(Reading time: 29 - 58 minutes)

மது:  டாக்டர் நீங்கள் இதய நிபுணர் தானே...இல்லை மனநல மருத்துவரா... என்னைக் குழப்புகிறீர்களே!!! வாசகர்களே! உங்களுக்கும் தலை கால் புரியவில்லை தானே!!

புவனா: சரி புரியும் படி சொல்கிறேன். என் வேலையில் இரவு பகல் என்றெல்லாம் பார்க்க முடியாது. இப்போது தனியாக  இருப்பதால் எந்த வித இடையூறும் இல்லாமல் நான் என் பேஷன்சை கவனிக்க முடியுது. எனக்கென்று சில  விருப்பங்கள் பொழுது போக்குகள் இதையெல்லாம் நான் எந்த தடையும் இல்லாமல் அனுபவிக்கிறேன். எல்லோருக்கும் இதே தானே என்று நீங்கள் கேட்கலாம்.. உண்மை தான்... பொறுப்பு, கடமை இவற்றிற்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

மது: ஏன் டாக்டர்? உங்கள் கணவர் உங்களை காதலிப்பவராக உங்கள் பணியைப் புரிந்து கொள்பவராக இருக்கலாம் இல்லையா..

புவனா: காதல் ஒரு அழகான உணர்வு.. நமக்குள் இருக்கும் வரை மட்டுமே. இன்னொரவரோடு பங்கிட்டால் நம் சுயத்தையே அது குலைத்து வலியும் வேதனையும் தான் மிஞ்சும். என்னை மணந்து கொள்பவர் என்னைப் புரிந்து அனுசரித்து அன்போடு இருப்பார் எனில் நானும் அதே போல் அவரைப் புரிந்து அனுசரித்து அன்பு செலுத்த வேண்டுமே...அப்படி முடியவில்லை என்றால் அது நான் தெரிந்தே ஒரு நல்ல மனிதரை துன்பத்திற்கு ஆளாக்குவது ஆகாதா... புவனா எல்லோருக்கும் சந்தோசம் கொடுக்கவில்லை என்றாலும் யாருக்கும் கஷ்டத்தைக் கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்..

மது : என்ன செய்யப் போகிறீர்கள் இப்போது?

புவனா: என் பெற்றோரிடம் பேசிப் பார்க்கிறேன்.. சரி மது ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி இருக்கு. நான் ஹாஸ்பிடல்  போக வேண்டும். சாரி உங்களுக்குத் தான் கல்யாண சாப்பாடு போட முடியாது என்னால்..

மது: தாங்யூ  டாக்டர். என்னோடு நீங்கள் ஷேர் செய்து கொண்டதிற்கு.. நீங்கள்  தெரியாத ஒருவரின் நலனுக்காக இவ்வளவு யோசிக்கிறீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சாரியெல்லாம் எதற்கு...வேறு எப்போதாவது ட்ரீட் வாங்கிக் கொள்கிறேன். பை!!

நண்பர்களே!! புவனா சொல்வதிலும் ஒரு பாய்ன்ட் இருக்கத் தான் செய்கிறது.. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...எதற்கும் வாங்க நாம் விஜய் என்ன மாநாடு நடத்திக் கொண்டு இருக்கிறான் என்று பார்ப்போம்.

இவ்வளவு நேரத்தில் கொஞ்சம் ஆதித்யாவின் சீற்றம் குறைந்து காணப்படுவதால் வாருங்கள் நாம் என்ன விஷயம் என்று கேட்டு அறிவோம்

விஜய்: ஆதித்யா சார்.. எல்லோரும் கிறிஸ்துமஸ் நியு இயர் என சந்தோஷமாக இருக்கிறார்கள். நீங்கள் சூறாவளி போல் இருக்கிறீர்களே..

ஆதித்யா: அப்புறம் என்ன விஜய்.. என் அம்மா அப்பாவிற்கு இத்தனை வருடங்களில் இல்லாமல் இப்போது ஒரு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதாம். நான் அவளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

விஜய்: போங்க சார்... ச்வீட் கொடுங்க...கொண்டாடுங்க..அதை விட்டு சோக கீதம் பாடிட்டு இருக்கீங்க.. (இந்த விஜய்க்கு சோகத்திற்கும் கோபத்திற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. இவனை எல்லாம். நாங்களும் சொல்லுவோம்ல - மது )

ஆதித்யா: எனக்கு இந்த கல்யாணம் கத்திரிக்காவில் எல்லாம் நம்பிக்கை இல்லை விஜய். நான் எப்போதும்  காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பவன். என்னால் இன்னொருவரை  சுமந்து கொண்டு ஓட முடியாது.

விஜய்: ஏன் சார்? ஒரு நாள் ஓடிக் களைத்து ஓய்ந்த வேளையில் அன்போடு ஆதரவாய் துணை நிற்க ஒருவர் வேண்டாமா. (விஜய்! சூப்பர்ப்டா- மது. தம்ப்ஸ் அப் ஸ்மைலியுடன்)

ஆதித்யா: அப்படி நானும் நினைத்திருந்தேன் ஒரு காலத்தில். ஆனால் இப்போது எல்லோரும் சுயநலமான பிராக்டிகல் லைப் தான் வாழ்கிறார்கள்.  மாரல் வல்யுஸ் எல்லாம் மலை ஏறிப் போச்சு. எனக்கு  என்று சில கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கின்றன. அதை  மற்றவர் மேல் திணிக்க விரும்ப வில்லை.

