(Reading time: 10 - 19 minutes)

அன்புள்ள ஜீவனே – சஹானி

This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் நடுவில் அமர்ந்திருந்தால் ஏற்படும் சந்தோஷத்திறகு அளவே இல்லை. ஆனால், தனக்கும் அந்த சந்தோஷத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இலக்கே இல்லாமல் வெறித்து கொண்டிருந்தாள் ஆனந்தி.

தன் தோளை யாரோ தொடும் உணர்வு தோன்ற திரும்பியவளின் முன் கனிவே உருவாய் அமர்ந்திருந்தார்  நந்த கோபால் . என்னமா, இங்க வந்து உக்காந்து இருக்க, என்றார் அதே கனிவோடு. 

அப்பா, இன்னக்கி  ஜுன் 16 பா என்றாள் சுரத்தே இல்லாமல். 

Anbulla jeevane

அது அவருக்கும் தெரிந்திருந்ததால் தான் அவளை தேடி இங்கு வந்ததே. அவள் மனது சரியில்லாத சமயம் அவள் தேர்ந்தெடுப்பது இந்த இடத்தை தான்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜுன் 17ம் தேதி தான் அவள் இங்கு வந்ததே தன் மூன்று வயது மகன் விஜயுடன். பெற்றோர்களற்ற குழந்தைகள். பிள்ளைகளால் கை விடப்பட்ட முதியோர்கள் மேலும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, மருத்துவ வசதி இவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஓர் இல்லம். "இன்பம்"   என்ற பெயர் தாங்கிய பல்வேறு மனித பறவைகளின் சரணாலயம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இவள், பட்டு புடவை யும் ,நெற்றியில் குங்குமமும் ,கலுத்தில் மாங்கல்யம் என்று கண்ணுக்கினிய சுமங்கலியாய் காட்சியளித்தவள் , மறுநாள் கணவணை இழந்தவளாய் கண்டவர் மனம் பதறி போய் என்னம்மா, என்ன இந்த கோலம்?  என்று பதறிபோய் விசாரிக்க , அந்த வார்த்தையே போதும் என்பது போல் ஓடி சென்று அவரை கட்டி கொண்டவள், "அப்பா " என்று அரற்றினாள். அவளை ஆதாரவாய் தட்டி கொடுத்தவருக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

நேற்று இவளின் கணவன் ஜீவா, குடும்ப சகிதம் தன் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடும் பொருட்டு இங்கு வந்திருந்தான்.  அப்படியொரு பொருத்தம் பொருந்திய ஆனந்தி-ஜீவா தம்பதியர்மேல் தன் கண்ணே பட்டுவிட்டது போல் ஒரே நாளில் அனைத்தும் தலைகீழானதே,

என்ற கவலையில் அவர் மூழ்கியிருக்க அவரின் பின்புறம் ஒலித்த குரல் அவரின் சிந்தனையை கலைத்தது.

அய்யா, நான் வாணி மருத்துவ துறையில் இருக்கேன். இவ என்னோட ஃப்ரண்ட் ஆனந்தி என்று தன்னையும் தன் தோழியையும் அறிமுகபடுத்தி கொண்டாள். 

வணக்கம் வாங்க மா., ஆனந்தியை எனக்கு முன்னமே தெரியும்  என்று கூற வாணியின் நெற்றியில் முடிச்சுகள் விழுவதை கவனித்தவர், அதை தீர்க்கும் பொருட்டு ,

ஜீவா இங்க வளர்ந் பையன் தான். அதோட அவன் இந்த இடத்துக்கு நிறைய உதவி செய்துருக்கான் என்றும் சேர்த்து கூற அவளுக்கு இப்போது புரிந்தது. ஆனந்தி ஏன் தன்னோடு வர மறுத்தாள் என்பது.

தன் கணவன் வாழ்ந்த இந்த சூழலில், தன் கணவனின் நினைவுகளில் அவள் விஜயை வளர்க்க விரும்புகிறாள் என்பது தான் அது.

ரொம்ப சந்தோஷம் சார், நீங்க தப்பா  எடுத்துக்கலைனா எனக்கு ஒரு உதவி,.,.,...என்று இழுத்தவளிடம,

என்னம்மா இது உதவி அது இதுனுட்டு சொல்லுமா என்னால முடிஞ்சா கட்டாயம் செய்றேன். என்றவரிடம் , அவளுக்கு இங்க இருக்கறதுல தான் நிம்மதி சோ இங்கயே அவளுக்கு எதாவது வேலை ஏற்பாடு பண்ணி கொடுத்தா ரொம்ப சந்தோஷமாய் இருக்கும.

நிச்சயமா, ஆனா இங்க சம்பளம்.... என்றவர் என்ன கூற வருகிறார் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தி, இல்லை எனக்கு இப்போ தேவை பண உதவி இல்ல அப்பா மனசுக்கு ஓய்வு நிச்சயம் அது எனக்கு இங்கதான் கிடைக்கும் என்று பட்டென கூறி விட்டாள்.

மெல்லிய புன்னகையை சிந்தியவர், ஜீவா கூட இப்டி தான் தனக்கு சரினு படுறதை பட்டுனு கூறிவிடுவான் என்று எதோ எண்ணதுடனே கூறியவர் சட்டென ஆனந்தியை பார்க்க முதலில் சுருங்கிய முகம் மீண்டும் பொலிவு பெற்றதை கண்டவருக்கு மகிழவா? இல்லை வருந்தவா? என்று தெரிய வில்லை.

