(Reading time: 29 - 58 minutes)

இதயத்தின் துடிப்பாய் – மது (& விஜய்)

This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

இடம் : புது தில்லி

நேரம் : மாலை 6.30 மணி

ப்படி நம் ஓபனிங்...சும்மா  மணிரத்னம் சார் படம் ஸ்டைல்ல இருக்குல்ல.. இல்லை பாரதிராஜா சார் ஸ்டைலில் என் இனிய சில்சீ வாசகர்களே! அப்படின்னு போட்டுக்கலாமா..

Ithayathin thudipaai

"மண்டூ மது!!! கொஞ்சம் ஸெல்ப் டப்பா  அடிப்பதை நிறுத்தி கதாநாயகி அறிமுகம் கொடுக்கப் போகிறாயா இல்லை நான் கதாநாயகன் அறிமுகம் செய்யவா" விஜய் ஆன் வாட்ஸ் அப்.

நஹிஹிஹி!!! நம் ஷாருக்கானே  அவர் படத்தில் ஹிரோயின் பெயரை முதலில் போடும் போது  கதாநாயகி பற்றி தான் நம் வாசகர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வெத்து வேட்டு விஜய்யை பார்ட்னர் இன் தில்லாலங்கடியாக சேர்த்தது தப்பா போச்சு...

வாங்க.. நம் கதாநாயகி பற்றி சொல்கிறேன்

பெயர் : புவனா  ஒரு ஆச்சரியக்குறி!!! ( அடைமொழி…ஹி ஹி..  எல்லாம் ஒரு பில்ட் அப்புக்குத் தான்)

வயது:  ( மது!! நீயே “பெண்ணிடம் கேட்காதீர்கள் அகவை” என்று கவிதை எல்லாம் கிறுக்கி விட்டு நம்  கதாநாயகி  வயதைக் கேட்டால்... உன்னை எல்லாம் – விஜய் )  ஆமாமில்ல!!! சரி உங்களுக்குப் பிடித்த வயதைப் போட்டுக் கொள்ளுங்கள்...

தொழில் : இதய மயக்கி ( ஹா! ஹா! ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்ங்க)

தோற்றம்: நம்ம வைரமுத்து சார் பார்வையில் அழகி. அவர் தானே கன்னத்தில் குழி அழகு. கார்கூந்தல் பெண்ணழகு என்று பாடி வைத்தார்.

கை நிறைய சம்பளம், தன் சுய சம்பாத்தியத்தில் சொந்த வீடு, கார், பேங்க் பாலன்ஸ், வருடம் ஒரு முறை பெற்றோருடன் உல்லாச வெளிநாட்டுப் பயணம்... நம்ம  டாக்டர் கலக்கறாங்கல்ல!!!

இவளின்  குணத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல பெற்றோர்களுக்கு இவள் அம்மா அப்பா  மேல் பொறாமையோ பொறாமை...இப்படி ஒரு பெண் தங்களுக்கு இல்லையே என்று.

இவளது நண்பர்கள் தங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்( காலர் இல்லாத உடை அணிந்த நண்பர்கள் என்ன செய்வார்கள் என்று மதுவின் தத்து பித்து மூளைக்கு டவுட்!!!) அதாவது இப்படி ஒரு தோழி கிடைத்ததைப் பெருமையாய் பீற்றிக் கொள்வார்களாம்.

இவளது பேஷண்ட்ஸ் தான் பாவம். ஐயோ!! ரொம்ப நல்ல டாக்டர்ங்க நம் புவனா. இவள் எப்படி பட்ட இதய நோயினையும் தன் திறமையாலும் அன்பாலும்  குணப் படுத்திவிடுவாள். ஆனால் நோயாளிகள் தான் இவள் புன்னகையில்  மயங்கி " ஹல்லோ டாக்டர் ஹார்ட் வீக் ஆச்சே" என்று பாடிக் கொண்டே இருப்பர்.

இவ்ளோ சூப்பர் இன்ட்ரோ கொடுத்திருக்கேன், நீங்களும் வாங்க டாக்டரிடம் ட்ரீட் கேட்போம்.

