(Reading time: 10 - 20 minutes)

என் குடும்பம் – சிந்து

This is entry #15 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

காலையில் எழுந்தது முதல் பரபரப்பாக இயங்கி கொண்டுஇருந்தார்   சாவித்திரி .  வீட்டில் உள்ள எல்லா பொருள்களும் சரியான இடத்தில் உள்ளதா , வாசலில் போட்டிருந்த கோலம் அழகாக இருகிறதா , உணவு வகைகள் எல்லாம் தயாரா என்று அனைத்தையும் சரி பார்த்துகொண்டு பம்பரமாக சுத்தி கொண்டுஇருந்தார்.

சுரேஷ் பேப்பர் கப்ஸ் வாங்கிட்டு வர சொன்னனே வாங்கி வெச்சிட்டியா ?

கடைக்கு தான் மா போயிருக்கான் சுரேஷ் என்றான் பிரபு .

En kudumbam

இப்பதான் போனானா  ? நான் நேத்தே வாங்கி வெக்க சொன்னேன்ல?

இல்லமா அண்ணா இப்ப வந்துடுவான் .. நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்றாள்   சுபத்ரா .

எல்லாத்தையும் முன்னாடியே செஞ்சி வெக்கற பழக்கமே கிடையாது என்று பொரிந்து கொண்டிருந்த சாவித்ரியை பார்த்து புன்னகைத்த படியே வந்தாள் பிரியா .

சாவி செல்லம் எதுக்கு இப்ப இவ்ளோ டென்ஷன் அவங்க பத்து மணிக்கு தான

வரபோறாங்க .. இப்பவே எதுக்கு இவ்ளோ பில்ட் அப் என்றாள் குறும்புடன்.

ஹேய் அடி வாங்க போற ஒழுங்கா போய் அக்கா ரெடியானு  பாரு என்று அதட்டினார் சாவித்திரி .

அக்கா எப்பவோ ரெடி மா .. நீங்க பார்த்து ஓகே சொல்லிடீங்கனா அவ சந்தோஷ படுவா..

நாங்கலாம் சொன்ன ஒதுக்க மாட்டா .. சரியான அம்மா பொண்ணு என்று கிண்டல் செய்ய ..

ஹேய்  வாயாடி என்று காதை திருகினாள் சுபத்ரா .

விடு சுபி சும்மா விளையாட்டுக்கு தான சொல்றா என்றபடி உள்ளே வந்தான் சுரேஷ்.

சுபியை பார்த்து ஒழுங்கு காட்டியபடி , சுரேஷ்  இடம் ஓடியவள் பாரு அண்ணா , இந்த சுபி அக்கா எப்ப பாரு என்ன திட்றா என்று குற்ற பத்திரிகை வாசித்தாள் .

அதற்குள் அங்கே வந்த பவித்ரா அவனின் கையில் இருந்த பையை வாங்கியபடி , பிரியா போய் அக்காவ கீழ வர சொல்லு  என்றாள் .

துள்ளி குதித்து பிரியா ஓட இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பா உனக்கு பார்த்து படி ஏறு என்றபடி அந்த அறையினுள் வந்தான் ஆனந்த் .

அம்மா புள்ளையும் வந்தாச்சா சுத்தம் என்று முணுமுணுத்த படியே உள்ளே சென்றாள் பிரியா. மெல்லிய கொலுசொலி சத்தம் வந்த திசையை நோக்கி அனைவரும் பார்க்க, மெல்லிய அலங்காரத்துடன் தேவதை போல வந்தாள் சங்கீதா .

சுபி ,   ஹேய் சங்கீ சூப்பரா இருக்க.. மாப்பிள்ளை பார்த்தா உடனே கல்யாண பண்ணிக்கலாம்னு சொல்ல போறாரு .

ஹேய்!!! அவளதான பொண்ணு பாக்க வராங்க நீ எதுக்கு இப்படி மேக்கப் போட்டு இருக்க என்று பவித்ராவை கிண்டல் செய்தான் பிரபு .

டேய்… உனக்கென்ன பொறாமை என்றபடி செல்லமாக பிரபுவின் தலையில் கொட்டினாள் சுபி .

இவர்கள் இப்படி தங்களுக்குள் கிண்டல் செய்து விளையாடி கொண்டிருந்ததை வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தார் சாவித்திரி .

மௌனமாக இவர்கள் கிண்டலில் முகம் சிவந்த சங்கீதா , சாவித்ரியின் அருகில் சென்று அமர்ந்தாள்.

தயக்கத்துடன் அம்மா என்று அவர் கையை பற்ற , அவளுடைய மனதை அறிந்தவராக நீ எதுக்கும் கவலை படாதடா இந்த தடவை எந்த பிரச்சனையும் நடக்காது .நான் சுதர்சன் சார் கிட்ட இந்த தடவ எல்லாத்தையும் தெளிவா பேசி அவங்களுக்கு சம்மதம்னா தான் கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்.

எந்த பிரச்சனையும் நடக்காது என்ற வாக்கியத்தை கேட்ட உடன் அங்கே இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணமல் போனது .

ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவானது .எல்லார் மனதிலும் இது வரை பட்ட காயங்கள் , வலிகள் என அனைத்தும் புயலாய் அடிக்க துவங்கியது .

