(Reading time: 29 - 58 minutes)

"புவி " என்ற ஸ்ரீராமை  நோக்கி," கால் மீ  புவனா சித்தார்த்" எனவும் "குட் தட் யு ஆர் ஹாப்பி" என்றவனை பார்த்து," எனிவே தாங்க்ஸ்..என்னை  வேண்டாம் என்று நீ உதறி விட்டுப் போனதற்கு. அதனால் தானே என் சித்து எனக்குக் கிடைத்தான் " என  நன்றி கூறி எதையும் வாங்காமல் வீடு நோக்கி விரைந்தாள்.

"சித்து..நீ எப்போ வருவ.. எனக்கு என்னவோ பண்ணுதே.. சொல்லத் தெரியலையே...சீக்கிரம் வா" என மனதில் அரற்றிக் கொண்டே பால்கனியில் உட்கார்ந்தவள் மழை பொழிவதையும் பொருட்படுத்தாமல் கண்ணீரில் நனைத்து கொண்டிருந்தாள்.

ஏர்போர்ட்டிற்கு  அவள் வராததால் டாக்சி பிடித்து வீடு வந்தவன் தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்து தன்னவளை கண்களால் தேடினான்.

எங்கு தேடியும் அவள் இல்லை.. மழை வேறு பெய்கிறது எங்கு சென்றாள் என்று பால்கனியை நோக்கி சென்றவன் அங்கு மழையில் நனைந்து கொண்டு இருந்தவளைக் கண்டு பதறிப் போய் அவளை நோக்கி விரைந்தான்

"குட்டிமா!!! அவனை அறியாமல் உயிரையே அந்த வார்த்தையில் தேக்கி அழைத்தவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் நயாகரா அருவியைக் கொட்டிக் கொண்டிருந்தது..

அமிலமே மழையாக கொட்டினால் எப்படி இருக்கும்...அப்படித் தான் துடித்தது அவன் மனம் அவளது கண்ணீர் கண்டு...

அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்கும் முன்," சித்தூ" என அவன் மார்பில் அடைக்கலம் புகுந்தாள்.

எத்தனை பேரின் இதயத் துடிப்பைக் கேட்டிருப்பாள். எத்தனை இதயங்களை சீராகத் துடிக்க வைத்திருப்பாள். இன்று தன்னவன் மார்பினில் சாய்ந்து அவனின் இதயத் துடிப்பைக் கேட்டவள் குலுங்கிக் குலுங்கி அழுத படியே," இத்தனை நாள் ஏன் சித்து உன் இதயம் என் பெயரைச் சொல்லி துடிக்க வில்லை" என்று கேட்டாள் மனைவி.

ஒரு கையினால் அவளை இறுக அணைத்து அவள் முகம் நிமிர்த்தி அவளின் கண்ணீர் துடைத்தவன்," இந்த டாக்டர் கை பட்டவுடன் தான் என்  இதயம் துடிக்கவே ஆரம்பித்திருக்கிறது  குட்டிமா" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டபடியே கூறினான்.

"சித்து...நான்...வந்து..." என தடுமாறியவளை மேலும் இறுக அணைத்து "அது தான் என்னிடம்  வந்துவிட்டாயே பேபி" என உல்லாசமாய் கூறினான்.

மது : ம்ம்ம்ம் அப்புறம்

விஜய்: விழுப்புரம்.. சென்னையில் திடீரென கொசுக்கள்  மாயமாக மறைந்து விட்டதாம். நியூசில் சொன்னார்கள்

மது : திரு திரு வென முழித்துக் கொண்டு...எப்போ சொன்னாங்க

விஜய்: நீ வாய் பிளந்து கொண்டு கதை கேட்டாய் இல்ல.. அப்போ ஊரில் உள்ள  கொசு எல்லாம் உன் வாயில் புகுந்து கொண்டதே அப்போ சொன்னாங்க

மது : உன்னை ....என விஜய்யை மொத்திக் கொண்டிருந்தாள்.

