(Reading time: 9 - 17 minutes)

ப்ரியமுடன் – மனோ ரமேஷ்

 

This is entry #13 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

ஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி

அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி

(உங்க அண்ணி பேரு அஞ்சலிகறதுக்காக நீங்களே இந்த ரிங்டோன் வெச்சா உங்க அண்ணா என்ன வெக்கறது பாவம்).

‘குட்மார்னிங் அண்ணி என்ன காலையிலேயே போன் பண்ணிருக்கீங்க’.

‘காலையிலேயேவா இன்னும் கொஞ்ச நேரத்துல மத்தியானமே ஆகிடும் ப்ரியா’.

Priyamudan

அப்படியானு சொல்லி போன் கட்பண்ணதும் டைம் பார்த்த மணி 10.

‘டேய் ராஸ்கல் எழுப்பிவிட வேண்டியதுதானே இவ்ளோ நேரம் ஆகுதில்ல’ (என்ன மரியாதையை என்ன மரியாதையை).

‘இன்னிக்கு சண்டே தானே அதான் எழுப்பல அதுக்கு என்ன இப்போ’ (சூப்பர்)

‘எல்லாத்துக்கு பதில் பேசு’.

அப்படின்னு பாராட்டிட்டு நம்ம சரண் குடுத்த டீ குடிச்சிட்டு குளிக்க போயாச்சு நம்ம ப்ரியா. ஷவர் போட்டு இவங்க இன்னொரு சண்டேக்கு போய்ட்டாங்க வாங்க நம்மளும் போவோம். நம்ம ஹீரோவும் அப்படியே அதே சண்டேக்கு போயிருப்பாரே.

ண்ணி இப்போ எதுக்கு இந்த கல்யாணவேலை’ (நம்ம ப்ரியா தான்)

‘நீதானே படிச்சு முடிக்கற வரை வெயிட் பண்ண சொன்ன எக்ஸாம் முடிசிடுச்சே அதான் மாப்பிளை பாக்க ஆரம்பிச்சிட்டோம்’.

 அதுக்குனு இவ்ளோ சீக்கரமாவா, டூ மச்’.

 ‘இப்போ உனக்கு என்ன பிரச்சனை ப்ரியா?’.

   அதான் நானும் கேக்கறேன். இப்போவே லைப் எந்த பிரச்சனையும் இல்லாம நல்லா தானே இருக்கு, எதுக்கு புதுசா ஒரு பிரச்சனையை ஆரம்பிக்கணும்.’

 ‘ஹே கல்யாணம் ஒரு பிரச்சனையா. என்னை, அத்தைய எல்லாம் பார்த்தா அப்படியா இருக்கு.’

 ‘இல்லைதான்..... ஆனா நான் உங்களை மாதிரி எல்லாம் இல்லையே.’

‘நீ எதுக்கும் மாப்பிள்ள போட்டோ பாரு, அவர்ட்ட பேசி கூட பாரு’

‘சூப்பர். இது நல்ல ஐடியா, எனக்கு போட்டோ வேணாம், அவன் நம்பர் மட்டும் கொடுங்க’

நீ பேசறத பாத்தா தப்பா இருக்கே.’

‘அதெல்லாம் ஒன்னும் இல்ல கொடுங்க’

‘ஹே, ரொம்ப மெரட்டிறாத அவரு பாவம்’ (நம்ம ப்ரியாவின் பாசமலர் 'அருண்')

‘இவ்ளோ நேரம் நடந்த சண்டைய வேடிக்க பார்த்துட்டு, இப்போ அக்கறை பொங்கிவழியுது, அண்ணி அதனால நீங்க என் கட்சி தான் புரியுதா.’

‘நீ மொதல்ல பேசு போ.’

ம்ம ப்ரியா போன் பண்ண நேரம் நம்ம ஹீரோ நம்பர் பிஸி. அப்படி என்ன பேசிட்டு இருக்காரு.

