(Reading time: 20 - 40 minutes)

 

டாக்டர்....கொஞ்சம் நேரம் முன்னாடி இதுல வேற போட்டோ இருந்துச்சு இப்போ மாறி போயிருக்கு?” – சந்தோஷ்.

“இல்லையே இதே போட்டோதான் எப்பவும் இங்க இருக்கு...” – டாக்டர் போட்டோவை பார்த்து விட்டு.

“இல்ல டாக்டர் ...எனக்கு நல்லா நியம்பகம் இருக்கு...இங்க வேற ஒரு போட்டோதான் இருந்துச்சு” என்று சந்தோஷ் அடித்து சொன்னான்.

“சந்தோஷ் நீங்க இன்னும் வேற நினைப்போட இருக்குறதால அது உங்களுக்கு அப்படி தோணுது....” – டாக்டர்.

சந்தோஷ்க்கு சந்தேகம் வந்தது “டாக்டர்....ஒருவேளை இப்போ நடக்குறதும் கனவா?” என்றான் மெல்ல.

டாக்டர் முகத்தில் ஒரு வில்லத்தனமான சிரிப்பு தெரிந்தது. சுற்றி இருக்கும் பொருட்கள் கலங்கலாக தெரிய ஆரம்பித்தது. எல்லாம் மாறுவதற்கு தாயராகுவது சந்தோஷ்க்கு தெரிந்தது. சந்தோஷ் பயத்துடன் டாக்டர் முகத்தை பார்த்தபடி எழுந்தான்.

“சபாஷ் சந்தோஷ்....கண்டுபிடிச்சிட்டியே” என்று டாக்டர் சிரிப்போடு கூறியவுடன் எல்லாம் கலைந்தன. அப்போதுதான் அதெல்லாம் கனவுகள் என்று அவனுக்கு புரியவந்தது.

ளீர்” என்று அவன் கன்னத்தை யாரோ அறைந்தார்கள். சந்தோஷ் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவன் ஒரு இருட்டறையில் மண்டியிட்டு இருந்தான். அவன் முன் இன்டு பேர் இருந்தனர். அதில் ஒருவர் போலீஸ். அவர்தான் சந்தோஷை கன்னத்தில் அறைந்தார். இன்னொருவரும் போலீஸ் தான் ஆனால் சாதாரன உடையில் இருந்தார். அவர்தான் சந்தோஷிடம் பேசினார்.

“ஏண்டா தம்பி ...எதுக்குடா இவர்கிட்ட அடிவாங்கி சாகுற....அந்த பசங்க யார்னு சொல்லிடு வீட்டுக்கு கிளம்பி போயேண்டா!” – என்றார் அவர் உரக்க.

“என்ன ...என்ன சொல்றீங்க...எனக்கு ஒன்னும் புரில!” என்று சந்தோஷ் மயக்கம் தெளியாமல் பதறி உளறினான்.

“டேய்...இதையே தான் வந்திதில இருந்து சொல்லிக்கிட்டு இருக்க...நீ அடிவாங்கி சாக போற பாரு!” என்று போலீஸ் கையை ஒங்க மற்றோவர் தடுத்தார்.

“சார்...இருங்க சார்...அறைவாங்குனதில பைய்யனுக்கு மயக்கம் தெளியில போல....இருங்க பொறுமயா கேப்போம்!” என்று அந்த மற்றொருவர் சந்தோஷ் பக்கம் மெல்ல வந்தார்.

“ஏண்டா நேத்து அந்த பொண்ணு வீட்ல கல்லை வீசிட்டு போனது நீங்கதான்னு எங்களுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு....ஒழுங்கு மரியாதையா...எறிஞ்சவன் யாரு...மத்த பசங்க யார்னு சொல்லிடு...உன்ன விட்டுடறோம்” – என்றார் அவர்.

சந்தோஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.