விஜய்: பாரு! நம்ம டாக்டர் மேடமும் ஆதித்யா சாரும் மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டார்கள்.

சுயநினைவிற்கு வந்த புவனா ஆதித்யா சித்தார்த் முகங்கள் லேசாக வெட்கம் பூசிக் கொள்ள

மது: நான் அப்படியே உங்கள் கதை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன்..

விஜய்: வெரி இன்ட்ரஸ்டிங்.. எப்படி இருந்த நீங்கள் இருவரும் இப்படி மாறி விட்டீர்கள். உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆதித்யா: எங்களுக்கும் ஆச்சரியம். இன் பாக்ட்  நானும் இவங்களும் அடிக்கடி அதை பற்றி பேசுவோம்.

புவனா: வாழ்க்கை மிகவும் அழகானது என்பது எப்போதுமே என் கான்சப்ட் . ஆனால் அந்த அழகான வாழ்க்கையை சித்துவின் காதலோடு ரசித்து வாழும் சுகம், அதை அனுபவித்தால் தான் உணர முடியும்.

ஆதித்யா: இந்த ஜெனரஷன்னில்  நிறைய பேர் எங்களைப் போல் திருமண வாழ்க்கைப் பற்றி ஒரு மிஸ்கன்செப்ஷன் வைத்திருக்கிறார்கள். கரியர், சுதந்திரம் எல்லாம் பறி போகுமோ என...ஏன் நாங்களே அப்படித் தான் இருந்தோம்.

புவனா: எங்கள் பேரன்ட்ஸ் தான் எங்களைப் பற்றி எங்களை விட மிக சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள்  முடிவு மிகச் சரியானதாக அமைந்தது. வாழ்க்கையில்  திருமண பந்தம் அது தரும் சொந்தம் மிக அவசியம் என நாங்கள் இப்போது புரிந்து கொண்டோம்.

ஆதித்யா: காலம் காலமாக நமது கலாசாரத்தில் திருமணம் என்பது ஒரு புனிதமான  டிவைன் பந்தமாகப் போற்றப் படுகிறது . இதற்கு நம் முன்னோர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அது நன்மைக்காகத் தானே இருக்கும்.

மது: ஆமாம் சார். என் அம்மா கூட சொல்வார்கள். ஒவ்வொரு சம்ப்ரதாயதிற்குப் பின்னும் ஆழ்ந்த தத்துவங்கள் இருக்கின்றது என்று..

ஆதித்யா: நாங்கள் இருவருமே காதல் என்ற உணர்வை ஏற்கனவே அறிந்தவர்கள் தாம். ஆனால் அந்த காதல் என்னும் உணர்விற்கு உயிர் கொடுப்பது திருமணம் தான்.

புவனா: உங்கள் இருவருக்குமே நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் மது , விஜய். நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என உண்மையாக வாழ்த்தியவர்கள் நீங்கள்..

மது , விஜய்: நாங்கள் மட்டும் இல்லை நம் வாசக நண்பர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள். அப்படித் தானே!!!

ஆதித்யா: சில்சீ ரைட்டர்ஸ், வாசகர்களும் மிக அருமை.. ஒவ்வொரு கதை, கவிதை , காமன்ட்சும் டாக்டர் வாசிச்சு சொல்வார்கள். நான் நேரடியாகப் படித்தது இல்லை எனும் போதும் இவங்க சொல்லி கேட்டிருக்கேன்.

மது: புவனா மேடம் , ஆதித்யா சார்...உங்கள் கதையை சில்சீயில் திருமணதிற்குப்  பின் காதல் என்ற தலைப்பில் போட்டி சிறுகதைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறோம்... உங்கள் அனுமதியுடன். பரிசு கிடைத்தால் உங்களுக்கும் ஷேர் தருகிறேன்.

புவனா: மது.. நீங்கள் கேட்கவும் வேண்டுமோ.. நானுமே படிக்கக் காத்திருக்கிறேன்.. எழுதி அனுப்புங்கள்..

