(Reading time: 7 - 14 minutes)

(39)

வெண்ணிலா முழுமதியாய் வாழ்த்த

வான்முகில் மென் சாரலாய் பூத்தூவ

மண்வாசம் தாங்கி வந்த தென்றல்

மல்லி முல்லைக்கு வழி விட்ட ஜன்னல்

 

(40)

கூந்தல் தான் இல்லையே இப்போது - என்

கணவனுக்கு இன்னும் என்ன ஆராய்ச்சி

காதலுடன் கிண்கிணியாய் நகைத்தாள்

கட்டியவன் மார்பினில் அடைக்கலம் புகுந்தாள்

 

(41)

பாண்டிய மன்னனுக்கு சந்தேகம்

பெண் கூந்தலின் வாசம் இயற்கையா ! செயற்கையா !

பிறந்தது சிவபெருமானுக்கும் கீரனுக்கும் தீரா விவாதம்

 

(42)

அறியவில்லை அவர்கள் - என் ரதியிடம்

சிகையில்லாமலும் கமழும்

"தெய்வீக காதல் மணம்"

 

{ இது என் முதல் கவிக் கதை மற்றும் ஒரு புது முயற்சி. எனக்கு ஊக்கமும், நம்பிக்கையும் கொடுத்த chillzee குழு மற்றும் தோழிகள் அனைவருக்கும் நன்றி... உங்கள் விமர்சனங்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்… சொற்சுவை பொருட்சுவை எதில் குறையிருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் }

 

 (குறுந்தொகைப் பாடல் பிறந்த கதை ….

 

 பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது... பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்று... இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தான்.. இதைக் கேட்ட ஒரு ஏழைப் புலவன் தருமி மதுரையம்பதியாகிய சொக்கநாதரிடம் பரிசு தனக்கே கிடைக்க அருள் புரியுமாறு வேண்டினான். சிவபெருமானும் ஒரு புலவரின் ரூபத்தில் வந்து " கொங்கு தேர் வாழ்க்கை " என்ற இந்தப் பாடலை எழுதிக் கொடுத்து “பாண்டியன் சபையில் சென்று இதைக் கூறி பரிசு பெற்றுக் கொள் “என்று தருமியிடம் சொன்னார்... தருமியும் பாண்டிய மன்னனிடம் சென்று பாடலைப் பாடினான். மன்னனுக்கு சந்தேகம் தெளிவு பெற்று பொற்காசுகள் பரிசளிக்கும் போது நக்கீரர் என்ற தலைமைப் புலவர் பாட்டில் குற்றம் இருக்கிறது என்றார்... தருமி கோவிலில் சென்று இறைவனிடம் முறையிட இறைவனே நேரில் சென்று ,”என் பாட்டில் பிழை சொன்னது யார் “ எனக் கேட்டார்... நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் தீராத விவாதம்.. பெண்ணின் கூந்தலில் இயற்கை மணம் உண்டு என்று இறைவன் சொல்ல அதை மறுத்தார் கீரர்... சிவபெருமான் தன நெற்றிக் கண் காட்டி தான் யாரென்று சொன்ன போதும் " நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என்று மாறாமல் இருந்தார் நக்கீரர்... இறைவன் நெற்றிக் கண் திறக்க கீரர் மீனாக்ஷி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் விழுந்தார்.. பின் இறைவன் இது தமது திருவிளையாடல் என்று சொல்லி தமிழ் பற்று மிக்க நக்கீரரை பாராட்டி அருள் புரிந்தார்... திருவிளையாடல் படத்தில் மிக அருமையான காட்சியாக இது அமைத்திருக்கும்.. ))

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.