பாதவனாய் தன் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக்கொண்டான்.

ஏண்டா மது கிட்டே உன் காதலை சொல்லிட வேண்டியது தானே ஒரு முறை சந்துருவிடம் பத்ரி கேட்ட போது சொன்னான் அவன்  'இல்லைடா. அவ கொஞ்சம் பணக்கார பொண்ணு. அவ அளவுக்கு நான் வளர்ந்த அப்புறம் தான் அவ கிட்டே என் மனசை சொல்லணும்.

சொல்லிக்கொள்ளவில்லை. இருவருமே தங்கள் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிகொள்ளவில்லை.

இன்று அவன் முன்னால் வந்து அமர்ந்திருக்கிறாள் அவள்.

என்னப்பா? யோசிக்க டைம் வேணுமா? கலைத்தார் அப்பா.

சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென சொல்லிவிட்டிருந்தான் 'இல்லைப்பா. எனக்கு இந்த கல்யாணத்திலே முழு சம்மதம். ஆனால் கல்யாணம் உடனே நடக்கணும். கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளையும் கூட்டிகிட்டு நீங்க சொன்ன மாதிரி நான் அமெரிக்கா கிளம்பறேன்.

தெரியும். இன்னும் சில நாட்களில் சந்துரு அவளை தேடி வருவான் என்று அவனுக்கு தெரியும். அதற்குள் தனது திருமணத்தை நடத்திக்கொண்டான் பத்ரி. இதோ நாளை அமெரிக்காவிற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறான் பத்ரி.

நான் என்ன கள்ளா பாலா

நீ சொல்லு நந்தலாலா

ஏனோ அவன் மனம் திரும்ப திரும்ப அந்த கண்ணனிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நான் என் நண்பனுக்கு துரோகம் செய்து விட்டேனா? மதுவை நான் திருமணம் செய்தது சரிதானா?

விமான நிலையம் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் வந்திருந்தார் அவர். அவன் அப்பாவின் நண்பர்.

அவனருகில் நின்றிருந்தாள் மதுவந்தி.

அவன் கையை பற்றி குலுக்கியவர் இதமான குரலில் சொன்னார் 'நீ நல்ல பையன்பா. இனிமே உனக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும். சந்தோஷமா இரு. ஆண்டவன் தான் மதுவை உன்கூட சேர்த்து வைச்சிருக்கான். அவ உனக்காகவே பிறந்த பொண்ணு. ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க. உங்களுக்கு ஒரு குறைவும் வராது.'

அவர் வார்த்தைகள் அவனை என்னமோ செய்ய மெல்ல புன்னகைத்தபடி தன் அப்பாவை பார்த்து கேட்டான் அங்கிள் யாருப்பா?. நான் இதுவரைக்கும் அவரை பார்த்ததே இல்லையே. அவர் பேரென்ன?.

டேய் இவன் என் க்ளோஸ் friendடா. பேரு நவநீதகிருஷ்ணன்.

என்ன தோன்றியதோ மனைவியையும் அழைத்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் பத்ரி.

அவன் அந்த கண்ணனிடம் திரும்ப திரும்ப கேட்ட கேள்விக்கு இந்த நவநீத கிருஷ்ணனிடமிருந்து பதில் கிடைத்து விட்டதை போலே தோன்றியது.

லேசான மனதுடன் விமானம் ஏறி அமெரிக்காவை நோக்கி பறக்க துவங்கினான் பத்ரி.

Manathai Thotta ragangal - 02 - Kathale en kathale

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.