ஆதித்யா: நானும் படிக்கிறேன் இந்த முறை... பரிசு நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் மது.. என் பரிசு என் பக்கத்திலே இருக்கிறதே.. காதலுடன் கூற புவனா கண்ணில் அந்தக் காதல் பிரதிபலிக்க…

விஜய்: ஓகே சார்... மேடம். இனி நாங்கள் இங்கே அதிகப்படி... தேங்க்ஸ் சோ மச். அண்ட் ஹாப்பி தலை தீபாவளி...

மது: தேங்க்ஸ் டாக்டர்.. தேங்க்ஸ் ஜேம்ஸ் பாண்ட் பார் சச் எ லவ்லி லவ் ஸ்டோரி.. பை..

புவனா, ஆதித்யா: பை!!! பை!!

விஜய் மதுவின் கையைப் பிடித்துக் கொண்டு டைம் மஷின் பஸ்ஸில் ஓட்டமாய் ஓடி வந்து ஏறிக் கொண்டான்...

நேரம்: இன்றைய தினம் மாலை நேரம்

சீக்கிரம் எழுத்துப் பிழை எல்லாம் பார்த்து சொல்லு... கதை அனுப்பனும் விஜய்.

கதை எல்லாம் சரியாத் தான் இருக்கு...நீ முதலில் உன் தோழி கீர்த்தனாவிற்கு தாங்க்ஸ் சொன்னியா.. அவங்க தானே கதை எழுத சொல்லி என்கரேஜ் செய்தாங்க..

கீர்த்து,மீனு,மலர்,ப்ரீ,சுஜி எல்லோரும் என்கரேஜ் பண்ணினாங்க. நாங்க தேங்க்ஸ் சொல்லுவதில்லை என்று முடிவு செய்திருப்பதால் எல்லோருக்கும் ட்ரீட் தருவேன். ஸ்வீட்டிக்கு தாங்க்ஸ் சொல்லணும் விஜய்.

இந்த ஜேம்ஸ் பாண்ட் கதை எழுதினாங்களே அவங்களா...

ஆமாம்.. இந்த டாபிக் பற்றி நான் எப்படி எழுதுவது என்று முழித்துக் கொண்டிருந்தேனா... அவங்க தான் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து அவர்கள் அனுபவத்தை எழுதுங்க என்று உற்சாகம் கொடுத்தாங்க..

கதை எழுத நீ மானசீகமா குருவாய் ஏற்றுக் கொண்ட புவனேஸ்வரி மேடமை விட்டு விட்டாய் மண்டூஸ்...

அவங்க பேரை தான் நான் கதாநாயகிக்கு வைத்து குரு தக்ஷணை செலுத்தி விட்டேனே....

இது எல்லாம் ஓவர்.. புவி மேடம் இவளை நம்பாதீங்க...பெயர் ஒரு ஸ்வீட் கோ இன்சிடன்ஸ்.

போடா!! வெத்து வேட்டு..இதோடு உன்னைக் கழட்டி விடுகிறேன்..ஓடிப் போ..

ஹே! கதையைப் படித்து சில்சீயில் இந்த விஜய்க்கு நிறைய ரசிகைகள் கிடைப்பாங்க, அவங்களை எல்லாம் விட்டு விட்டு எப்படி போவது.

மது தான் சில்சீ செல்லம் தெரியுமா.. உன்னை எல்லாம் யாரும் கண்டுக்கக் கூட மாட்டாங்க...

எப்படிங்க இந்த ஸெல்ப் டப்பாவை வச்சு சமாளிக்கிறீங்க சில்சீ பிரண்ட்ஸ்..யு ஆர் கிரேட். தாங்க்ஸ் சில்சீ அட்மின் ...ஒரு அருமையான காதல் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்தமைக்கு... பை பிரண்ட்ஸ்.

சரி சரி போதும் நீ அளந்தது.. பிரண்ட்ஸ் கதை பிடித்திருந்தா பாராட்டு எல்லாமே மதுவிற்கு... மொக்கையா இருந்தா இந்த விஜய்யை மொத்துங்க.... டாட்டா..பை பை!!!     

This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.