 என் தவறை நீ மறைத்தாய்

எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்

உன் தோள்கள் ஏணியை போல்

எகிறி மிதித்தேன் தாங்கினாய்

 ‘சொல்லுங்க டாடி, என்ன விஷயம்.’

 ‘ஏன்டா, விஷயம் இருந்தாதான் சார்க்கு போன் பண்ணணுமோ?’

 ‘ச்சே ச்சே,ஆனா இன்னிக்கு ஏதோ விஷயம் இருக்கே அது என்ன! (அறிவு)’

‘உன் மெயில்க்கு ஒரு பொண்ணு போட்டோ details அனுப்பி இருக்கேன், நானும் உங்க அம்மாவும் உனக்கு பார்த்த பொண்ணுடானு’,

அவர் சொல்லி முடிக்கல இங்க நம்ம ஹீரோ பொரிய ஆரம்பிச்சாச்சு.

‘என்னது பொண்ணு………. பாத்துட்டீங்கலா, நீ யாரை சொல்றியோ அவ தான் மருமகனு சொன்னிங்க, இதென்ன போங்காட்டம்.’

‘அதுக்கு நீ இந்நேரம் பொண்ணு பாத்துஇருக்கணும்.’

‘அப்படி எல்லாம் அவசரமா லவ் பண்ண முடியாது டாடி.’

‘அப்போ பொறுமையா இந்த பொண்ண கல்யாணம் பண்ணி, லவ் பண்ணு.’

என்ன கவுன்ட்டர் குடுக்கலாம்னு சரண் யோசிக்கற கேப்ல போன் நம்ம மீனாட்சி அம்மா கைக்கு போயாச்சு.

‘டேய் ஒன்னு நீ கல்யாணம் பண்ணு, இல்ல என்கிட்ட பேசறத நிறுத்திடு’

‘அம்மா என்னக்கு இப்போ 26 தானே ஆகுது, ஏன் இவ்ளோ அவசரம்?’

‘அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ இப்போ போட்டோ பாரு அவ்வளோதான் சொல்லுவேன்.

இதுக்கு மேல டாடி கிட்டயும் செல்லம் கொஞ்ச ட்ரை பண்ணாத போன வைன்னு’      

 சொல்லிட்டு போன வெச்சிட்டாங்க. எப்போவும் அவங்க வீட்ல நடக்கறதுதான் இது. அப்பா செல்லம் குடுப்பாரு, அம்மா திட்டுவாங்க (அவன் முன்னாடி மட்டும்). ஒரே பையன், சோ செல்லம் கொடுக்காம வளர்க்க முடியாது. ஆனா கொடுக்கற செல்லத்தால கெட்டுபோகாம இருக்கத்தான் இந்த ட்ரிக். திருச்சில எங்க இருந்து பார்த்தாலும் எப்படி மலைகோட்டை தெரியுதோ அப்படி அதே திருச்சில இருக்க ப்ரியசரண் என்ன பண்ண ட்ரை பண்ணாலும் அவங்க அம்மாக்கு தெரியும். இப்போ வேற வழியே இல்லை அந்த பொண்ணு போட்டோ பார்த்துதான் ஆகணும்.

ங்க சரண் பார்க்கற profile ப்ரியா வோடது, ப்ரியா பாக்கறது சரணோடாது. ப்ரியதர்ஷினி M.Sc Psycohology (சூப்பர்,நல்லா கொலப்புவானு நெனைக்கறேன்)                        

ப்ரியசரண் B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் (சுத்தம், மனுசங்களே தெரியாம கோடிங் மட்டும் தெரிஞ்சவனா இருப்பானோ​)

 ‘ப்ரியா பேசிட்டியா’

‘இல்ல அண்ணி, அந்த என்ஜினீர் நம்பர் பிஸி’

‘அப்போ Details பார்த்தியா’

‘பாத்தேன், பாத்தேன்’

‘இப்போ என்ன பிரச்சன உனக்கு சொல்லு’

