(Reading time: 10 - 19 minutes)

 

டேய் உன்ன எவ்ளோ சொல்லி கூட்டி வந்தேன் இப்டி டோட்டளா கவுத்திட்டியே என்ற அதிர்ச்சியில் இருந்த ஆனந்தி தன் தோழியை நோக்க அவள் அதிலிருந்து இன்னும் மீள வில்லை

சரிடா செல்லம்  என்ன திடீர்னு  ஜீவாப்பாட்ட பேசனும்னு தோனுதா என்றுகேட்க அவனும் ஆம் என்று தலையாட்ட 

சரி நாம வீட்ல போய் ஜீவாப்பாட்ட நேத்து போலவே பேசுவோம்  என்று கூறிய தோழியை கண்கள் விரிய நோக்கினாள் வாணி

சரி நீ போய் ப்ரியா கூட விளயைாடு போ என்று சமாதானம் பேசி அனுப்பி விட்டு திரும்பிய தோழியை ஒரு பிடி பிடித்தாள் வாணி

யேய்  என்னடி  சொல்றான் விஜய் ,ஜீவா  அவன் எப்போ பேசினான் 

சொல்லுடி என்று உலுக்கினாள்.

அப்ப்ப்ப்பாபா விடுடி எனன அழுத்தம் பாவம்  அபினவ் என்று பேச்சை மாற்றினாள்.

என்ன ?என பேர் அடிபடுது என்று அங்கு வந்தான் அபினவ்  .

பாரங்க அண்ணா அய்யோ கை ய விடுடி வலிக்குது என்றாள் பொய்     வதனையோடு

இவ பண்ணி வச்சிருக்க வேலை தெரிஞ்சா நீங்களும் இவள நாலு சாத்து சாத்துவிங்க என்று கூறி அவள் செய்ததையும் கூற இப்போது அதிர்ச்சியாவது அவன் முறையாயிற்று 

என்ன ஆனந்தி இது இல்லாத ஒருத்தர இருக்ற  மாதிரி காண்பிச்சா பின்னாடி அதுவே அவனுக்கு மன அழுத்தத்த தரலாம் என்று ஒரு மருத்துவனாக அவளுக்கு புரிய வைத்தான்.

அண்ணாணாணாணாணாணா, என்று அதிர்ந்து ஒலித்தகுரலில் ஆடிப் போயினர், வாணியும் அபினவும்.

முதலில் சுதாரித்த வாணி,சாரிடி 

எங்களுக்கு என்ன சொல்றதுனே தெரியல

விஜி வந்து அப்டி சொன்னதும் ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டேன் தெரியுமா? சரி விஜி ஏன் இப்டி சொல்றான். அவன்ட்ட என்னத்த சொல்லி தொலைச்சிருக்க...

என்றுகெஞ்சலில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தாள்

(இருக்காதா, பின்னே மேடமோட மனக்கோட்டையே மணல் கோட்டையானதுல பயங்கர கோபத்துல இருக்காங்க) 

நேற்று...

யாரோ இன்று ப்ரியா  போல் நேற்று முதன்முதலில் தந்தை பற்றி பேச அவன் ஆனந்தியிடம் கேட்டான் எல்லா மழலையர்களை போல் 

நம்ம அப்பா எங்மா.,என்று

முதலில் தயங்கியவளை எதோ ஒரு சக்தி உந்த கூறினாள் அம்மழலையிடம்

அப்பா ஊருக்கு போயிருக்காங்டா செல்லம், விஜிமா பெரிய ஆளானதும் வரேனு சொல்லிருக்காங் என்று கூறியவளுக்கு தன்னையும் மீறி வலித்தது.

ம்ம்ம். அப்டினா நானு விக்கி அண்ணா மாறி சீக்கரம் வளரனும் இல்லையாமா? என்று அப்பிஞ்சு தன் நிலை பற்றி யோசிக்கலானான்.

சில காலம் இப்படியே சமாளிப்போம. அப்போ தான் கொஞ்ச நாளைக்கு அப்பா பத்தி பேச மாட்டான் என்றுஎண்ணியளுக்கு என்ன தெரியும் அவன் மறு நாளே மீண்டும்  தொடங்குவான் என்று.