அடடா என்ன இது " ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே" என "காக்க காக்க" ஜோ போல் கலகலப்பாக இருக்கும்  நம் புவனா "சம்பேஷ்தானு" என "சந்திரமுகி" ஜோ போல் லகலகலகவென இருக்கிறாளே! என்னவென்று கேட்போம்.

"ஹே! விட்டா பூரா கதையும் உன் கதாநாயகி வைத்தே ஓட்டிடுவே. நான் கதாநாயகன் அறிமுகம் செய்ய வேண்டாமா " என நம் பார்ட்னர்  டெர்ரர் ஆவதால் ஓவர் டு வெத்து வேட்டு விஜய்.

இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம்

நேரம்: காலை 6 மணி

 இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்... ஒரு அறிமுகதிற்கே ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டால் அப்புறம் அடுத்த வருட சிறுகதைப் போட்டிக்குத் தான் கதை அனுப்ப முடியும்.  வாங்க நம் கதாநாயகன், 33 வயது இளைஞன் , ஆதித்யா சித்தார்த் பற்றி  சொல்கிறேன்.

படித்தது பி டேக், எம் எஸ், அப்புறம் எம் பி ஏ.. 3 இடியட்ஸ் அமீர் கான் பார்வையில் சரியான முட்டாள். ஆனால் நம் ஹீரோ படித்த படிப்பை வீணாக்காமல் தொழிலும் நிர்வாகத்திலும் கொடி கட்டிப் பறக்கிறார்.

அசப்பில் நம் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன்  மீசை வைத்தால்...அப்படி இருப்பார். ( இதை மண்டூஸ் மதுவிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள்.. அவள் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பைத்தியம் .அப்புறம்  சைட் டிராக் ஆரம்பித்து விடுவாள்)

இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் தாய் தந்தையைப் போற்றும் தனயன், அயராத உழைப்பாளி, தொழிலாளிகளின் பங்காளி, நீதி நேர்மை நாணயத்தின் எதிரொலி, குறிப்பாக எல்லாப் பெண்களையும் தாய் அல்லது சகோதரியாக போற்றும் பண்புள்ள மனிதன்.

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"  என கிடார் மீட்டி இசைக்கும் "வாரணம் ஆயிரம்" சூர்யா போல் எப்போதுமே ஹன்சம் ஆவ்சம்மாக  இருக்கும் நம் ஆதித்யா " ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுடா" என "சிங்கம்" சூர்யா போல் கர்ஜிப்பது ஏன்?? அவரிடமே கேட்போமே!!

  இதோடு 96 தடவை மெசேஜ் வந்திருச்சு. மது தாங்க.. கதாநாயகன் பற்றி ஒரு நாலு வார்த்தை நல்லதா சொல்ல விடுகிறாளா..சரி சரி அடுத்த பீப் வருவதற்குள் அப்படியே உலகத்தைப் பாதி சுற்று சுற்றி தில்லி போய்டுங்க!!

விஜய்யின் நீண்ட கதாகாலட்சேபம் கேட்டு நித்திரை பயணம் மேற்கொண்டுவிட்ட இனிய வாசகர்களே!!!  மழை பெய்யும் வேளையில் சூடான பஜ்ஜி சாப்பிட்டால் எப்படி இருக்கும்...அப்படி சூப்பரா  இனி மது கதையைக் கொண்டு போகிறேன். ( ஆரம்பிச்சுட்டாயா...ஆரம்பிச்சுட்டா என வடிவேலு பாணியில் சவுண்ட் கொடுக்கும் விஜய்யைக் கண்டுக்காதீங்க!)

நம் கதாநாயகி புவனா “சந்திரமுகி” கெட் அப்பில் இருந்தார்களே! வாருங்கள் அவரிடம் என்னவென்று கேட்போம்

மது : டாக்டர்!! நீங்க நல்ல டான்ஸ் ஆடுவீர்களாமே! நியு இயர் விழாவிற்கு "ரா ரா " பாட்டிற்கு ஆடப் போகிறீர்களா?