‘இல்ல அண்ணி, இந்த லைப்ஸ்டைல்கே பழகிட்டனா, வேற மாதிரி யோசிக்க தோணல அதான்’

‘எல்லாருமே அப்படித்தானே ப்ரியா ஆரம்பிக்கறாங்க’

 இப்படி பொறுப்பான அண்ணியா ஏதேதோ அட்வைஸ் பண்ணி ஒருவழியா ப்ரியாவ கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சிட்டாங்க அஞ்சலி (இந்த பேச்சுவார்த்தைல ப்ரியா பேசுன நெறைய விஷயத்த போகபோக சொல்றேன்)

 இப்படி எல்லாம் ரெண்டு பேர் வீட்லயும் அவசரமா கல்யாணம் பண்ண காரணம் என்னன்னா சும்மா 2 பேர் ஜாதகத்தையும் பார்த்த ஜோசியர் இப்படி ஒரு மேட் ஈச் அதர் ஜோடிய பார்க்கவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதான் இந்த திடிர் கல்யாணம். சம்மந்தபட்ட 2 பேரதவிர மத்த எல்லாருக்கும் சந்தோசமா கல்யாணம் முடிஞ்சது.

கல்யாணத்துக்கு அப்புறம் தான், நீ ஏன் எனக்கு போன் பண்ணனு? ஹீரோ கேட்க இவ்ளோ லேட்டா கேட்டானேனு கோபத்துல கல்யாணத்த நிறுத்த சொல்லத்தான் பண்ணேனு, ப்ரியா சொல்லி, நான் கூட என் அம்மா அப்பாக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சரண் சொல்ல ஆளுக்கு ஒரு பக்கம் ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டே தூங்க போயாச்சு.

  2 நாள்ல சரண் ஆபீஸ் கெளம்பியாச்சு, போகும்போது 'உனக்கு போர் அடிச்சா உங்க அண்ணி வீட்டுக்கு வேணா போயிட்டுவானு' சொன்னதும் இங்க ப்ரியா மைண்ட்(தீடிர்னு உங்கள பார்க்கணும் தோணினா அவன்கிட்ட கேட்டு இல்ல வரணும்நு அண்ணி கிட்ட சொன்னது எதிரொலிக்க ஆரம்பிச்சிடுச்சு இங்க இருந்த () குள் இருக்கறது ப்ரியா மைண்ட் வாய்ஸ் ஓகே).

 இப்போ சரண் மேல இருக்க கோபத்துல போகாதன்னு சொல்லி இருந்தா, உடனே போயிருப்பா அவனா போக சொல்லிட்டானா, அதனால வீட்ட சுத்தி பார்க்க ஆரம்பிச்சாச்சு. ஒரு ரூம் முழுக்க அவ லைப்ரரிய கொண்டு வந்து வெச்ச மாதிரி புக்ஸ். ஒ.. இவன் கோடிங் மட்டும் இல்லாம வேற நிறையவும் பண்ணுவான் போலன்னு யோசிச்சிட்டு, டின்னெர் சமைக்க ஆரம்பிச்சா, தோசை சரியாய் வரத்துக்குள்ள, மறுபடியும் சரண் மேல கோபம் வந்ததுதான் மிச்சம். இவன் மட்டும் கல்யாணத்த நிறுத்தி இருந்தா, நான் இப்படி கஷ்ட படவேண்டாமில்லனு. ஆபீஸ்ல இருந்து வரும் போதே நம்ம சரண் டின்னெர் வாங்கிட்டு வந்தாச்சு (என்ன நம்பிக்கை).

‘தர்ஷினி நான் ஆல்ரெடி சமைச்சோ இல்லேன்னா வேற எப்படியவதோ சாப்பாடு பிரச்சனைய சரிபண்ணிகிட்டவன்தான். அதுக்கெல்லாம் நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத.

(எனக்கு தெரிஞ்ச ABCD சமையலை வெச்சு எப்படி சமாளிப்பேன்).

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.