“நீ தான சந்தோஷ்?” – அந்த ஆள்.
“ஆமா...” – சந்தோஷ்.
“சுமதிங்கற உன் கிளாஸ் பொண்ணு வீட்ல நேத்து நீ கல்ல எடுத்து வீசிட்டு போனீயாமே” என்றான் அவன்.
சந்தோஷ் திடிரென அவன் உருவம் ஒரு போலிஸ் போல மாறுவதை கண்டான். அவன் தற்போது அவனின் வீடு வாசிலில் நிற்கிறான். அவனை அடித்த அதே போலீஸ் தற்போது அவனோடு பேசுகிறார்.
“சார்...எனக்கும் ஒன்னும் புரில” என்று சந்தோஷ் கண்ணை உருட்டி பார்க்கின்றான்.
“ஏண்டா பொண்ணு லவ் பண்லனா....போய் அவ வீட்ல கள்ள எறிஞ்சிட்டு வருவீங்களா?” என்று போலீஸ் அவன் சட்டையை பிடித்தார். சந்தோஷ் பதறினான்.
அப்போது சந்தோஷ் இதுவும் கனவாக தான் இருக்கும் என்று முடிவு செய்து போலீஸ் வைத்திருக்கும் துப்பாக்கியை பிடுங்கினான். போலீஸ் அவன் தலையில் வைக்க விடாமல் தடுக்க அனால் சந்தோஷ் அவரை தள்ளிவிட்டு விட்டு தன்னை துப்பாகியால் தலையில் சுட்டுகொண்டான்.
சந்தோஷ் தற்போது வீட்டில் நிம்மதியாக உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தான். நடந்தது அத்தனையும் கனவு என்று அவன் உணர்த்து குளித்து வீட்டு தன் ஆபீஸுக்கு கிளம்பினான். அவன் தன் அறைகதவை திறந்து விட்டு பாக்கும் போது அவன் தன் ஆபீஸில் இருந்தான். அவன் முன்னே யாரோ ஒருவர் சண்டை போடும்படி பேசிக்கொண்டு இருந்தார்.
“இதோ பாருங்க மிஸ்டர்....நீங்க டாக்குமெண்டை தொலைச்சிட்டு என்னை ஒன்னும் கேள்வி கேக்காதீங்க....நான் உங்களோட ஒரு கிளிஎன்ட்.....மரியதைய பேசுங்க” என்று அவர் கத்தினார்.
சந்தோஷ் ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க சந்தோஷ்க்கு ஆதரவாக ஒருவர பேசிக்கொண்டு இருந்தார்.சந்தோஷ் இன்னும் கனவிலிருந்து அவன் வெளிய வரவில்லை என்று உணர்ந்தான். சுற்றி சுற்றி பார்த்தான். உடனே ஆபிஸ் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே கட்டிடத்தில் இருந்து கிழே விழுந்தான். சந்தோஷ் இனி எதையும் யோசிக்காமல் கனவில் இருந்து விடுபட முடிவு செய்ய தற்கொலையை தேடி ஓடினான்.
மீண்டும் இருட்டறையில் போலீஸ் மிரட்டல்...சந்தோஷ் அவர் துப்பாக்கியை வாங்கி சுட்டு கொண்டான்.
மீண்டும் ஆஸ்பிட்டலில் டாக்டரின் அறிவுரை....சந்தோஷ் அவர் டேபிள் மேல் இருந்த கத்தியால் கழுத்தி அறுத்தான்.
மீண்டும் மேனஜரிடம் திட்டு....சாந்தோஷ் ஜன்னலை விட்டு குதித்தான்.
மீண்டும் அவன் நண்பனோடு ரயில் நிலையத்தில் இருக்க......தண்டைவாளத்தில் ஓடி சென்று ரயிலில் மோதினான்.
மீண்டும் எதிர்யோடு சண்டை...அருகில் வந்த வேகமாக பைக்கில் மொஹி இறந்தான்.
மீண்டும் அவன் நண்பன் ராகுல் பேயை போல் வந்தான்....அவன் அந்த பேயை தளி விட்டு அருகில் இருந்த டிவி பக்கம் வரும் வரும் மின்சார வயரை பிடித்தான்.....
மீண்டும் ஆஸ்பிடலில் ....கத்தியால் அருத்துகொண்டான்.
மீண்டும் அவன் அறையில் தூக்கம் களைந்து எழுந்தான்....அருகில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துகொண்டான்......அதிர்ச்சி.....இம்முறை சந்தோஷ் வலை தெரிந்தது. அவன் கழுத்தில் இருந்து ரத்தம் ஒழுகியது. அவன் உண்மையில் கனவு தெளிந்து நிஜத்தில் ஒன்றும் புரியாமல் கழுத்தை அறுத்துக் கொண்டதை அவன் உணர்கின்ற நேரம் அவர் உயிர் போனது.
சிறிது நேரத்தில் அவன் வீட்டில் பக்கத்துக்கு வீடு ஆட்கள் மட்டும் நண்பர்கள் வந்து குவிந்தனன்ர். சந்தோஷ் படுக்கையில் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அவன் நண்பன் ராகுல் அழுதான். அங்கே இருந்த கூட்டத்தில் குசுகுசுவென பேசின.
“எப்படி ஆச்சு ...” ஒருவர்.
“நான் பக்கத்து வீடுங்க...அவனாக அப்பா அம்மா இனிக்கு காலைல கோவில் போறாங்கன்னு என்னை பாத்துக்க சொல்லிட்டு போனாங்க....சாப்பிடறத்துக்காக கூப்பிட வந்தேன்...பாத்தா இந்த பையன் இப்டி கிடக்குறான்....” – என்றுஇன்னொருவர் சொன்னார்.
“அடப்பாவமே...ஏன் எதாவது லவ் பண்ணிட்டு விட்ல பிரச்சனையோ...?” – என்று ஒரு பெண்மணி.
“இல்லமா....அந்த பையனுக்கு கொஞ்ச மாசமா மெண்டல் பிரச்சனைன்னு அக்கதுப்பக்கதுல பேசிகிட்டாங்க....அவங்க அம்மா அப்பா கூட அவன ஆஸ்பிட்டல் க்கு கூட்டிட்டு போனாங்களாம்...இந்த பையன் தான் ஆஸ்பிட்டல் க்கு ட்ரீட்மெண்ட் எடுக்க போலயாம்” – என்றார் இன்னொரு பெண்மணி.
எல்லாரும் சந்தோஷின் உடலையை பார்த்து பார்த்து பேசினார்கள் அந்த கூட்டத்தில் இருந்தவர்கள். ஆனால் அந்த கூட்டத்தில் ஒருவனாய் சந்தோஷும் இருந்தான். தன் மரணத்தை தானே அறியாமல் பார்த்து பார்த்துக் கொண்டிருந்தவன் நடக்கும் இதுவும் ஒரு கனவா என்று சுற்றி சுற்றி சுற்றி பார்த்த போது அவனை சுற்றி யாரும் இல்லை. அவன் அந்த அறையிலும் இல்லை. அவன் தற்போது ஒரு தோளிகாட்சி நிகழ்ச்சியில் கிட்டாரை வாசித்துக்கொண்டிருந்தான். உங்களை போல இப்போது தான் உணர்ந்தான் இதுவும் ஒரு கனவு என்று.
This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.