(Reading time: 20 - 40 minutes)

 

ப்போ இங்க இருக்குறது யாரு?” என்று பயத்துடன் சந்தோஷ் திரும்பி பார்க்க  ராகுல் போன்ற அந்த பேய் உருவம் “சர்ர்” என அவன் முன் வந்து “நான் சொன்னா கேப்பியா மாட்டியா” என்று கோரமாக கத்தியவுடன். சந்தோஷ் மீண்டும் பயத்தில் அலறி கத்தினான்.

“என்னடா ? டேய் “ என்று யாரோ அவனை தலையில் தட்டி கேட்கின்றனர். சந்தோஷ் நிமிர்ந்து கண்ணை திறந்த போது அவன் ஒரு விளையாட்டு மைதானத்தில் படுத்திருக்கின்றான். அவன் நண்பர்கள் அவனை சூழ்ந்து நின்று படபடப்பாக பார்க்கின்றனர். அவனை எழுப்பி விட்டது ராகுல் தான் என்று தெரிந்ததும் அவனை பயத்துடன் பார்த்தபடி எழுந்து நின்றான் சந்தோஷ். ராகுல் கையில் கால்பந்து இருந்தது.

“என்னடா ஆச்சு? ஒன்னும் ஆகல ல?” – ராகுல்

சந்தோஷ் சுற்றி சுற்றி பார்க்க அப்போதுதான் அவன் தன் நண்பர்களோடு விளையாட அந்த மைதானத்திற்கு வந்திருந்தது அவனுக்கு புரிய வந்தது.

“ஹே மச்சி...சாரிடா நான் தான் தெரியாம வேகமா பால்  லை உதைசுட்டேன்....தலைல அடி பலமா பட்டுடுச்சா?” என்று நண்பன் ஒருவன் சந்தோஷின் தலையை தேய்த்தபடி வருந்தி கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா “ என்று சந்தோஷ் சிரித்து மழுப்பினான்.

“டேய் சந்தோஷ் ஒன்னும் ஆகல ல?...தலைல ரத்தம் வருதான்னு பாருடா?” – ராகுல்

“அதெல்லாம் ஒன்னும் இல்லைட...சும்மா லைட்டா மயக்கம் வந்துச்சு....அவளோதான்” – சந்தோஷ்

“அடபோடா....நீ கால்மணி நேரமா மயக்கத்துல படுதிருந்தியா ? இல்லனா எங்கள பயமுறுத்த [படுதிருந்தியானு ஒன்னும் புரியாம கிடந்தோம்” என்று இன்னொரு நண்பன் சிரித்தபடி கூறினான்.

சந்தோஷ் அந்த கனவுகளையே நினைத்து அமைதியாய் நின்றான்.

“என்னடா மயக்கத்துல எதாவது கனவு கண்டியா?” – ராகுல் சிரித்தபடி.

ஆனால் மௌனமாய் சந்தோஷ் திரும்பி யோசித்தபடி  நடக்க ஆரம்பிக்க அவன் நண்பர்களும் கேலிசெய்தபடி அவன் பின்னே வந்தனர்.

“என்னடா கேக்குறேன்ல பதில் சொல்லு?” – ராகுல்

சந்தோஷ் பதில் சொல்லாமல் நடந்தான்..

“ஹலோ மிஸ்டர்....திரும்பி பதில் சொல்லுங்க சந்தோஷ்” – ராகுல்

“சும்மாரு டா “ – சந்தோஷ் திரும்பாமல்.

“மிஸ்டர் சந்தோஷ் இப்போ எனக்கு நீங்க பதில் திரும்பி பதில் சொல்லமுடியுமா? முடியாதா?....நீங்க பண்ண தப்புல இனிக்கு அந்த கிளிண்ட நாம மிஸ் பண்ணிட்டோம்....இதுக்கு என்ன பண்ண போறீங்க?” என்று ராகுலின் குரல் மறைந்து வேறு ஒரு குரல் கேட்டவுடன் சந்தோஷ் வியந்து திரும்ப அவன் எதிரே அவனுடைய  மேனேஜர் முறைப்புடன் நிற்பதை கண்டான். அப்போது தான் சந்தோஷ் தான் தன்னுடைய ஆபீஸில் இருப்பதை உணர்ந்தான். அவனால் நடந்த ஒரு தவறால் மேனேஜரிடம் என்ன பதில் சொல்வதென்று அவன் யோசிக்கும் நேரத்தில் அவன் கண்ட அந்த கனவுகள் வந்திருப்பதை புரிந்து கொண்டு மேனேஜருக்கு பதில் கூற முன் வந்தான்.