அவள், எதிர்பாராத இன்னொன்று அவன் இப்போதே அப்பாவை பார்க்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று அவன் கூறியது தான்.

சில நேரம் யோசித்தவளுக்கு தோன்றியதை செய்தாள். ஜீவாவின் நினைவுகளான தங்கள் திருமண ஆல்பம்  மற்றும் Sweet memories. எனப்படும் குறுந்தகடையும் சிலசில துணுக்குகளாக அவனிடம் காண்பித்து விட்டு அவனுக்கு மெயில் அனுப்புவது எப்படி என்றும் கற்பித்தாள்

உனக்கு எப்போலாம் ஜீவாப்பாட்ட பேசனும்னு தோனுதோ அப்போலாம் இங்க அப்பாக்கு மெய்ல் அனுப்பு அப்பா ப்ரீயா இருக்கும் போது உனக்கு பதில் அனுப்புவார் என்றும் கூறினாள்.

அனுமா, ஏன்டா இவ்ளோ கஷ்டப்படுற பேசாமஇன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா. என்றாள் கவலையோடு.

புன்னகைத்த ஆனந்தி, இப்போ எந்த மாப்பிள்ளை என்றாள் குறும்போடு.

தலை குனிந்த வாணி இவரோட தம்பி வைபவ் தான். அவரும் கல்யாணம் ஆன ஆறு மாசத்துல மனைவிய இழந்தட்டு நிக்கறாரு.  ஆனா உன்ன மாதிரி கல்யாணமே வேண்டானு சொல்லல என்றாள் பெருமையாக

அதான் நீயே சொல்றியே என்ன போல இல்லனு பிறகென்ன விடு. என்றாள் விட்டேற்றியாக

அவள் விடு என்றதும் அப்படியே விட்டாளௌ அது ஆனந்தி இல்லையே.

அனு என்னடா, விஜிக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ண கூடாதா என்றாள இரங்கி விட்ட குரலில்.

ப்ச், வாணி, நா ஒன்னு கேபப்பேன் அதுக்கு பதில் சொல்லு.

இப்போ என்னோட நிலைல ஜீவா இருந்து அவர் நிச்சயம் இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பாருன்னு உன்னால உறுதியா சொல்ல முடியும்னா நா நிச்சயமா இந் கல்யாணத்துக்கு சம்மதிக்றேன்.

என்ன பதில் கூறுவாள் இதற்கு நிச்சயம் ஜீவா இன்னொரு கல்யாணம் செய்ய மாட்டார் தான் .ஏனெனில் அவர்கள் காதல் அப்படி. 

விஜி இல்லனா இன்னக்கி ஆனந்தி கூ உயிரோட இருந்திருபபானு சொல்ல முடியாது.இப்போ அதே விஜய்யை காரணம் காட்டி இன்னொரு திருமணம் செயய்ய சொன்னால் , அவளின் மனம் என்ன பாடுபடும்.

தன் தோழியின் நிலை யெண்ணி கண்கள் கண்ணீர் சுரக்க அதை துடத்த ஆனந்தி,

ஜீவா அடிக்கடி சொல்வார் அவரோட ஆனந்தம் நான்னு. அது போல என்னோட ஜீவனும் அவர்தான். நான் உயிரோட இருக்கற வர என் ஜுவனும் என்னோடு தான் இருக்கும்.

என்று கூறியவளை தோழியாய் பெற நான் என்ன தவம் செய்தேன் என்று உள்ளுக்குள் கசிந்தாள் வாணி.

ரு ஆண் தனியாக வாழ அனுமதிக்கும் இந்த சமூகம் ஏன் ஒரு பெண் வாழ்வதை தவறாக கருத வேண்டும்.

ஒரு ஆணிண் வெற்றிக்கே காரணமாய் இருப்பவள். அவள் வெற்றி கொடி ஏற்ற மாட்டாளா.

கண்ணில் பெருமை பொங்க அவளின் ஜீவனோடு செல்லும் ஆனந்தத்தை கண்டு கொண்டிருந்தாள் வாணி.     

This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.