விஜய்: உங்களுக்கு வரப் போகும் மனைவியும் அப்படியே நினைத்தால். உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்..

 

ஆதித்யா:  இருந்தால்... மனிதர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் என்றே கணிக்க முடியவில்லை.. இதில் எதற்கு ரிஸ்க் எடுத்துக் கொண்டு..

விஜய்: என்ன சார்.. தொழிலில் எத்தனையோ சான்ஸ் எடுத்து இருப்பீர்களே!

ஆதித்யா: ஒரு முறை பொறுப்பு எடுத்துக் கொண்டு கமிட் செய்து விட்டால் இறுதி வரை உறுதியாக இருப்பவன் நான். தொழிலிலே இப்படி என்றால் வாழ்க்கையில் இன்னும் அதிகமாகவே. ஒரு வேளை  அப்படி அதிலிருந்து தவறினால் என்னை என்னாலே மன்னிக்க முடியாது. மேலும் நீங்கள் சொல்வது போல் ஒரு நல்ல பெண்ணாக இருந்தால், ஏதோ  ஒரு சூழ்நிலையில் அந்த பெண் வேதனையில் கண்ணீர் சிந்த நேர்ந்தால்… அந்த ரிஸ்க் என்னால் எடுக்க முடியாது..

விஜய்: இவ்வளவு நல்ல பண்புள்ளவராக தெளிவான சிந்தனையோடு இருக்கிறீர்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக அமையும் சார்.

ஆதித்யா: ஓகே விஜய்.ஒரு மீட்டிங் இருக்கிறது. ஸ்வீட்  தர முடியவில்லை என்னால். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும் போது கண்டிப்பாக தருகிறேன்.

விஜய்: அதற்கென்ன சார் ... பை பை.

இடம் :சென்னை

ஒரு வாரம் கழித்து

என்ன மது  செய்வது. இவர்கள் இரண்டு பேரும் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் திருமணம் என்றாலே வெறுப்பாக இருக்கிறார்களே!!

ஆமாம் விஜய். நான் வேறு அவ்வளவு டாபிக்ஸ் இருந்தும் ரொமாண்டிக்கா இருக்கிறது என்று "திருமணதிற்குப் பின் காதல்" டாபிக்கில் கதை எழுத நினைத்தால் இப்படி நம் ஹீரோ ஹீரோயின் காலை வாரி விட்டார்களே!!!

நங்க்க்...விஜய் தான் என் தலையில் கொட்டிட்டான்.. மது கிரையிங்.

ரொம்ப சீன்  போடாதே. உன்னைப் பற்றி நம் வாசகர் நண்பர்கள் எல்லோருக்கும் நல்லாவே தெரியும்... நானே அவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்களா என்ன நடக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்... உனக்கு போட்டிக்குக் கதை எழுதுவது தான் பெரிதாக தெரிகிறது...

ஹே!! வெத்து வெட்டு !!! எல்லாம் உன்னால் தான்... டாபிக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் இப்போ தான் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கும் புவனா அதித்யாவை போய் பார்த்து பேசலாம் கிரவுண்ட் வொர்க் மாதிரி என்று சொல்லி விட்டு இப்போது என்னை குற்றம் சொல்கிறாய்...

ஷ்ஷ்ஷ்!!! இது என்ன பஸ்..டைம் எக்ஸ்பிரஸ். வா எங்கு போகுதோ தெரியல..ஏறி ஒரு ரவுண்ட் போவோம்...

இது டைம் மெஷின் மது...நாம் காலத்தில் முன்னோக்கி பயணிக்கிறோம்..

ஹே! நிஜமாவா! எந்த காலத்திற்குப் போறோம் விஜய்..

தெரியவில்லையே.. வா! பஸ் நிற்கிறது.. இறங்கி கேட்போம்..

2015 நவம்பர் மாதமாம் மது!!!

ஜாலி! தீபாவளி டைம் போல.. பாரு பட்டாசு சத்தம் கேட்கிறது..

இடம்: பெசன்ட் நகர் பீச்

நேரம்: மாலை 5 மணி, நவம்பர் 8 , 2015.

விஜய் : காற்று வாங்க போனேன்...ஒரு குரங்கை வாங்கி வந்தேன்

மது: இங்கு பாடிக் கொண்டிருப்பது ஒரு கழுதை என்று கண்டேன்

அங்கே பார் மண்டூஸ் !!!

அங்கு நம் கதாநாயகி புவனாவை கதாநயாகன் ஆதித்யா சித்தார்த் தோளில் சாய்த்துக் கொண்டு "காற்று வெளியிடை கண்ணம்மா" எனப் பாடிக் கொண்டிருக்கிறார்..

டாக்டர்!! என்னைத் தெரிகிறதா... மது !!! சொல்லவே இல்லை.. கங்கிராட்ஸ்...போங்க உங்கள் பேச்சு கா. எனக்கு   நீங்கள் கல்யாண சாப்பாடு போடாம ஏமாத்திடீங்க!!

இவங்க தான் மதுவா குட்டிமா என்ற ஆதித்யாவை

சார்! விஜய் சொன்ன மாதிரி அப்படியே ஜேம்ஸ் பாண்ட் போலவே ஸ்மார்ட்டா இருக்கீங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.