“சாரி சார்...நான் தெரியாம அப்படி பண்ணிட்டேன்...அந்த க்லியன்ட்டை எப்படியாவது மறுபடியும் பேசி கூட்டிட்டு வந்திடறேன் சார்” என்று சந்தோஷ் கெஞ்சினான் சந்தோஷ்.

“என்ன பேசுறீங்க க்ளியண்டா?...மிஸ்டர் சந்தோஷ் ....சந்தோஷ்” என்று வியந்தபடி மேனேஜர் சந்தோஷ் முன் கையை அசைத்து அவனை முழிப்பு கொண்டு வருவது போல் செய்ய சந்தோஷ் புரியாமல் அவன் முகத்தை பார்த்தான். மேனேஜரின் முகம் ஒரு டாக்டரின் முகமாக மாறியது. சந்தோஷ் மீண்டும் முழித்து சுற்றி சுற்றி பாக்கும் போது அவன் தான் சிகிச்சை எடுக்க அந்த மருத்துவமனைக்கு வந்திருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அந்த டாக்டர் ரூமில் அவனும் அந்த மனோதத்துவ டாக்டர் மட்டுமே இருந்தனர்.

“டாக்டர்....இதுதான் என்னோட பிரச்சனை டாக்டர்...நான் இப்படிதான் தொடர்ந்து கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்....என்னால எது நிஜம் எது பொய் னு  நம்ம முடியல ..” என்று சந்தோஷ் பயத்தில் படபடப்பாக.

டாக்டர் அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி சந்தோஷ் சொல்வதை கவனித்து கொண்டிருந்தார். அவரின் நாற்காலி மேஜையில் ஒரு போட்டோ இருப்பதை கண்டான் சந்தோஷ்.

“ஒரு விஷயம் நடக்குது...அத என்னால நம்ப முடியுது....ஆனா அந்த விஷயத்துல நான் கவனம் செலுத்தும்போதே அது வேற ஒரு விஷயமா மாறுது....எனக்கு இதனால பைத்தியமே பிடிக்கிறமாதிரி இருக்கு...இந்த கனவால என்னால என் வேலைல கூட கவனம் செலுத்த முடியல...” என்று சந்தோஷ் பயத்தில் கூறினான்.

“அமைதியா இருங்க சந்தோஷ்...பயப்படதீங்க...உங்களுக்கு வந்திருக்க இந்த பிரச்சனை கொஞ்சம் டேஞ்சர் தான்....இது சாதாரன நோய் மாதிரி எனக்கு தெரில...” – டாக்டர்.

“என்ன சொல்றீங்க டாக்டர்?” – சந்தோஷ் பயந்து.

“சாதரணமா நாம ஒரு 7 – 9 மணிநேரம் தூங்குறோம்....நாம உடல் சோர்வு நிலையில் இருந்து பழைய நிலைக்கு வர இந்த நேரத்தில தான் முளை அதிபயங்கரம வேலை செய்து...ராபிட் ஐ மூவ்மென்ட் என்னும் கண்கள் சூழ்ச்சி தான் இந்த கனவுகளை வரவேக்குது....இந்த கனவுகளை நாம சுயநினைவோட பார்த்தா இன்னும் கொஞ்சம் நேரத்துல எழுந்துக்க போறோம்...அதுவே இதுதான் நெஜம் னு நம்ப மனசு ஆழமா சொல்லிடுச்சுனா நாம அந்த கனவுல இருந்து வெளிய வருவது அந்த மனசு முடிவு பண்ணத்தான் முடியும்..” – டாக்டர்.

