(Reading time: 9 - 17 minutes)

ப்படியே ஒருவழியா Psychiatrist-Engineer ல இருந்து தர்ஷினி-ப்ரியன் ஆகியாச்சு.

எப்போவும் எந்திரிக்கற டைம விட சீக்கரம் எழுந்து ரெடியாகிட்டு இருந்த சரண பார்த்துட்டு ப்ரியா அவசரமா தோசை சுட்டு சட்னியும் அரைச்சு வெச்சாச்சு. (முன்னேற்றம்)

 ‘தர்ஷினி, நான் கெளம்பறேன்’

 ‘புடிங்க’ (தோசையும் சட்னியும் தான்).வேகவேகமா சாப்டு சரண் கெளம்பியாச்சு.

என் வானம் விடிவது உன்னாலே

என் வாசல் திறப்பது உன்னாலே

என் வீதி நிறைவது உன்னாலே

என் நிலவும் வெயிலும்

மழையும் குளிரும் உன்னால் உன்னால்

‘சொல்லு தர்ஷினி’

‘நான் அண்ணிய பார்க்க போலாம்னு இருக்கேன்’

‘அதெல்லாம் கேக்கணுமா போய்டுவா’

அத சொல்லத்தான் கூப்டேன்

 ‘சரி, Thanks for the info.’

 ‘நீங்க சாப்டீங்களா’

 ‘இனிமேதான், பாய்’ ‘பாய்’

'அண்ண்ணி’

‘பார்டா, உனக்கு நானெல்லாம் கூட தெரியரனா’

‘ஆரம்பிச்சிடீங்களா தர்ஷன் எங்க?’

தாயே இப்போ தான் போராடி தூங்க வெச்சி இருக்கேன் எழுப்பி விட்டுடாத’

அப்படியே எல்லா கதையும் பேசி முடிக்கறதுகுள்ள இருட்டிருச்சு.

ப்ரியா லேட் ஆகிடுச்சு உன் வீட்டுகாரர வந்து கூட்டிபோக சொல்லு (சாப்டீங்களானு கேட்டா திருப்பி கேட்க தெரியல அவருதான் திருப்பி கூட்டிபோகபோறாரு

‘இல்லை அண்ணி நானே கெளம்பறேன்’.   

 கடவுள் இல்லை என்றேன்

 தாயை காணும் வரை

கனவு இல்லை என்றேன்

ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன்

 உன்னை காணும் வரை.

  ‘சொல்லுங்க ப்ரியன்’.

 ‘லேட் ஆகிடுச்சு, நீ அங்கேயே இரு, நான் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்’.

 ‘சரி, பாய்.’

 ‘ஹே, என்னமா ரிங்டோன் வெச்சி இருக்க, ப்ரியனா!, எல்லாம் சரியாகிடுச்சு போல’                    

‘அண்ணி, கோபமெல்லாம் இல்லை ஆனா என்னமோ குறையுது’

 போடி, நீயும் உன் theory’.

இப்படியே சிலபல மாற்றங்களோட கொஞ்ச நாள் ஓடி ப்ரியா பர்த்டேவும் வந்துடுச்சு.

ஹாப்பி பர்த்டே ப்ரியா’

‘தேங்க்ஸ் அண்ணி’

‘உன் ஹஸ்பண்ட் என்ன குடுத்தாரு’

‘அண்ணி அவருக்கு எப்படி என் பர்த்டே தெரியும்?’

‘சரி, நான் அப்றமா பேசறேன்.’

ஏன் திடிர்னு போன் வெச்சிட்டாங்க?! சரி மறுபடியும் போன் பண்ணும்போது கேட்டுக்கலாம். அம்மா,அப்பா,அத்தை,மாமா கிட்ட எல்லாம் பேசிட்டு பொறுமையா வந்தா, வெளிய கையில பொக்கையோட ப்ரியன்.

 ‘ஹாப்பி பர்த்டே தரு’

இந்த டயலாக்குகே ப்ரியா பிளாட் அடுத்த ஒரு கிப்ட் வேற.

 ‘என் பர்த்டே உங்களுக்கு எப்படி தெரியும்?!’

 ‘இந்த கிப்ட ஓபன் பண்ணா, உனக்கே தெரியும்.’

           APPOINMENT ORDER

       FOR MRS. PRIYADHARSHINI PRIYACHARAN

   FROM

           BLOSSOMS SCHOOL FOR DYSLEXIA CHILDREN

 

‘எப்படி உங்களுக்கு தெரியும் ப்ரியன்’ (சந்தோசத்துல நமக்கு கூட பேச முடியாம போகும்னு ப்ரியாக்கு இப்போதான் தெரியும்)

‘எனக்கு இன்னும் கொஞ்சமும் கூட தெரியும்.’

‘மழை நல்லா பெய்யும் போது பஸ்ஸ்டாண்ட்ல நின்னுட்டு, மழை நின்னதும் மரகிளைய இழுத்து அந்த மழைதுளில நனையற. இன்டிகேட்டர் போடாம கிராஸ் பண்றவங்கள, அவங்க இன்டிகேட்டர ஒரு பார்வை பார்த்துட்டு போற ஒரு பொண்ண எனக்கு தெரியும்.’

‘என் காலேஜ் பக்கத்துல எங்கேயாவது வேலை பார்த்தீங்களா?’

‘ஹே, Psychiatrist கலக்கர’

‘இதெல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல’

‘ஹே, அந்த ப்ரியதர்ஷினிய தெரியும் அவ்வளவுதான். ஆனா லவ் பண்ணதெல்லாம், எனக்காக அவசரமா சமைக்க பழகன, நான் தூங்கிட்டனான்னு பார்த்துட்டு என் கழுத்து வலிக்கு தைலம் போடற என் பொண்டாட்டிய தான்பா,’

‘திருடா அன்னிக்கு தூங்கலையா நீ. வேற என்ன என்ன ஃபிராட் வேலை எல்லாம் பண்ணி இருக்க! என் resume எப்படி கெடைச்சது. ஒ அண்ணியா, அதான் நான் அப்புறம் பேசறேன்னு எஸ்கேப் ஆகிட்டாங்களா.

‘போதும்டி அடிச்சது’  

‘ப்ரியன் உம்மேல ரொம்ப கோபமா இருந்தேன், கல்யாணம்னாலே பயந்துகிட்டு இருந்தேன் அதெல்லாத்தையும் நீ சரி பண்ணிட்ட. அதுவும் இந்த ஸ்கூல் ஆர்டர் நான் எதிர்பார்க்கவே இல்லை’

‘ஹே கொஞ்ச நாள் எக்ஸ்பீரியன்சுகாக வொர்க் பண்ணு அதுக்கு அப்புறம் நாமலே ஸ்டார்ட் பண்ணலாம். உன் ஆம்பிஷன்படி, ஹே மொறைக்காத, ஒட்டு எல்லாம் கேக்கல அதுவா காதில விழுந்ததுதான்.

‘I LOVE YOU டா’

‘தேங்க்ஸ்’

‘எதயாவது நீ சரியா பேசி இருக்கியா’

‘I Don’t Want to Say I love, I Just Want to Prove It.’

இனிமே லைப் முழுக்க அவரு Prove பண்ணட்டும் நாம கெளம்பலாம்

This is entry #13 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.