(Reading time: 14 - 27 minutes)

பெண் – ப்ரியா

This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"ன்ன ரெடி யா?"

"ம்ம்ம்ம்"

"அய்ய என்னது இது இப்படி மூஞ்சிய தொங்க போட்டு உட்கந்துருக்க? இதுக்காகவா இம்புட்டு ரூவா குடுத்து இந்த இடத்துக்கு என்ன தேடிட்டு வந்த? அதும் இங்க வரைக்கும்?"

Penn

"ம்ம்ம் என..க்கு இதெல்லாம்ம்ம்"

"என்ன?"

"ப..பழக்கமில்ல"

"அதுனால என்ன இப்போ பழகிக்கோ"

உடைகளை களைய ஆயுத்தமனவளிடம் எதையோ தேடி விழி நிமிர்த்தி பார்த்தான் அவன்!!!! ஒன்றும் புரியாமல் புடவை தலைப்பை விலக்காமல் சரி செய்து கொண்டு அவனை ஆராய்ந்தாள் மஞ்சுளா.

செல்வ செழிப்பு அலை அலையாய் அசைந்து மினு மினுத்த கூந்தலில் தொடங்கி அழுக்கு படாமல் பராமரிக்க பட்ட  கால் நகம் வரையில் அப்பட்டமாய் தெரிந்தது!! செல்வ செழிப்பு மட்டுமே!! வேறு எந்த விதமான உணர்ச்சியும் குறிப்பாக சந்தோசத்தின் சாயலில் இருக்கும் எந்த உணர்ச்சியும் இல்லை அங்கு!!!

தன் வயது தான் இருக்கும் போல தோன்றியது!!!

"என்னய்யா பிடிக்கலையா? அப்போ எதுக்கு இங்க வந்த?"

"நிம்மதி தேடி"

அவ்வளவு தான் உலகத்தின் ஒட்டுமொத்த சிரிப்பையும் குத்தகைக்கு எடுத்தது போல சிறிது விட்டாள் மஞ்சு!!

"நீ..நீங்க ஏன் சிரிக்கரிங்க"

"மஞ்சுளா.. மஞ்சு நு கூப்பிடு... நிம்மதியா இங்கயா நல்ல ஆளு போ நீ.. எல்லாரும் சுகத்த தேடி தான வாரானுக, அதுலயும் நாய்ங்க மாதிரி.. ச்சே ச்சே அது எதுக்கு இப்போ, உன் நிம்மதி இதுல இருக்குன்னா ஆகர வேலைய பாக்காம இப்படி அழுத்தமா உட்காந்திருக்க"

"எனக்கு வேண்டிய நிம்மதி வேற!!"  

"என்னது?!"

பதிலேதும் சொல்லாமல் அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டவனை பார்த்து ஆதிர்ந்து வியந்து செயலிழந்து போனவளுக்கு எத்தனையோ உயிர்களை தன் கருவிலேயே அழித்தவளுக்கு மறந்து போன தாய்மை உணர்வு எங்கேயோ இருந்து பொங்கியது.

"என் பேரு வருணன் மஞ்சு, நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த?"

"ய் என்னடி நடக்குது உனக்கும் ராஜீவுக்கும் நடுவுல"

"ஸ்ஸ்ஸ் சுபி ப்ளீஸ் மெதுவா பேசு அம்மா வந்திட போறாங்க"

"அதெல்லாம் வர மடங்க ஆன்ட்டி தூங்கரத பார்த்துட்டு தான் வரேன்"

"ம்ம்ம். அவனுக்கும் எனக்கும் சரியா வராது சுபி"

"ஒ மேடம்க்கு அது மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரியுதுல்ல, அங்க அவன் என்னடான்னா உன்ன எப்படி எல்லாம் ச்சே சொல்லவே கூசுது அப்படி எல்லாம் திட்டிட்டு இருக்கான்"

"ம்ம்ம் தெரியும் என்னடி பண்ண சொல்ற, அவன் அம்மா என்ன பார்த்து பேசி அப்படி அழறாங்க அவன் அப்பா இறந்தது எப்படின்னு தெரிஞ்சும் அவங்க அழுரத பார்த்துட்டு என் காதல் பெருசுன்னு சொல்ல மனசு வரலை"

"அவங்க அப்பா குடிச்சு செத்த அதுக்கு நீயும் உன் காதலும் பலி கிடா ஆகணுமா? சுத்த பேத்தல்"