புவனா: மது! நானே கெட்ட கோபத்தில் இருக்கிறேன்.. நீங்க வேற!

மது: மேடம்..நம் வாசகர்கள் சார்பில் மதுவின் வேண்டுகோள். கெட்ட கோபம் விடுத்து நல்ல கோபத்தை வேண்டும் என்றால் வச்சுக்கோங்க...

புவனா: காமடி பண்ணாதீர்கள் மது.. நான் கேட்டேனா! இப்போ நான் கேட்டேனா..

மது: அமர்க்களம் படத்தில்  “கேட்டேன் கேட்டேன்” பாட்டில் வருமே அப்படி  நீங்கள் கேட்கவில்லையா!!

புவனா: எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று தானே சொன்னேன். இப்போது அடுத்த மாதம் எனக்குத்  திருமணமாம். என் அம்மா அப்பா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அப்படியே ஒற்றுமையாக முடிவு எடுத்து விட்டார்கள்.

மது : வாவ்...கங்கிராட்ஸ்...அப்போ எனக்கு  கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் கிடைக்கும் என்று சொல்லுங்க.. மேடம் மேடம் ஏற்கனவே கௌரி கல்யாணத்தில் ஜெய் கிட்ட அடை அவியல் மெனுவில் சேர்க்க சொல்லிட்டேன்.. நீங்கள் குழிப் பணியாரமும் ஆப்பமும் மெனுவில் மதுவிற்காக சேர்க்க சொல்லுங்கள் ப்ளீஸ்.

( சாப்பாட்டு ராமி !!! அவங்க எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கிறாங்க.. அதை விட்டு மெனு டிஸ்க்ஷன் பண்ணி கொண்டு இருக்க.. போட்டி சிறுகதைக்குக் கதை அனுப்ப வேண்டும் என்ற  நினைப்பு இருக்கா  இல்லையா... விஜய்  டோஸ் விடுகிறான்... சோ இனி மது சீரியஸ் ….எவ்வளவு செகண்டிற்கு??- விஜய்)

புவனா: மது! நான் சிரியசாகத் தான் சொல்லுகிறேன்.. இப்போது நான் எவ்வளவு சந்தோஷமாக சுதந்திர வானில் சிறகு விரித்துப் பறந்து மகிழ்கிறேன்.. இது ஏன் என் பெற்றோருக்குப் புரியவில்லை

மது : என்ன டாக்டர்! எல்லா பேரன்ட்ஸ்க்கும் மகளுக்குக் கல்யாணம் செய்து பார்ப்பதில் ஆசை இருக்காதா...

புவனா: இருக்கும் தான்..ஆனால் என்னைப் பொறுத்த வரை திருமணம் என்பது  ஒரு விலங்கு...அதைப் பூட்டிக் கொண்டு ஆயுள் முழுதும்  சிறையில் அடைபட என்னால் முடியாது.

மது : ஊர் உலகத்தில் எல்லோரும் திருமணம் செய்து சந்தோஷமாகத் தானே வாழ்கிறார்கள்?

புவனா: அப்படி எல்லோரும் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்ன? எத்தனை  விவாகரத்துகள். எத்தனை ஹரச்மன்ட்..பொதுவாக பாதிக்கப் படுவது பெண்...காம்பிரமைஸ்  செய்து கொள்வதும் பெண் தான்.

மது: எப்போதோ விபத்து ஏற்படுகிறது என்பதால் நாம் பயணம் செய்யாமலா இருக்கிறோம் டாக்டர்? ( அடடா! நம் மதுவிற்குக் கூட மண்டைக்குள் களிமண் இருக்கிறதே - விஜய் மைண்ட் வாய்ஸ்)

புவனா: பயணம் செய்வது நான் மட்டும் என்றால் எந்த வித பிரச்சனையும் இல்லை.. ஆனால் இன்னொருவரையும்  உடன் அழைத்துக் கொண்டு விபத்துக்கு உள்ளாக்கி அவரைக் கஷ்டப் படுத்த வேண்டுமா என்பது தான் என் கருத்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.