அதுவும் சங்கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து நடந்த சண்டைகள் , வேதனைகள் என நினைத்து மனம் துவண்டது .

அனைவரின் கண்களிலும் கண்ணீர் கசிய, சாவித்ரியின் கழுத்தை கட்டி கொண்டு அவர் அருகில் அமர்ந்தாள் பவித்ரா .

பிரியா ஒரு மடியிலும் , பிரபு இன்னொரு மடியிலும் தலை வைத்து படுத்து கொண்டார்கள்.

சில நிமிடங்கள் மௌனம் நிலவியது . முதலில் சுதாரித்த ஆனந்த் , ஹப்பா…….இப்ப தான் இந்த  வீடே அமைதியா அழகா இருக்கு . எல்லா வாயடிகளும் பேசாம இருகாங்களே என்று பேச்சை துவக்க ,

என்ன ஒரு அதிசியம் நம்ம சாப்பாட்டு ராமன் சுரேஷ் கூட இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் சாப்பிடாம இருக்கானே என்று சுபி தொடர

ஆமாம் ஆமாம் அவன் பவியோட மேக்கப்ப பார்த்து பயந்து போய் இருக்கான் அதான் பசிக்கல  என்று சுரேஷ் கிண்டல் செய்ய

ஹேய் என்று அவனை துரத்தி கொண்டு பவி ஓட , அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் .

சாவித்ரியின் முகம் பார்த்த பிரியா , அம்மா நீங்க கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று அவர் கன்னத்தில் முத்தமிட , அதை பார்த்த சங்கீதா இப்ப யாரு அம்மா பொண்ணு என்று அவளை பார்த்து ஒழுங்கு காட்டினாள் .

மேடம் என்ற குரலில் அனைவரும் வாசலை நோக்கி பாக்க அங்கு சுதர்சன் நின்று கொண்டு இருந்தார் . உள்ள வாங்க சார் என்று அவரை வரவேற்ற படி சாவித்திரி செல்ல , மற்ற பெண்கள் உள்ளே சென்றார்கள்.

மாப்பிள்ளை வீட்டு காரங்க பக்கதுல வந்துட்டாங்க இன்னும் பத்து நிமஷதுல வந்துடுவாங்க என்றபடி உள்ளே வந்தார்.இந்த தடவை எல்லாம் கரெக்ட்டா நடக்கும்ல  சார் என்று ஒரு விதமான குரலில் அவர் சட்டையை சரி செய்தபடி கேட்ட பிரபுவை பார்த்து ,

பிரபு என்ன இது பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம ,சட்டையிலிருந்து கைய எடு என்று ஆணை  இட சாவித்ரியின் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் நீங்க  குடுத்து வெச்சவங்க மேடம் என்றார் .

தற்குள் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க அனைவரும் வாசலை நோக்கி சென்றார்கள் .

முன் இருக்கையிலிருந்து ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் இறங்க , பின்  இருக்கையிலிருந்து நாற்பத்தைந்து வயதை உடைய ஒரு பெண்ணும், நாற்பது வயதை ஒத்த ஒரு பெண்ணும் இறங்கினர் அதை தொடர்ந்து முப்பது வயது உள்ள ஒருவன் டிப்டாப் ஆன உடையோடு இறங்கினான் . அனைவரையும் வரவேற்று அமரும் படி உபசரித்தார் சாவித்திரி .

இவர்கள் வந்த சத்தத்தை கேட்ட உடன்  பதட்டம் ஆன சங்கீதாவின் கைகளை ஆதரவோடு பற்றினாள் பவித்ரா .

சுதர்சன் அறிமுக படலத்தை தொடர்தார்.

இவர் தான் பையனோட அப்பா கிருஷ்ணன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.. இவங்க அம்மா நீலவேணி இல்லத்தரசி ,இது பையனோட அத்தை சாரதா  மதுரையில இருகாங்க இப்ப பொண்ணு பாக்கறதுக்காக வந்து இருகாங்க . இது தான் மாப்பிள்ளை விஜய்  , பெரிய மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜரா இருக்கார்.

அனைவரையும் பார்த்து புன்னைகையுடன் வணக்கம் சொன்னார் சாவித்திரி . பார்த்த உடனே நல்ல அபிப்ராயம் வருவது போல அமர்ந்து இருந்த விஜயை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது .

நீங்க மேனேஜரா இருக்கீங்களா என்று புன்னகையுடன் நீலவேணி கேட்க ஆமாம் என்று தலை அசைதவரை எடை போடுவதை போல பார்த்த சாராதவை பார்க்க கோபம் பொங்கியது பிரபுவிற்குள்.

இவங்களா யாரு என்பதை போல சாரதா கேள்வியாய் பார்க்க, சுதர்சனே தொடர்தார். சாவித்ரியின் இடது புறத்தில் இருந்தவனை காட்டி இது ஆனந்த் ஆர் .கே  இண்டஸ்ட்ரீஸ்ல சூபர்வைசரா இருக்கார்,   வலது புறத்தில் முதலில் நின்று இருந்தவனை சிவில் எஞ்சினீர்  பிரபு எனவும் , அடுத்து சுரேஷ் குரூப் 2 எக்ஸாம்க்கு தயார் பண்ணிட்டு இருக்கார் என அறிமுக படலத்தை முடித்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.