இங்கு இருப்பதனால் அவளுக்கு ஜீவாவின் நினைவு அதிகமாகுமே தவிர குறையாதே என்று அனைவரும் எவ்வளவோ கூறியும் அவள் மறுப்பே தெரிவித்தாள். காரணமும் அதே தான், அவளுக்கு இங்கு திரும்பும் திசையெங்கும் அவளின் ஜீவாவே தெரிவது போன்றொரு நினைவு.அதோ அந்த ஊஞ்சலில் தான்என் ஜீவா ஆடினானோ, இனி விஜயும் இங்கு ஆடுவான். என் ஜீவாவின் வாழ்வு விஜிக்கும் கிடைக்கும் என்றே நம்பினாள்.

தன்னையும் அறியாமல் தன் கண்கள் சிந்திய கண்ணீரை துடைத்த படி நினைவலைகளில் இருந்து நிகழ்வலைக்கு மீண்டார் நந்தன்.

நாட்கள்  உருண்டோட, 

இரண்டு  வருடங்கள் சென்றதே  தெரியவில்லை ஆனந்திக்கு . இந் கால கட்டத்தில் தன்னை தவறான நோக்கில் காணும் ஆண்களுக்கு தகுந்த முறையில் பதிலும் கொடுத்த விடுவாள்.   இதோ தன் மகன் பள்ளி சென்று கொண்டிருக்கிறான். இங்கேயே  தான் அவன் படிப்பதும் . வாணி தன் செலவில்  படிக்க வைப்பதாக கூறியதையும் மறுத்து விட்டாள் .

தன்  கணவனின் இறப்பிற்கு கிடைத்த இன்சுரன்ஸ் தொகையில் கனிசமான தொகையை  விஜய் பெயரிலும்  மீத தொகையை இன்பம் இல்லத்திற்கும் கொடுத்து விட்டாள். 

தன் கணவனின் பணத்தில் அவர்கள் பெற்ற மகனும்  பெறாத மக்களும் கல்வி  கற்க வேண்டும் என்ற எண்ணத்தில். 

அப்பா, நானும் விஜயும் வாணி வீட்டுக்கு போயிட்டு வரோம் என்று நந்த கோபாலிடம் கூறியவள், அடுத்த சில நேரதில் அவள் வீட்டில் இருந்தாள்.

வாம்மா,  ஆனந்தி என்று இன்முகமாக வரவேற்றார்  கண்மணி  வாணியின்  மாமியார் .ஆனந்தியை பற்றி நன்கு அறிந்தவர்.

இந்த இரண்டு வருடங்களில்

அவரும் இவளை மறு கல்யாணத்திற்கு வற்புறுத்தியும் எந்த. பதிலும் இல்லை இவளிடத்தில் ஜீவா  இன்னொருவக்கு இமில்லை என்பதை தவிர

அம்மா, எப்டி இருக்கீங்க என்று பவ்யமாய் விசாரித்ததவளுக்கு ,நல்ல இருக்கேன்மா. வாணி இவ்ளோ நேரம் உன்ன தான் பாத்துட்டு இருந்தா, இப்பொதான் எதோ போன் வந்துச்சுனு உள்ள போனா நீ போய் பாரு . என்று அவளை அனுப்பி விட்டு விஜயையும், வாணியின் மகள் ப்ரியாவையும் தோட்டத்து பக்கம் அழைத்து சென்றார். 

வாடியம்மா, இப்போ தான் உனக்கு என் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? என்று கோபமாகவே வரவேற்றாள் வாணி.

அடியே, வீட்டுக்கு வர விருந்தாளிய வரவேற்கற லட்சணமா இது -ஆனந்தி

அது விருந்தாளிகல உன்ன இல்ல என்று கோபமாக கூறினாலும்  அதன் மெய்பொருள் புரிந்தவளுக்கு புன்னகையே வந்தது. சிலநேரம் பேச்சு பொதுப்படையாகவே தொடர்ந்தது தோழிகளிடத்தில்.

விஜி, அபிப்பா எனக்கு நெய்ய சாக்கியும் , டால்ஸும் வாங்கி தந்தாங்களே.,வா காட்றேன். என்று தன் தந்தை அபினவின்பெருமையை வழி நெடுக பேசிக்கொண்டே சென்றவள் அவனுக்கும் சில சாக்கீஸ் கொடுத்து விட்டு மீண்டும் பழைய பல்லவியை பாட தொடங்கினாள். (அதாங்க, அபினவோட பெருமையை, பொதுவா கேர்ள்ஸுக்கு டாடி னாலே அதிக பிரியம். அதுலயும் பிடிச்சதலாம் வாங்கி கொடுத்தா பிரியாவோட பில்டப் பத்தி கேக்கவா வேணும்) 

ஆனால், அவளின் பேச்சை கேட்காமல் விருட்டென ஓடி விட்டான் விஜய்.

டேய் நில்லுடா என்று கத்தி கொண்டே பின்னோடி வந்தாள் ப்ரியா.

அம்மாமாமாமாமாமாமா, என்று தன் தாயை கட்டி கொண்ட விஜய் அபிப்பா, பியாக்கு சாக்கீ, பார்பி, ஏரோப்ளேன் வாங்கி கொடுத்துருக்காங்க நாமளும் வீட்டுக்கு போய் ஜீவாப்பாட்ட இதுலாம் வாங்கி கொடுத்து விட சொல்வோமா -என்று அவன் கூற 

ஆனந்தி அதில்ச்சியிலும் வாணி உச்ச கட்ட அதிர்ச்சியிலும் நின்றனர்(வாணிக்கு ஏன் இவ்ளோ பெரிய அதிர்ச்சினுஅப்புறம் பார்போம்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.