"ம்ம்ம் கட்டிட்டு வந்தவனும் ஒழுங்கா இல்லாம செத்து போய்ட்டான், பெத்த பிள்ளையும் காப்பத்தமா ஒழுங்கா படிக்காம காதல்னு சுத்துனா அவங்க பாவம் பொண்ண வேற வேசுகிடு என்னடி பண்ணுவாங்க"

"வாட் இஸ் திஸ்  நான்சென்ஸ்? அப்போ உங்க வீட்டுல மட்டும் என்ன ஏற்கனவே ஒரு பொண்ணு குடிகார புருஷன் கூட வாழமுடியாம இருக்கும் போது நீயும்..." கேள்வியாய் தொடங்கியது சிந்தனையால் நின்றது.

"சித்து,, அப்போ நீ...?"

"ஆமா சுபி எங்க அக்கா மாதிரி தானே ராஜீவோட அம்மாவும், அதும் இல்லாம நானும் காதல்ன்னு போயி நின்னா அவ்வளவு தான்"

"இதெல்லாம் முதலே ஏன் தோனல?" கோபமாய் வெட்டியது வார்த்தைகள்.

"அப்போ நிலைமை சகஜமா இருந்தது டீ, வேணும்னு தான் நான் டாக்டர்க்கு படிக்கிற பொண்ணு நீயோ அக்கவுண்ட்ஸ் தான் எப்படி பாத்தாலும் உன்ன விட நல்ல பையனா எனக்கு கிடைப்பன்னு சொல்லி அவனோட தன்மானத்த சீண்டி விட்டேன் இப்போ நான் தப்பானவளா தெரிஞ்சாலும் அவன் கண்டிப்பா முன்னேறி ஒரு நல்ல வழிக்கு வருவான், அண்ட் எப்போ அவன் என்ன கேவலமா பேசினானோ அப்போவே அவன் காதல் செத்துடுச்சு" உணர்சிகள் துடைத்த முகத்தில் உத்வேகம் படிந்த கண்கள்!!

"அப்போ உன் காதல்?"

விரக்தி சிரிப்பு தான் எழுந்தது அவளிடத்தில்.

"அப்போ நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டியா?"

"ம்மி வலிக்குது ரொம்ப"

"ஸ்ஸ்ஸ் ஷான் அழ கூடாது டா கண்ணா நீ குட் பாய் தானே"

"எஸ் மம்மி, ஆனா ரொம்ப முடில"

மனம் நெகிழ்ந்து விட்டது பார்வதிக்கு. எப்போதுமே அவனுக்கு இப்படி தான் காய்ச்சல் ஜுரம் என்று மதத்தில் இரு முறையாவது எதாவது வந்து விடும்..!! அதற்கு தான் தான் காரணமோ என்று எப்போதும் தலை தூக்கும் குற்ற உணர்வு இப்போதும் இருந்தது!!

தன்னால் தான் சராசரி அம்மாக்களை போல தன் பிள்ளையை பார்த்து கொள்ள கூட முடியாமல்!! பிள்ளையை ஏன் புருஷனை கூட,விவாகரத்து வரைக்கும் அல்லவா வந்து நிற்கிறது!!   

அருளிடம் பேச வேண்டும். அதோ வந்து விட்டான். அவன் அருகில் வருவதற்குள்ளாக அழைத்தது கைப்பேசி.

"ஹலோ"

"...."

"ஒ ஓகே எந்த ஏரியா?"

"....."

"என்னது ஸ்கூல் கிட்ஸா"

"....."

"இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன்"

போனை வைத்தவள் கணவனை ஏறிட்டாள். வழக்கமான அதே கோபம். ஷான் அவள் கைகளை இருக்க பற்றி கொண்டு நின்றான்.

"ஷான் கண்ணா டாடி கூட டாக்டர பார்த்துட்டு சமத்தா வீட்டுக்கு போங்க, மம்மி நைட் டின்னருக்கு கண்டிப்பா வரேன்"

அதற்கு மேல் அவன் அவளிடத்தில் நிற்கவில்லை!! அருளின் தோளில் முகம் புதைத்து அவன் கைகளுக்குள் இருந்தான்.

"உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை.. ச்சே"

கிளம்பும் போது கணவன் முனுமுனுத்தது தெளிவாக காதில் விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.