(Reading time: 20 - 40 minutes)

இதுவும் ஒரு கனவு – லோகேஷ்

This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

கே சார்...சூப்பரா கிட்டார வாசிச்சீங்க ...இதேமாதிரி கஷூவலா வாசீங்க. இப்ப நாம டிவி ஷோ ஆரம்பிகலாம்ல சார்?” என்று அந்த டிவி ஸ்டேஷன் பணியாள் ஒருவன் அந்த பிரபலமான கிட்டார் வாசிப்பாளர் சந்தோஷ்க்கு ஊக்கம் குடுத்துக் கொண்டிருந்தான்.

“ஓகே...ஆரம்பிக்கலாம்...ஐ ஹம் ரெடி “ என்று சந்தோஷ் தன் கையில் அந்த கிட்டாரை தயாராக வைத்துக் கொண்டான். அந்த பணியாள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனான். அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியை நடத்த

இருக்கும் அத்தனை பணியாளர்களும் அந்த ஸ்டுடியோவில்  கேமராவின் பின் தயாராக நின்றிருந்தனர். கேமராவை பிடிப்பவரும் பக்கத்தில் நிற்கும் இயக்குனரும் சைகை செய்தவுடன் அந்த இடம் அமைதியானது. விளக்குகள் அணைந்து நிகழ்ச்சி ஆரம்பமானது. சந்தோஷ் கிட்டாரை பிடித்து கண்களை மூடி வாசிக்க ஆரம்பித்தான். மெல்லிய இசை எழுந்தது. அந்த மெல்லிய இசையை கவனிக்க ஆரம்பிக்கும்போதே திடிரென சந்தோஷின் கை தடுமாதிரி கிட்டாரை விட்டது.

ithuvum oru kanavu

“கட்... கவனம் சார்....யோவ்  சுந்தர் பொய் என்னனு பாரு....லைட்ஸ் ஆன்” என்று இயக்குனர் வெறுப்புடன் கத்தினார். அந்த பணியாள் சுந்தர் மீண்டும் சந்தோஷ் பக்கம் வந்து பேசினான்.

“சார்...நீங்க கொஞ்சம் பதட்டமாகுறீங்க....எதையும் நினைச்சு பயப்படமா தைரியமா வாசீங்க சார்” – சுந்தர்.அந்த கிட்டரை சந்தோஷிடம் எடுத்து கொடுத்தான்.

“ஓகே ஓகே “ என்று சந்தோஷ் கூறிக்கொண்டே தன் முகத்தை கைகுட்டையில் துடைத்தபடி.

மீண்டும் சுந்தர் அங்கிருந்து விலக மீண்டும் நிகழ்ச்சியை எடுக்க அனைவரும் தயாராகினர். சந்தோஷ் இம்முறை எந்த  பதட்டம் இல்லாமல் கிடாரை வாசிக்க ஆரம்பித்தான்.

“கட்....யோவ் சுந்தர் போய் சொல்லுயா” என்று மீண்டும் இயக்குனர் கத்தினார்.

சுந்தர் அங்கே ஓடிவந்து சந்தோஷிடம் மீண்டும் பேசினான்.

“சார் நீங்க இன்னும் பதட்டதோட இருக்கீங்க சார்...உங்க முகம் ரிலாக்ஸா தெரில....ட்ரை பண்ணுங்க சார்” என்று சுந்தர் கெஞ்சினான்.

“இல்ல நான் ஒழுங்கா தான பண்ணேன்?....ஓகே ஓகே ...ஒன் மோர் ட்ரை பண்ணலாம்....” என்று சிறிய வெறுப்போடு சந்தோஷ் சுந்தரிடம் கூறி அவனை அனுப்ப மீண்டும் நிகழ்ச்சி வேலைகள் ஆரம்பித்தது. சந்தோஷ்

இம்முறை முழு தைரியத்தோடு கிட்டாரை வாசித்தான். அவனுக்கு சிறிய பதட்டமும் இல்லை.