“சார்..எனக்கு சத்தியமா ஒன்னும் புரில சார்....எனக்கு ஐப்போ என்ன நடக்குதுன்னு ஒன்னும் தெரில சார்...என்ன விட்ருங்க....” என்று சந்தோஷ் அழ ஆரம்பித்தான்.

“பொறுமையாவே சொல்லகூடாது” என்று வெறியோடு கத்தியபடி அருகில் இருந்த அந்த போலீஸ் அவனை காலால் உதைத்தார்.

சந்தோஷ் பின்னே தரையில் விழுந்தான். அவன் சட்டையை  பிடித்து யாரோ மீண்டும் இழுக்க அதோடு அவன் நண்பர்கள் கத்தும் சத்தம் கேட்க உடனே அவன் முழித்தபோது அவன் எதிரி ஒருவன் அவனிடம் சண்டை போட்டு கொண்டுரிந்தான். அவனை பிடித்து சந்தோஷ் நண்பர்கள் சந்தோஷை காப்பாற்றி கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லறோம் ஒரு சாலையில் இருப்பதை சந்தோஷ் அப்போதுதான் உணரத்தான்.

“ஹே இனிமேல் அவன் உன் வரமாட்டன் விட்டுரு....டேய் சந்தோஷ் ஏண்டா அடிவாங்கிட்டு இருக்க.....இவன திரும்பி அடிடா....அன்னிக்கு வாங்கன மாதிரி இனிக்கும் இவன நீ அடிச்சாதான் அடனகுவான்” என்று சந்தோஷ் நண்பர்கள் அவனை சுற்றி கத்தி கொண்டிருந்தனர்.

சந்தோஷ் ஒன்றும் புரியாமல் எல்லாரையும் பார்த்து பதறியபடி முழித்தான். அவன் எதிரி அவனை மீண்டும் ஓங்கி அடித்தான், சந்தோஷ் அடிவாங்கி திரும்பும் போது அங்கே அவனின் டாக்டர் இருந்தார். சந்தோஷ் மீண்டும் கண்ணை கசக்கி பாக்கும் போது. அவன் மீண்டும் ஆஸ்பிடலில் டாக்டோ முன் இருந்தான்.

“வேடிக்கையா பேசுறீங்க சந்தோஷ்....ம்ம்ம்ம் அப்படி பண்ணா முழிக்க வாய்ப்பு இருக்கு.....பட் உங்களுக்கு அப்போ தற்கொலை பண்ற எண்ணம் வரணுமே” என்று  சிரித்தபடி டாக்டர் அந்த நாற்காலி மேஜையில் இருந்த போட்டோவை தெரியாமல் கிழே தள்ளி விட அதை மீதும் தரையில் இருந்து எடுத்து மேஜை மீது வைத்தார். சந்தோஷ் அந்த போட்டோவை பார்த்தபோது அந்த போட்டோ வேறு ஒரு போட்டோவாக மாறியிருந்தது.

இம்முறை சந்தோஷ் க்கு ஒரு வழி கிடைத்தது. சந்தோஷ் உடனே டாக்டர் டேபிள் மேல் இருந்த கத்தியை எடுத்தான். டாக்டர் பதறி பொய் அவனை பார்த்தார். சந்தோஷ் உடனே தன் கழுத்தை அறுத்தான்.

“டேய் பகல கூட தூங்கிட்டு தான் வருவியா?’..” என்று அவன் பக்கம் இருந்த நண்பன் சந்தோஷை எழுப்பிவிட. சந்தோஷ் முழித்து பார்த்தான். அவன் கல்லூரியை விட்டு ரயிலில் வரும் போது தான்  அவன் கனவு கண்டிற்பது அவனுக்கு விளங்கியது. ஆனால் அவனை அழைத்து செல்லும் நண்பன் யாரென்று அவனுக்கு தெரியவில்லை. சந்தோஷை அவன் ரயிலில் இருந்து வெளியே அழைத்து சென்றான். அவன் சந்தொஷோடு ரொம்ப பழக்க பட்டதுபோல் பேசிக்கொண்டு வர. சந்தோஷ்க்கு குழப்பம் அதிகமானது. சந்தோஷ் அவனை நிறுத்தி பேச அராம்பிதான்.

