(Reading time: 14 - 27 minutes)

 

"வீட்டை விட்டு தொரதித்ட்டாங்க"

"என்னது?!!"

"ஆமாம்"

"சரி விடு, அதுங்க எல்லாம் மனுஷ ஜென்மங்க அப்படி தான் நடந்துக்கும்.. நாம கடவுளோட அவதாரம் நீ பீல் பண்ணாத வா போலாம், நம்ம கூட்டாளிங்கள உனக்கு காமிச்சு தாரேன்"

"ம்ம்ம்ம்"

"உன் பேரு என்ன"

"மகேஷ்"

"இன்னும் இன்னா மகேஷ், மகேஸ்வரின்னு வெச்சுக்க, இல்லன்ன உனக்கு பிடிச்ச மாதிரி திரிஷா,ரம்பான்னு எப்படி வேணாலும் வெச்சுக்க"

உதட்டின் வளைவு சிரிப்பை உணர்த்தியது.

"உன் பேரு என்ன அக்கா"

"என் பேரு சரோஜா, எனக்கு சரோஜா தேவி அம்மான்னா ரொம்ப பிடிக்கும், அவுங்க படம் எல்லாம் பார்த்து பார்த்து தான் இப்படி ஆகிட்டேன்னு என் அப்பன் ஆத்தா கூட ரொம்ப அடிச்சுருகாங்க" பேரு மூச்சு எழுந்தது சரோஜாவிடம்.

"ம்ம் எங்க அம்மா கூட என்னைய அடிச்சுது"

"நீ கவலை படாத கண்ணு அதான் நாங்க இருக்கோம்ல, நம்ம கோஷ்டி ராத்திரிக்கு டேன்ஸ் போடலாம்னு வர சொன்னங்க, அந்த மூட கெடுக்காத, சந்தோசமா வா"

"இருட்ரதுக்குல போய்டலாமா அக்கா"

"ம்ம்ம் போய்டலாம்"

இருவரும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து நின்ற போது இருட்டவே தொடங்கி இருந்தது.ஆள் அரவம் இல்லாத ஏரியா வேறு.

எங்கிருந்தோ வந்த யுவதி ஒருத்தி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றால். பார்க்க மென்பொருள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள் போல தோற்றம்.

தலை முடி முதல் காலின் செருப்பு வரை ஒரு மினுமினுப்பு. சிக்கென உடலை கவ்வியிருந்த ஜீன்ஸ் டி-ஷர்ட்.

இவர்கள் பக்கம் திரும்பியவள் முகத்தில் ஒரு அருவருப்பான பார்வை!!

சற்று நேரத்தில் மூன்று  பைக்கில் வந்த 'குடிமகன்கள்' அவளிடம் வம்பு செய்ய. மெல்ல ஒதுங்கி இவர்கள் பக்கம் நின்றாள்.

என்னதான் பெண்ணாய் மாறி இருந்தாலும் இவர்களும் ஆண்கள் தானே, செய்களில் மட்டும் தானே பெண்மை குடிகொண்டது.. அனால் ஆள் மனம்?!

"வாங்க அக்கா போகலாம், எவ்வளவு திமிர் அந்த பொண்ணுக்கு, அப்படி பார்த்தா இப்போ நம்ம பக்கத்துல வந்து நிக்கறா பாருங்க", மகேஸ்வரி.

சரோஜாவின் முகத்தில் சிந்தனை கோடுகள். அவள் பெண்ணாக மாறி முழுதாய் ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டனவே!! அந்த பெண்மை அவளுக்கு உதவ முன் வந்த போதும் சற்று முன் அவள் பார்த்த அருவருப்பான பார்வை வாழ்வில் முடிந்து போனவை என மறந்த அனைத்தையும் கண் முன் நிழற்படம் போல ஓட விட்டிருந்தது!!

அதனால் அவளும் திரும்பி செல்ல எத்தனித்தாள். அதற்குள்ளாக ஒருவன் அந்த யுவதியை பின்னால் இருந்து கைகளை பிடித்து கொள்ள, ஒருவன் அவள் அங்கங்களை தொட்டு கேவலமாக வர்ணித்தான்!! இன்னொருவன் அவள் வாயை பொத்தியிருந்தான்!!

அவர்கள் கூறியதும்  அவள் மௌனமும்  சந்தேகத்தை தர, மகேஸ்வரியும், சரோஜாவும் யோசிக்கும் முன்னமே, தன் வாயை பொத்தியிருந்த மிருகத்தின் கைகளை கடித்து விட்டு "அம்மா, அக்கா ப்ளீஸ் காப்பாத்துங்க"

என்று கத்தினால் அவள் இவர்களை பார்த்து.

அம்மா!!! அக்கா!!!