“கட்....சுந்தர்....உனக்கு ஒழுங்கா சொல்ல தெரியாதா?,...போய் அவர்கிட்ட இன்னும் நல்லா எடுத்து சொல்லு....லைட்ஸ் ஆப்” என்று இயக்குனர் பயங்கரமாக கத்தினார்  சுந்தர் மீண்டும் சந்தோஷிடம் வந்து பேசினான்.

“சார் நீங்க இன்னும் பதட்டதோட தான் இருக்கீங்க சார்” என்று சற்று வெறுப்போடு சுந்தர் கூற சந்தோஷ்க்கு உடனே கோவம் வந்தது.

“என்ன விளையாடுறீங்களா?...நான் ஒழுங்கா தான பண்ணேன்?...மறுபடியும் அதையே சொல்றீங்க?...நான் ஒன்னும் புதுசா ஷோ பண்றவன் இல்ல...இது மாதிரி என்பது ஷோ பண்ணிருக்கேன்....” என்று சந்தோஷ் கத்தினான்.

“என்ன சார் பண்றீங்க?...ஒழுங்காவே பண்ண மாட்றீங்க?...அப்புறம் சொல்ல மாட்டாங்களா?” – சுந்தர்.

“என்ன ரொம்ப பேசுறீங்க?...” சந்தோஷ் கோபமாக

“நீங்க பதட்டமா இருக்கீங்க சார்...முதல நீங்க படரத நிறுத்துங்க.”

“என்னைய திரும்ப திரும்ப அதையே சொல்ற? ஒழுங்கா பேசு!”

“இல்ல சார் நீங்க பதட்டமா தான் இருக்கீங்க....” என்று சுந்தர் கடும் கோவத்தோடு.”

“என்ன இப்படிலாம் பேசுறத முதல நிறுத்துங்க....அப்புறம் நான் வேறமாதிரி பண்ண வேண்டிதிருக்கும்”.”

“சார்...நீங்க பதட்டபடாதீங்க சார்...வேணாம் சார்...நீங்க பதட்டபடாதீங்க சார்....சொன்னா கேளுங்க சார் “ என்று சுந்தர் ஆக்ரோஷாமாக கத்தியபடி சந்தோஷின் கழுத்தை பிடித்தான். சந்தோஷ் பயத்தில் என்ன பண்ணுவதென்று புரியாமல் சுற்றி சுற்றி பார்க்க யாருமே அங்கில்லை. அவர்கள் இருவரும் ஒரு இருட்டான இடத்தில் இருகின்றனர். “டமார்” என்று ஒரு சத்தம். சந்தோஷ் என்னவென்று திரும்பி பார்க்க அந்த பணியாள் சுந்தர் கிழே இறந்து கிடந்தான். அவன் தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்துக் கொண்டிருக்க சந்தோஷ் கையில் உள்ள கிட்டாரில் ரத்தம் இருப்பதை கண்டான். சந்தோஷ் பயத்தின் உச்சியில் இருந்தான். தன்னை அறியாமலே அவனை கிட்டாரில் அடித்து விட்டேனோ என்று யோசித்தான். அவன் முகம் பயங்கரமாக வியர்த்தது. அவனுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அந்த இறந்து போன சுந்தரின் கண்கள் திடிரென சந்தோஷை பார்த்தது.

“டேய்! என்று அது கத்த உடனே பயத்தில் அலறினான் சந்தோஷ்.

ந்தோஷ் கண்விழித்த போது அவன் தன்னுடைய வீட்டில் தன்னுடைய அறையில் நாற்காலியில் அமர்ந்திருக் கின்றான் . அவன் எதிரில் அவனது நண்பன் ராகுல் முறைப்போடு அவனை கண்டுகொண்டிருக்க பிறகே சந்தோஷுக்கு புரிய வந்தது அவன் இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவு என்பது. சந்தோஷ் தன் கையில் இருக்கும் கிட்டாரை பார்த்துவிட்டு எதிரே அவன் நண்பனை மெல்ல பார்த்தான்.

“ஏண்டா டேய்..நான் இங்க எவ்வளவு சீரியஸா உனக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்...ஆனா நீ அந்த கேப்புல தூங்கிட்டு இருக்கியா?” என்றான் ராகுல் கோபமாக.

