(Reading time: 7 - 14 minutes)

(26)

அவள் உயிரில் நிறைந்தவன் உருகி நேசித்த

அழகு கூந்தலை காணிக்கை ஆக்கினாள்

ஆண்டவனிடம் அவன் உயிருக்கு மடி ஏந்தினாள்.

 

(27)

ஆலய மணி முழங்கி

அருள் வாக்கு தந்தது - மதன் நலம்

ஆனந்தத்தில் திளைத்தாள்

ஆக பொய்க்கவில்லை அவள் மனம்

 

(28)

வயதான சக பயணி மாரடைப்பில் சரிந்து விட

வேற்று நாட்டில் நிறைய உதவிகள் தேவைப்பட

இணைப்பு விமானம் தவற விட்டான்

இக்கட்டில் செய்த நன்மைக்கு உயிரையே பரிசாகப் பெற்றான்

 

(29)

தகவல் கொடுத்தேனே மின்னஞ்சலில்

தெரிவிக்கவே என் சூழ்நிலையும் தாமதமும்

தொலைத் தொடர்ப்பு அற்றுப் போனது புயலில்

தந்து விட்டது சிலநேர தவிப்பும் துயரமும்

 

(30)

மீண்டும் கலை கட்டிய திருமண சடங்குகள்

மகிழ்ச்சியுடன் மங்கள ஒலி மேளங்கள்

தன் ரதியைக் காண விரைந்து சென்றான்

தன்னவள் செய்கை கண்டு திகைத்து நின்றான்

 

(31)

ஓடி வந்து அணைத்துக் கொள்வாளோ !

ஓரப் பார்வையிலே காதல் சொல்வாளோ !

காண விருப்பமில்லை என்று சேதி சொல்லி அனுப்பினாள்

கல்யாணம் நிறுத்த வேண்டும் இது தன் முடிவு என்றாள்

 

(32)

விபத்து என்றதிலிருந்து அவள் செயல்கள் யாவும் வித்தியாசமாய்

விடை தெரியாது தவிக்கிறோம் என பெற்றோர் வருத்தமாய்

 

(33)

அனுமதி தாருங்கள் ஒரே ஒரு முறை பார்க்க மட்டும்

அதற்குப் பிறகு எதுவென்றாலும் எனக்குச் சம்மதம்

 

(34)

இன்றும்,

 செவ்வானப் பூந்தூறல் - அவள்

 சிவந்த கண்களில் நீர்க் கோடுகள்

 

(35)

சூறாவளியாய் நுழைந்தவன் சிலையானான்

சினங்கொண்ட சிங்கம் தாய்ப் பறவையாகிப் போனான்

 

(36)

மலர்கள் உதிர்ந்து போகும் - என்

மனதில் வேரென நிலைத்திருக்கும் நீ

என் அன்பை சந்தேகித்து மறுக்கலாமோ 

எனை பிரிந்து விட நினைக்கலாமோ

 

(37)

உன் நேசத்தை அறியாதவள் அல்ல - என் தவிப்பை 

உன்னிடம் என்னவென்று சொல்ல

உள்ளத்தின் கலக்கங்கள்- கண்ணீர் வடிவம்

உணர்த்தின அவள் அனுபவிக்கும் போராட்டம்

 

(38)

மணமேடையில் கெட்டி மேளம் - எல்லோர்

மனம் நிறைத்(ந்)த திருமணக் கோலம்

உறுதியாய் மறுத்தான் செயற்கை சிகை அலங்காரம்

உன்னதமான இந்நிலை அவனுக்கான உயிர் வரம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.