அவ்வளவு தான் அடுத்த ஐந்து நிமிடத்தில் உயிர் பிழைத்தால் போதுமென ஓடியிருந்தனர் அந்த தெரு நாய்கள்.  

நன்றி கூறி விட்டு தயங்கிய பார்வையை அவள் கண்களில் தேக்கியிருக்க,தாய்மையுடன் புன்னகைத்து அவளை பஸ்ஸில் ஏத்தி விட்டனர் இருவரும்!!

ஸ்கூலிலிருந்து வந்து கொண்டு இருந்த பள்ளி வேனை, கடத்தல் காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பதாக தான் தகவல் கிடைத்தது போனில். அடுத்த பத்தாவது நிமிடம் சம்பவ இடத்தில இருந்தார் பார்வதி ஐ.பி.எஸ்!!!

ஏற்கனவே அங்கு குழுமியிருந்த கூட்டத்தை அகற்ற ஆணை பிறப்பித்தவர், இன்ஸ்பெக்டர் தந்த உபரி தகவல்களை சேகரித்து கொண்டு ஆராய்ந்தார்.

பணம் தான் அவர்களது குறிக்கோள் என்று தெரிய வர, பணம் குடுக்காமல் குழந்தைகளை எப்படி மீட்பது என கலந்து ஆலோசித்து கொண்டிருந்தார். இருட்ட தொடங்கியது வேறு பதற்றத்தை கொடுத்தது!!

வேனில் இருந்து குழந்தைகளையும் இரு ஆசிரியர்களையும் அருகில் இருந்த ஒரு குடோணிற்கு அந்த கூடத்தின் தலைவன் மாற்ற ஆயத்தமானான்.அதை கைபேசியில் இவர்களிடம் தெரிவித்து, ஏதாவது முட்டாள் தனமாக செய்தால், குழந்தைகளை கொன்று விடுவோம் என எச்சரிக்க.. குழந்தைகள் என்பதால் இவர்களும் பொறுமை காக்க வேண்டியிருந்தது. தனதும் ஒரு தாயுள்ளம் அன்றோ!! 

அவர்கள் வேனில் இருந்த குழந்தைகளிடம் ஏதோ சொல்லி கொண்டிருக்க, அதற்குள் பார்வத்யின் ஆணை படி சில போலீஸ்காரர்கள் அந்த குடோனின் மேல் மட்டத்திற்கு சென்று ஒளிந்து கொண்டனர். கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்தது இது..

அந்த தலைவன் ஒரு சிறுவனை கையில் வைத்து கொண்டு அவன் நெத்தி பொட்டில் 'பிஸ்டலை' வைத்தபடி கீழ இறங்க, முன்னே இரண்டு அடியாட்கள் பின் குழந்தைகள் ஆசிரியர் பின்னே ரெண்டு அடியாட்கள் இறங்கினர். அவர்களிடமும் துப்பாக்கி.

அந்த கயவனின் கையில் இருந்த சிறுவன் கூடத்தில் தாயை பார்த்ததும் அவனிடம் இருந்து திமிறி கொண்டு கீழிறங்க அதை எதிர் பார்க்காதவன் எட்டி பிடிப்பதற்குள், அவன் இரண்டடி தாண்டியிருந்தான்.

கோபம் தலைக்கேற அவன் பிஸ்டலை உயர்த்தி குறி பார்க்க, அந்த பாவியின்  நெத்தி பொட்டில் சரியாக பாய்திருந்தது பார்வதியின் துப்பாக்கியில் இருந்து எழுந்த குண்டு.

பின்னே வந்த அடியாட்களை, கட்டிடதின் மேல் இருந்த காவலாளிகள் சுட்டு வீழ்த்த, முன்னே இருந்த இரண்டு பேர் தலைவனும், சக கூட்டாளிகளும் இறந்த அதிர்ச்சியில் நொடி பொழுது ஸ்தம்பித்து துப்பாக்கியை உயர்துவதற்குள், பார்வதியும் இன்ஸ்பெக்டரும் அவர்களை மேலோகதிற்கு அனுபியிருன்தனர்.

எல்லாம் முடிந்து குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டன.

"என்ன மேடம் எங்கள சுட வேண்டாம்னு சொல்லிடு இப்படி நீங்களே..."

"ஒ.. அந்த சின்ன பையன அவன் சுட எய்ம் பண்ண உடனே பதறி போயிட்டேன் தீனா, என்ன இருந்தாலும் நானும் ஒரு அம்மா இல்லையா?"

என கேட்டு மெல்லியதாய் புன்னகைத்தார்.

அதன் பின் அங்கிருந்த அன்னையர் அவருக்கு ஒவ்வொருவராக நன்றி கூற அவர்களிடத்தில் உரையாடி, அடுத்த பணிகளை மேற்கொண்டார்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.