(Reading time: 14 - 27 minutes)

 

சுபியுடன் கீழே வந்தவளின் செல்போன் அலற, எடுத்து பேசியவள் தன் ஸ்கூட்டியில் பறந்தாள்.

'சித்தரஞ்சனி, பெண்கள் நல மருத்துவர்' என்ற போர்டு இருந்த அறைக்குள் சென்றவள் தன் உடையை மாற்றி விட்டு, விரைந்து ஆபரேசன் தியேட்டருக்குள் நுழைந்தாள்.

தன் சிசுவை வெளி தள்ள சொல்லுதற்கு அறியா வழியில் கத்தி கொண்டிருந்தாள் தாய் ஒருத்தி.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், வீரிட்டு அழுத சதையால் மூடிய செல்களின் குவியலை ரத்த கறை படிந்த கைகளுடன் வாரி எடுத்தாள்!!!

மனதில் இருந்த பாரம் அகன்றது போன்ற உணர்வு, காதல் தோல்வி, வாழ்க்கை, ராஜீவ், அவனின் அம்மா, தன் அக்கா, அது இது என்று எதுவும் நினைவில் இல்லை. அந்த பூந்தளிர் மேனி என்ன மாயம் செய்ததோ!!

ஒரு முடிவு செய்தவலாய் வெளி வந்தவள் அங்கிருந்து கிளம்பி தன் மற்றொரு கிளினிக்கிற்கு வந்தாள்.

அது அவளுடைய கிளினிக், அவள் விரும்பி படித்த மனோதத்துவ துறைக்காக அவள் அப்பா வைத்து கொடுத்த கிளினிக்!!!

ஆம் சித்தரஞ்சனி 'பெண்கள் மற்றும் மனோதத்துவ மருத்துவர்'..!!!

வந்திருந்த பேசன்ட்களுக்கு கவுன்சிலிங் முடித்து வீட்டிற்கு கிளம்பிய நேரத்தில் அவசரமாய் வந்தனர் ஒரு தம்பதியர். கூடவே பிரமை பிடித்தவள் போன்ற ஒரு பெண்.

காதல் தோல்வியாம்.. முன்னமே ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தாலம் ஆனால் காப்பாற்றி விட்டனராம். இப்போது மறுபடியும் முயன்றவளை தடுத்து நிறுத்தி யாரோ சிபாரிசின் பெயரில் வந்திருந்தனர்.

அடுத்த இரண்டு மணி நேரம் ஆவலுடன் கழிந்தது ரஞ்சனிக்கு.

முடிவு சாதகமே பெண் தெளிந்திருந்தாள்!! சிறு புன்னகையுடன் விடை பெற்று சென்றாள்!!

அவளுடன் பேசியதில் இன்னும் ஏதோ புரிந்ததை பெற்றோரிடம் மன்னிப்பு கோரி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்ல வேண்டுமென நினைத்து கொண்டு வீடு நோக்கி சென்றாள். 

"சொன்ன நம்புவிய? என் புருஷன் தான் சில வருஷத்துக்கு முன்னால இங்க கூட்டியாந்து விட்டாரு. அப்போ எனக்கு வயசு என்ன இருக்கும் தெரியுமா?"

"ஒரு இருபது"

"ஹஹஹ, பதினாறு!! எனக்கு இப்போ தான் இருபத்திநாலு ஆகுது, என்ன பார்த்த பாதி கிழவி மாதிரி இருக்கேனா? ம்ம்ம் என்ன பண்றது ஒரு நாளைக்கு ரெண்டு கஷ்டமரு அட்டெண்ட் பண்ணலேன்னா அந்த ப்ரோக்கர் நாயி பணம் தர மாட்டான், அதும் இல்லாம எங்க எள்ளுக்கும் ஒரு தலைவி இருக்குது அதும் ஏதாவது பண்ணிடும் அதான் இப்படி ஆயிட்டேன்"

"நீ ரொம்ப பாவம்"

"உன்ன மாதிரி எல்லாரும் இருந்த பரவாலையே, ஆமா நீயென்ன மடியில ஜோரா படுத்துகுனு கதை கேட்கிற"

"எனக்கு அம்மா இல்ல மஞ்சு, சித்தி என்னை ரொம்ப கொடும படுத்துற அதான்.. அப்போ தான் என் ப்ரெண்ட்... என்னை இங்க போக சொல்லி.. அவன் அதிசுருக்கமாக சொன்னான்"

"ம்ம்ம், எல்லாருக்கும் ஒரு கதை இருக்குது, என் புருஷன் அந்த ஆளு ஒரு கேடு கேட்ட நாயி, எப்போ பாத்தாலும் தண்ணி தான், என் அப்பன் அவனும் அப்படி தான்,என் அம்மா காரி அவன் கொடுமை தாங்க முடியாம போயிட்டுது. நானும் ஒரே பொட்ட புள்ள என்னை பண்றதுன்னு தெரியாம நினைப்போ வயசுக்கும் வந்துட்டேன், அவளோ தான் எங்க அப்பனுக்கு சரக்கு வாங்கி குடுத்து தாஜா பண்ணி என்னை கல்யாணம் பண்ணிகிட்டான்..அப்புறம் தான் தெரிஞ்சுது அந்தாளு அம்ம்பலையே இல்லை, அவன் சரியான பொட்டன்னு" பெருமூச்சு ஒன்றை எறிந்தால் மஞ்சுளா.