“யார் நீ?” சந்தோஷ்.

“என்னடா திடிர்னு இப்படி கேக்குற?...என்ன இன்னும் தூக்கம் தெளியலையா?” – வான் கண்டுகொள்ளாமல் சென்றான். உடனே வனை மீண்டும் நிருந்தினான் சந்தோஷ்.

“நீ யார்னு எனக்கு தெரில...சொல்லு யார் நீ” – சந்தோஷ்.

“என்னடா கலாய்க்கிறீயா?...ஒழுங்கா மொக்க போடறத நிறுத்து” என்று சிரித்தான் அவன்.

“நீ யார்னு தெரிலன்னு சொல்றேன்ல? சொல்லு..”என்று சந்தோஷ் கோபமாக கத்தினான்.

கொஞ்சம் பயந்து போன அவன் “ டேய்...நான் தான் ராகுல் டா....என்ன ஆச்சு உனக்கு?.....மாலை கண் வந்திருச்சா?” – என்றான் அவன் . சந்தோஷ் அதிர்ச்சியை இருந்தது. ஒருவேளை இவ்வளவு நேரம் நாம் கனவில் கண்டது வேறு ஒரு ராகுல் என்பது அவனுக்கு புரிந்தது. சந்தோஷ் அவனோடு யோசித்து கொண்டே நடக்கும் போது அவனை கடந்து ஒருவன் சென்றான். அவன் சந்தோஷ் கனவில் பார்த்த ராகுல் என்னும் அவன் நெருங்கிய நண்பன் போலவே இருந்தான். உடனே சந்தோஷ் ஓடி சென்று அவனை இழுத்தான். ஆனால் அவனோ சந்தோஷை ஒரு எதிரி போல் பார்த்தான்.

“நீ தான ராகுல்?” என்று சந்தோஷ் அவனை கேட்க உடனே அவன் சந்தோஷின் கையை தட்டி விட்டு “என்னடா கலாய்கிரியா? மரியாதையா போய்டு ...அப்புறம் வாய ஒச்சிடுவேன்” என்று கூறி கொண்டே சென்றான்.

அவன் அருகில் பதறி பொய் ஓடி வந்த அவன் நண்பன் “ டேய்...லூசாடா நீ.....அவன பொய் ஏண்டா வீணா குப்டு பேசுற?,....அவனுக்கும் உனக்கும் தான்  ஆகதுல?....போன வாரம் கூட ரெண்டு பேரும் சண்டை போட்டு கிட்டீங்க....மறந்து போச்சா” என்றான். சந்தோஷ் உடனே இதுவும் கனவுதான் என்ற முடிவுக்கு வந்தான். உடனே சுற்றி பார்த்தான். அங்கே ஒரு ரயில் வேகமாக வந்தது. உடனே ஓடி சென்று தண்டவாளத்தில் ஓடினான். அவன் நண்பன் அவன் பின்னே கத்திகொண்டே ஓடினான். ரயில் நேராக வந்து சந்தோஷை மோதியது.

சந்தோஷ் தோலை இடித்துக்கொண்டு ஒருவன் கடந்து போனான். சந்தோஷ் தன் நண்பர்களோடு மைதானத்தில் இருந்த நேரம் அது. இடித்து விட்டு போனவன் வேறு ஒரு ஆள். அவன் பார்பதற்கு முதலில் அவனுக்கு வந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் வேலை செய்யும் சுந்தர் போலவே இருந்தான்.

“ஏய் ...பாத்து போமாட்டியா நீ” என்றான் அவன். சந்தோஷ் அவனை விடாமல் பார்த்தான். அந்த ஆள் மீண்டும் சந்தோஷை நோக்கி வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.