(Reading time: 29 - 58 minutes)

தொள தொள பைஜாமாவில் தலை கலைந்து அதிலும் அழகாய் நேச்சுரலாய் அவள்  இருப்பதாய் தோன்றியது ஆதித்யாவிற்கு.

"உனக்கு என் காபி வேண்டும் என்றால் குளித்து  விட்டு வந்தால் தான்..... நீயாகப் போட்டுக் கொள்வதென்றால் உன் விருப்பப்படி போட்டுக் கொள்ளலாம்" என்று நம் கொள்கைத் திலகம் சொல்ல உடனே ஓடிப் போய் காக்கா குளியல் போட்டு விட்டு

" சூப்பர் டேஸ்ட்..இது வரைக்கும் இப்படி ஒரு காபி நான் குடித்ததே இல்லை.. நான் ஒரு காபி பைத்தியம். தினம் காபி போட்டு தருகிறாயா" என்று  கடைசி சொட்டு காப்பியை சப்புக் கொட்டியபடியே கேட்டாள்.

சரி என்றான் கண்ணில் நீருடன். வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா..

"விடு.உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சுல்ல..நீ போய் ரெடி ஆகு.நான் டிபன் செய்கிறேன்" என்றவளை

"உனக்கு சமைக்கத் தெரியுமா" என்று ஆச்சரியமாய் கேட்டான்.

சாப்பிட்டுப் பார்த்து சொல்லு என்றவள் பொங்கலும் வெங்காய சாம்பாரும் செய்தாள்.

"நிஜமாவே  நல்லா சமைக்கிறாய்" என ஆதி பாராட்ட அப்போது நட்பின் பாராட்டாகவே புவனா எண்ணி மகிழ்ந்தாள்.

சில விஷயங்களில் ஒத்த சிந்தனையும் பல விஷயங்களில் மாறுபட்ட கருத்தும் இருந்து வந்தாலும்  நட்பு என்ற வட்டத்தில் அதிகப்படி உரிமை கடமை என்று இல்லாமல் மனம் விரும்பியதை செய்யும் சுதந்திரம் இருந்ததால் இருவருமே அதில் சந்தோஷமாகவே பயணித்தனர்.

"உனக்கு தான் ஸ்வீட் பிடிக்காதே.. அப்புறம் ஏன் கை வலிக்க பால்கோவா செய்தாய்" என ஆதி கடிந்து கொள்ள," உனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்குமே.அதுவும் பால்கோவா. நேற்று உன் புது பிராஜக்ட் வெற்றி என்று சொன்னாயே.  அது தான் செய்தேன்" என சாதரணமாக கூறினாள் புவனா.

"யு ஆர் சச் எ ஸ்வீட் பிரண்ட்"  என்று செல்லமாய் அவள் கன்னத்தைத் தட்டி விட்டுச் சென்றான்.

ஒரு வீக் எண்ட்...

"எங்கே போகிறோம் சித்தார்த்" என்று கேட்க " பேசாமல் வா" என விமானத்தில் கூறியவன் இறங்கியவுடன் காரில் பயணிக்கும் போது அவளின் கண்களைக் கட்டி விட்டான்.

"ஐயோ! எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலையே!!" என்று வழி நெடுகிலும் புலம்பிக் கொண்டே வந்த புவனாவைக் கண்டு கொள்ளவே இல்லை.

சோ என இரைச்சலுடன் சில்லென்ற தென்றல் காற்று மேனியில் பட அவன் கண் கட்டை அவிழ்த்து அவளின் தோள் பற்றி நிறுத்தினான்.. சிலிர்த்து நின்றாள்.. அவன் தொடுகையினால் என்று அப்போது  அவள் அறிந்தாள் இல்லை.

கண் முன் கண்ட காட்சியில் முகமெல்லாம் மலர பரவசமாய் ," "தேங்க்ஸ் சித்தார்த்" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

இதை எதிர்ப்பார்க்காத ஆதி ஒரு நிமிடம் சொல்லில் கூற முடியாத உணர்வில் திளைத்து நின்றான். ஆனால் மனம்  உணர்ந்ததை அறிவு அறியவில்லை.