“எனக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க னு புரில டாக்டர்...” – சந்தோஷ்.

“நீங்க ஒரு பெரிய கிட்டார் பிளேயர் ஆகணும்னு ஆசைப்பட்டு அதுக்கு முயற்சி பண்ணி முடியாததால இப்டி சாதரணமா ஒரு கம்பெனில வேல பாத்துகிட்டு இருக்கீங்க...அதையே நினைச்சு நினைச்சு தனிமைல உங்க நேரத்தை செலவழிச்சு உங்க மனசை நீங்களே நல்லா காயபடுத்தி இருக்கீங்க...இதுதான் உங்களோட இந்த தொடர்ந்து வர  கனவுகளுக்கு காரணம்..சாதரணமா வர கனவு நேரம் நீங்க ரொம்ப கிரிடிகல் லெவெல்ல கனவுல முழுகி போறீங்க..உங்க மனசு எப்போ முழிக்க சொல்லுதோ அப்போதான் நீங்க முழிக்க முடியும் .” – டாக்டர்.

“டாக்டர்...இந்த கனவுகள்  ஏன் மாறிகிட்டே இருக்கு....ஏன் ஒரு நிலையில்லாம போகுது” – சந்தோஷ்.

“நாம பாத்த விஷயங்கள் அப்புறம் ஆசைப்பட்ட விஷயங்கள் சமந்தமா தான் கனவுகள் காட்ட முடியும்...அதுக்கு மேல அதால எதையும் காட்ட முடியாது...அந்த ஒரு சூழ்நிலைல தான் நம்ம மனசு நமக்கு நடக்கறது பொய்ன்னு சொல்லும்...ஸோ உடனே வேற காட்சிகள் வர ஆரம்பிக்குது” – டாக்டர்.

சந்தோஷ் யோசித்துவிட்டு டாக்டரிடம் “ இத குணபடுத்த வழியில்லையா?” என்றான்.

“இருக்கு...அதுக்கு நீங்க ஆஸ்பிட்டல் ல அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்....அதிலும் உங்களுக்கு இருக்குற இந்த பிரச்சனைக்கு நீங்க உடனே அட்மிட் ஆகணும்...இல்லனா எதாவது விபரிதம் நடக்க வாய்ப்பு இருக்கு..” – டாக்டர்.

“என்ன நடக்க வாய்ப்பு இருக்கு டாக்டர்...?” – சதோஷ்

“ம்ம்ம்ம்....நீங்க இப்போ தொடர்ந்து கனவு பார்க்குறீங்க....இதுல எதாவது இக்கட்டான நிலைமைல தான் கண் முழிகுறீங்க....இதே பிரச்சனை பெருசு ஆகி போச்சுனா....நீங்க தொடர்ந்து கனவு காண வேண்டியதுதான்.....உங்களால கடைசி வரை அந்த கனவுகளை தான் மறுபடியும் மறுபடியும் பாப்பீங்க....அந்த கனவுகளுக்கு முடிவே இல்ல...” – டாக்டர்.

“ஒருவேளை அந்த கனவில நான் இறந்திட்டா? தற்கொலை பண்ணிகிட்டா? நான்  முழிச்சிக்க முடியும்ல?” – சந்தோஷ் ஆர்வமாய்.

“வேடிக்கையா பேசுறீங்க சந்தோஷ்....ம்ம்ம்ம் அப்படி பண்ணா முழிக்க வாய்ப்பு இருக்கு.....பட் உங்களுக்கு அப்போ தற்கொலை பண்ற எண்ணம் வரணுமே” என்று  சிரித்தபடி டாக்டர் அந்த நாற்காலி மேஜையில் இருந்த போட்டோவை தெரியாமல் கிழே தள்ளி விட அதை மீதும் தரையில் இருந்து எடுத்து மேஜை மீது வைத்தார். சந்தோஷ் அந்த போட்டோவை பார்த்தபோது அந்த போட்டோ வேறு ஒரு போட்டோவாக மாறியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.