ஆனால் சந்தோஷ் இன்னும் தூக்கத்தில் இருந்து தெளியவில்லை.

“என்னடா மறுபடியும் கனவா?” – ராகுல்

“ஆமாடா” – சந்தோஷ்

“டேய் உனக்குத்தான் மைண்ட்ல ஏதோ ப்ரோப்லேம் இருக்குனு டாக்டர் சொன்னாராமே?...அதுக்கு ஏன் ட்ரீட்மெண்ட் எடுத்துக்க மாட்டீங்கற?....உங்க அம்மா அப்பா என்கிட்டே வருத்தப்பட்டு சொல்ற அளவுக்கு ஏண்டா இப்படி பண்ற?...உன் நல்லதுக்கு தான சொல்றாங்க?”

“டேய் அதெல்லாம் எனக்கு ஒன்னும் மைன்ட் ப்ரோப்லேம் கிடையாது....சும்மா டாக்டர் சொல்றாரு கண்டக்டர் சொல்றாருன்னு” – சந்தோஷ் வெறுப்பாக.

“இந்த பிரச்சனைய நீ சரி பண்ணலைனா ஒருநாள் நீ நிரந்தரமாக கனுவுகுள்ள தான் இருப்பனு டாக்டர் சொல்றாருல?....அது பத்தி உனக்கு பயமே இல்லையா?”

“ஏய்...அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுடா...என் மைன்ட் ரிலாக்ஸ் பண்ணிக்க தான் நான் தனியா இருக்க விரும்புறேன்...தயவு செஞ்சு போறியா?...”

“உன் முஞ்சி...நீ எப்பவும் இதே மாதிரி தனிமைல இருந்து யோசிச்சு யோசிச்சு தான் உனக்கு இப்படி ஒரு மைன்ட் ப்ரோப்லேம் வந்திருக்கு....சொன்ன கேளுடா அம்மா அப்பா சொல்றத கேட்டு நாளைக்கே ஆஸ்பிட்டல்  க்கு போய் அட்மிட் ஆயிரு”

“சொன்னா புரியாதா உனக்கு?...நான் யாரோட அட்வைசையும் கேக்க விரும்பல...தயவு செஞ்சு கெளம்பு...” என்று சந்தோஷ் கோவமாக கத்தினான்.

“சரி கத்தாத போறேன்” என்று ராகுல் அவன் அறையை விட்டு சென்றான். டிவியை ஆன் செய்து விட்டு ஒவ்வொரு சேனலாக மாத்தி கொண்டே இருந்தான் சந்தோஷ். அவனை அறியாமல் மீண்டும் தூங்கினான். சிறிது நேரம் சென்றது.

“டோக்” என்று சந்தோஷ் கதவை திறக்கும் சத்தம் கேட்க உடனே சந்தோஷ் எழுந்தான். ராகுல் சந்தோஷை பார்க்காமல் கிழே ஏதையோ தேடியபடி அவன் அறையில் குனிந்தபடி சென்றான். சந்தோஷும் அவனை பார்க்காமல் மீண்டும் டிவியை பார்க்க ஆரம்பித்தான். டிவியில் செய்திகள் போய்கொண்டிருந்தது.

“என்னடா?..என்ன தேடற?” என்று சந்தோஷ் டிவியை பார்த்தபடி ராகுலிடம் கேட்கக் ராகுல் பதில் சொல்லவில்லை. சந்தோஷும் அவனை கண்டுகொள்ளாமல் டிவியை நன்கு கவனிக்க ஆரம்பித்தான்.

“சற்று முன் அண்ணா சாலை அருகே நடந்த ஒரு பைக் விபத்தில் 21 வயது வாலிபர் உயிர் இழந்தார்.” என்று திடிரென ஒரு செய்தியை காட்டினார்கள் . அதில் பைக்கில் அடிப்பட்டு இறந்து போன வாலிபரை சம்பவ இடத்தில் காண்பித்தபோது சந்தோஷ் அதிர்ச்சியானான். அந்த வாலிபர் வேறுயாருமில்லை அவனின் நண்பன் ராகுல் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.