"என் கனவு நயாகரா பால்ஸ் பார்க்க வேண்டும் என்று...எப்படி உனக்குத் தெரிந்தது" என புவனா கேட்க

"போன வாரம் உன் லாப் டாப்பை சர்வீஸ் பண்ணக் கொடுத்த போது  என்னுடையதை நீ யூஸ் செய்தாயே. அதில் "என் சின்ன சின்ன ஆசை" என்ற ஒரு கவிதையை சேவ் செய்து நயாகராவில் குளிக்க ஆசை என்ற வரியை ஹைலைட் செய்திருந்தாய்" என ஆதி கூற

"ஐ அம் சோ ஹாப்பி.. அது சில்சீயில் மது எழுதிய கவிதை. அது ஒரு சூப்பர் பிளாட்பார்ம்,இளம் எழுத்தாளர்களுக்கு. அதில் கதை கவிதை படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் "என்றாள்

ஏனோ அவளின் சந்தோஷத்தைப் பார்க்க ஆதியின் மனம் நிறைந்தது. நமக்காக  இவ்வளவு யோசித்திருக்கிறானே என்று அவள் மனம் குதூகலித்தது.

விஜய்: இப்போது எனக்கும் ஆர்வம் தாங்க வில்லை... எப்போது தான் லவ் சொல்லிகிடீங்க..

புவனா: சொல்றதா.. அது காதல் என்று இந்த ஸ்டேஜ் வரை நாங்க இரண்டு பேரும் உணரவே இல்லை... லைப் இப்படியே ஒரு ஆறு  மாதம் ஓடி விட்டது

ஆதித்யா: அப்போது தான் நான் ஒரு வாரம் ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருந்தது. அந்த வாரம் எங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நிகழ்வுகள் அடங்கிய வாரம்

" நீ பத்திரமா இருந்து கொள்வாய் தானே. கார் எடுத்துக் கொண்டு சுற்றாதே " திரும்பத் திரும்ப அட்வைஸ் செய்த  ஆதியை முறைத்தாள் புவனா..

" ஹல்லோ சார்! நாங்க கிட்டத்தட்ட பத்து வருஷம் தில்லியில் தனியாக தான் குப்பை கொட்டினோம்" என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

"ஓஹோ! குப்பை தான் கொட்டினாயா.. டாக்டர் வேலை பார்ப்பதாய் கதை விட்டாயா" என்றவனை அடிக்க ஓங்கி

"போனவுடன் போன் பண்ணு... பத்திரமா போ! நான் திரும்ப உன்னை ஏர்போர்டில் பிக் அப் செய்துக் கொள்கிறேன்.. பை " என்று ஆதிக்கு விடை கொடுத்தாள்.

மறுநாள் காலை எப்போதும் எழுப்பும் இனிய இசை இல்லை..மணக்கும் காபி இல்லை.. வீடே வெறிச்சென்று இருந்தது.. அங்கு ஆதியும் தன் மீட்டிங் முடிந்து ஹோட்டல் அறையில் கஸ்டர்ட் சாப்பிட்டுக் கொண்டே," ச்சே இது கஸ்டர்ட்டா....அன்று குட்டிமா செய்த கஸ்டர்ட் எவ்வளவு சுவையாக இருந்தது" என்று மனதில் நினைத்துக் கொண்டான். (என்னது  குட்டிமாவாஆஆஆ!!!! இகோ எபக்ட் கொடுப்பது மது )

" சித்து! சாப்டியா.. உன் காபி இல்லாமல் இன்று நாளே டல்" என்று அவனிடம் வம்பளந்து கொண்டிருந்தாள் புவனா தொலைபேசியில்...

"எனக்கும் கூட உன் கஸ்டர்ட் சாப்பிடனும் போல் இருந்தது டா " என்று பதிலுக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ஆதி.

ஒரு வாரமும் ஒருவரை ஒருவர் மிகவும் மிஸ் செய்வதாக இருவரும் உணர்ந்தனர். தனிமையில் இது வரை அவர்கள் சேர்ந்து வாழ்ந்த நிமிடங்களை அசைப் போட்டுக் கொண்டிருந்தனர். மனதில் புதைந்திருந்த காதலையோ இருவருமே உணராமல் தங்கள் உரையாடலின் போது இதை வேடிக்கையாக வேறு சொல்லிக் கொண்டனர்.