"அச்சோ அப்புறம்"

"அவன் கூட வாழ முடியல, வெளிய போயி என்ன பண்றதுன்னு தெரியல, அப்போ ஒரு நாள் அவன் பிரெண்டு ஒருத்தன கூடி வந்து என்கிட்ட விட்டுட்டு, அவன் குடுத்த காசுல குடிக்க போய்ட்டான் சண்டாளன், அப்போ ஆரம்பிச்சது தான் இது"

"மஞ்சு நான் ஒன்னு கேட்கவா?"

"இன்னும் என்ன கேட்க போற?"

எழுந்து அமர்ந்தவன், "என்னை கல்யாணம் பண்ணிகரியா?"

கலகலவென சிரித்தாள் மஞ்சுளா. சிரிப்பின் முடிவில் விரக்தி,ஏக்கம்,சோகம், கோபம் என கலவை உணர்வு.

"எனக்கு கல்யாணம் ஆயிடுது!!!"

"என்னது"

"ஆமாம்யா, இங்க வா" என்று அவனை அந்த அறையின் ஜன்னலோரம் அழைத்து சென்றவள் தொடர்ந்தாள்,

" அதோ அந்த வூடு தெரியுதா? என்னது தான், வூடு முன்னாடி உட்காந்து படிக்குதே அதான் என் கொழந்த, பேரு சுவாதி"

"ஆனா எப்படி?"

"ம்ம்ம் இந்த புள்ளயோட அம்மா எவன் கூடவோ ஓடி போயிட்டலாம், அப்போ இதுக்கு பன்னிரண்டு வயசு தான், அவன் அப்பன் ஒரு மொடம், அதான் கை காலு வராது, அவன் கிட்ட எவனோ ஒரு பாவி எத எதையோ சொல்லி இந்த ப்ரோக்கர் பய கிட ஐந்த பொண்ண வித்துட்டான்! அது ஒரே அழுக அப்போ தான் அதுகிட்ட பேசுன இதன் மேட்டருன்னு சொல்லிச்சி பாக்க பாவமா இருந்துச்சி அதான் அவன் அப்பன் கிட்ட பேசி கல்யாணம் பண்ணிட்டு இப்போ அவள படிக்க வைக்கிறேன், அவள ஒரு கலெக்டர் ஆக்கிடுவேன் பாரு, அவளாவுது எங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு ஒரு வலி பண்ணட்டும்"

"நீ ரொம்ப நல்லவ மஞ்சு நீ சம்பாதிக்கிற வலி தான் தப்பு, ஆன் அதுக்கும் இந்த சமூகம் தான் காரணம்.. ம்ம்ம் அத விடு.. உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு.. இந்த என் போன் நம்பர், அப்புறம்  இத செலவுக்கு வெச்சுக்கோ. நான் வரட்டுமா"

"ம்ம்ம் போயிட்டு வாயா. மகராசனா இருப்ப நீ"

"ம.. உன்கிட்ட ஒரு கடைசி கேள்வி"

"என்னய்யா"

"இவ்வளவு பெரிய பையனுக்கு நீ அம்மாவ இருக்க முடியாது தான். இருந்தாலும் அந்த சுவாதிக்கு ஒரு அம்மாவான மாதிரி எனக்கும் அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நிமிஷம் இருப்பியா?"

கண்கள் நிறைந்து விட்டது அந்த பேதைக்கு..

"அம்...மா"

காமம், வயது, ஆண் பெண் கவர்ச்சி தாண்டிய ஒரு அணைப்பில் சிக்கியிருந்தாள்  அவள்!!

அவன் விடைபெற்று சென்ற பின்பு நிமிர்ந்த நடையுடன் வீட்டை அடைந்தாள் மஞ்சுளா!!!

ன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு அவர்களின் மகிழ்ச்சியை கண் குளிர பார்த்தவளுக்கு தன்னம்பிக்கையும், தன் பெற்றோரின் ஆசை மகளாக மறுபடியும் மாறிய சந்தோசமும் அழகு சேர்த்தது ரஞ்சனிக்கு!!      

வீட்டிற்கு செல்லும் போது நிம்மதியுடன் காரில் அமர்ந்திருந்த பார்வதியின் முகத்தில் கர்வமும் பெருமையும் குடியிருக்க, மனதை தாய்மையும் மென்மையும் சூழ்ந்திருந்தது!!!

ன் கூட்டத்தினருடன் சேர்ந்து விட்ட திருப்தியும், தன்னை புறக்கணிக்கும் மூடர்களுக்கும் உதவும் கடவுளின் வெள்ளை உள்ளம் கொண்டுள்ளோம் என்ற நிறைவுமே மகேஸ்வரியின் மனதில் நிழலாடியது!!!

ஊருக்கு மட்டுமே அவர்களும் அவர்களை போன்றோரும் விபச்சாரி, ஆண்களை காதலெனும் பெயரில் ஏமாற்றுபவள், குடும்பத்தை அதிலும் பிள்ளையை கூட சரி வர கவனிக்காத திமிரு பிடித்தவள், அரவாணிகள் இன்னும் பல...

ஆனால் அவர்களின் பார்வைக்கு, அனைத்தையும் தகர்த்து உலகத்தோடு ஒவ்வொரு நாளும் போராடி, தலை நிமிர்ந்து வெற்றி கனியை தட்டி பறித்து கொண்டே ஆர்பாட்டம் இல்லாமல் வளைய வரும் உன்னத திறமை  கொண்ட பெண்!!!!  காயம் ஏற்படுதியவனுக்கும் நல்லதையே வழங்குமாம் நிலம்.. அது போல கொண்டுள்ள தாய்மை உணர்வால், ஆண்களை மிஞ்சும் பெண்மையின் மென்மையும் மேன்மையும் கொண்ட ஒரு பெண்!!!!!     

This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.