கிளம்பும் நாள் அன்று புவனாவிற்கு ஏதேனும் வாங்கி செல்ல வேண்டும் என ஏர்ப்போர்டில் பெரிய மாலின் உள்ளே சென்ற ஆதித்யா  ," ஹாய் ஏடி!!!" என்ற கிரீச் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

அங்கு பூஜா அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் முகம் சுளித்தான் ஆதி.

" ஏடி!!! ஹவ் ஆர் யு ஹன்சம்!!!" என நெருங்கிவளிடம் இருந்து சட்டென்று விலகினான்.

"நீங்கள்  எப்படி இருக்கிறீர்கள் பூஜா!" என மரியாதையாக விசாரித்தான்.

"என்ன ஏடி! நீங்க வாங்க என்று சொல்லிக் கொண்டு... பழைய மாதரியே  புஜ்ஜி என்று கூப்பிடு" என்று குழைந்தாள்.

" பழைய மாதிரி கூப்பிட நான் ஏடி இல்லை பூஜா! நான் இப்போது புவனாவின் கணவன்.. இதுவே இப்போதும் இனி எப்போதும் என் அடையாளம்" என்று பெருமையாகக் கூறினான்.

"காதலைப் பற்றி அப்போது முழம் நீளத்திற்கு வசனம் எல்லாம் பேசினாய்" என்று பூஜா கூற

"ஆம். பேசினேன் தான். என் உண்மையான உணர்வுகளை நீ உதாசீனப் படுத்தி விட்டுச் சென்றாய். ஆனால் அதற்கு உயிர் கொடுத்திருப்பவள் என் மனைவி. நைஸ் மீட்டிங் யு. டேக் கேர். நான் செல்ல வேண்டி உள்ளது " என்று எதுவுமே வாங்காமல்  விமானம் ஏறி கண் மூடியவன் விழிகளுக்குள் அவனது குட்டிமா  தான் வந்து நின்றாள்.

காதலை உணர்ந்தவுடன் அவளைப் பார்க்க வேண்டும் என்று மனம் ஒரு புறம் துடிக்க இதை எப்படி அவளிடம் சொல்வது சொன்னால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என தவிக்கவும் செய்தது.

அதே சமயம் ஆதி இன்று வரப் போகிறான் இன்று அவனுக்குப் பிடித்த பால்கோவாவுடன் தடபுடலாய் சமையல் செய்ய வேண்டும் என காரை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள் புவனா.

அங்கு தற்செயலாக ஸ்ரீயை சந்திப்பாள் என அவள் நினைத்துக் கூட பார்க்க வில்லை.

"எப்படி இருக்க ஸ்ரீராம் ?" அதிர்ச்சியில் கேட்டவள் குரல் கம்மி இருக்க

"நான் நன்றாக இருக்கிறேன். நீ ஏன் இன்னும் இப்படி இருக்கிறாய். என்னையே நினைத்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறாய். பி பிராக்டிகல்" என்றவனை

"ஜஸ்ட் ஸ்டாப் இட் ஸ்ரீராம் ...எப்போதோ இது வைரக் கல் என்று ஒரு கண்ணாடிக் கல்லைப் பார்த்து ஏமாந்து போனேன் தான்.. ஆனால் இப்போது கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமான வைரமே எனக்குக் கிடைத்த பின்னும் இன்னும் கண்ணாடிக் கல்லை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை" என்று தன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை அவன் முன் எடுத்துக் காட்டி

" இதை என் கழுத்தில் கட்டிய என் கணவர் தன்னை நம்பி வாழ்க்கையை இணைத்துக் கொண்ட பெண்ணிற்குக் கொடுத்த வாக்கினையும் நம்பிக்கையையும் உயிருள்ளவரை காப்பாற்றும் உத்தமர். சிலரைப் போல் பிராக்டிகல் என்ற போர்வையில் கொடுத்த உறுதியையும் கொண்ட காதலையும் உதறி விட்டுப் போகிறவர் அல்ல" என்று சொல் கணைகளை ஏவ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.