(Reading time: 21 - 42 minutes)

நீயில்லாமல் நானில்லை – ஹர்ஷி

This is entry #16 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

னு, “சுஜீத் சொன்னா புரிஞ்சுகோங்க என்னால இப்போ வர முடியாது.எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.நீங்க போறதுனாபோய் பார்த்துட்டு வாங்க,நான் வரலை பை”.போனை வைத்த இருவருக்குள்ளும் எரிமலை வெடித்துக்கொண்டு இருந்தது.சுஜீத்குமாருக்கோ இவள் ஏன் தான்சொல்ல வருவதை புரிந்துகொள்ளாமல் இப்படிப்பேசுகிறாள் என்ற கோபம்.அவளுக்கோ தன்னையும் தன்குடும்பத்தையும் பிரித்தவர்களை ஏன் சென்றுபார்க்க வேண்டும் என்ற எண்ணம்....

அனு-சுஜித்குமார். இருவரும் காதலித்து வீட்டில் போராடி பெற்றவர்களின் சம்மதத்தோடு மணம்புரிந்து பத்துமாதங்களே தாண்டிஇருந்தன.திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் காதல் பறவைகள் போல் ஒற்றுமையாக இருந்தவர்கள் கோபப்பறவைகளாக(அதாங்க அங்க்ரிbird)ஆக மாறி இப்போ டாம் அண்ட் ஜெர்ரிஆக எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டனர்.இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பி.இ முடித்து ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் இருந்தனர்..

அனு வீட்டிற்கு வரவே மணி பத்து.அவர்களது ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்ததால் வேலைப்பளுவும் அதிகம்.சோர்ந்துபோய் வந்தவளை பூட்டிய வீடுதான் வரவேற்றது.களைப்பாக இருந்ததால் உணவு உண்ணாமல் படுக்க சென்றுவிட்டாள்.சுஜிதிற்கு இரவுநேர ஷிபிட் என்பதால் அவன் வேலைக்கு சென்றுவிட்டான் என்று நினைத்துவிட்டாள்.ஆனால் அவன் அம்மாவை பார்க்க சென்று இருந்தான்.மதியம் திடிரென்று அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபதாகவும் தகவல் வந்தவுடன் கிளம்பிச்சென்றிருந்தான்.அவர்கள் அனுவை பார்க்கவேண்டும் என்று சொன்னதால் அவளை வரசொன்னான்,ஆனால்அவளோ வேலையை காரணம் காட்டி மறுத்துவிட்டாள்.ஆனால் அவன் முழுதாக என்ன சொல்ல வருகிறான் என்று கூட கேட்காமல் போனை வைத்துவிட்டாள்.இதுவே அவனின் கோபத்தை அதிகப்படுத்தியது.

Neeyillamal naanillai

முந்தினநாள் சாப்பிடாமல் தூங்கச்சென்றதால் காலையில் தலைவலியுடன் எழுந்தாள்.தன் வேலைகளை முடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள் சுஜீத் பேப்பர் படிப்பதை பார்த்து அவனிடம் சென்றாள்.

அனு,”சுஜீத் அத்தை எப்படி இருக்காங்க?” என்று கேட்டவளை நிமிர்ந்து கண்களில் அனல்பறக்க அவளை பார்த்து முறைத்துவிட்டு எழுந்து சென்றான்.இது என்ன பார்வை என்று நினைத்துக்கொண்டு “சுஜீத் நில்லுங்க.என்னாச்சு?ஏன் பதில் சொல்லாம போறீங்க?என்று கேட்டவளை நின்று திரும்பிபார்தவன் “ஏன் உனக்கு தெரியாதா?நான் ஏன் பேசாமபோறேனு?நேத்து நான் பேசிட்டு இருக்கும்போதே போனை கட் பண்ணிட்ட?இப்போ மட்டும் நான் பேசணுமா?அனு”நான்தான் சொன்னேன்ல நான் ஒரு முக்கியமான மீடிங்க்ல இருந்தேன்னு”.சுஜீத்,”சரி மீட்டிங் முடிஞ்சு போன் செஞ்சு இருக்கலாம் ஏன் பண்ணல?ஒத்துக்கறேன் அம்மா நம்ம கல்யாணதப்ப அப்படி செஞ்சிருககூடாதுதான் அதுக்காக நீ அவங்கள மதிக்காம இருப்பியா?” தன் அம்மா தங்களுடைய கல்யாணத்தில் செய்த கலாட்டாவினால் தான் இவள் நேற்று தான் அழைத்தும் வரவில்லையோ என்ற கோபத்தில் கேட்டவனை பார்த்து முறைத்தாள்.அனு”சுஜீத் புரிஞ்சுகோங்க எனக்கு வேலை அதிகமா இருந்ததால தான் என்னால வரமுடியல.நீங்க நினைக்கிற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.என் போனில் சார்ஜ் இல்ல அதான் என்னால பேசமுடியல”.எப்படியாவது தன்னுடைய நிலையை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் கூறினாள்.ஆனால் அவனோ எந்த காரணத்தையும் ஏத்துக்க தயாராகஇல்லை. “சரி போனமாசம் எனக்கு உடம்பு சரி இல்லனு லீவ் போட சொன்னதுக்கும் வேலை இருக்குதுன்னு சொன்ன, இப்போ அம்மாவை பார்க்கணும்னு சொல்றப்பவும் முடியாதுன்னு சொல்லற என்ன நெனச்சுட்டு இருக்குற நீ?உன் இஷ்டத்துக்கு தான் இருப்பியா?உனக்கு குடும்பத்தை விட வேலை தான் முக்கியமா??...என்று பேசிக்கொண்டு இருந்தவனை “சுஜீத் ஸ்டாப் இட்”..என்று அனுவின் கோப குரல் தடுத்து.அனு”இப்போ என்ன ஆச்சுனு இப்படி பேசுறிங்க??எனக்கு வேலை இருந்ததால தானே என்னால லீவ் எடுக்க முடியாதுன்னு சொன்னேன்..என்று அவளும் கோபத்தில் பேச தொடங்கினாள்.இருவருக்கும் சண்டை முற்றியது..அனு”உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்துக்க தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டின்களா??என்று கேட்டவளை ஓங்கி அறைவிட்டவன் “என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா??உனக்கு நான் முக்கியம்னா வேலைய விட்டுடு...இல்லை வேலை தான் முக்கியம்னா.......ஏதோ சொல்ல வந்தவன் அவளின் அதிர்ந்த முகத்தைக்கண்டு பேசாமல் சென்று விட்டான்.அனு கோபத்தோடும் அதிர்ச்சியோடும் அங்கேயே நின்றுவிட்டாள்.அன்று முழுவதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளவில்லை.இருவரும் மற்றவர் பேசியதை நினைத்து பார்த்தார்களே தவிர தாங்கள் பேசியதை மறந்துவிட்டார்கள்...ஹ்ம்ம்

மறுநாள் இரவு சுஜீத் அவனின் வேலை விஷயமாக நியூயார்க் செல்ல இருந்தான்.அவன் கிளம்பும் வரையிலும் அவள் வெளியில் வரவேயில்லை.அவன் கிளம்பும் நேரம் அவளிடம் சொல்லிவிட்டு செல்லலாமா என்று யோசித்தவன் என்ன நினைத்தானோ அவளிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டான்.அவன் கிளம்பி பத்து நிமிடங்கள் கழித்து வெளியில் வந்து அவனை தேடினால் அவனை காணவில்லை.அவன் தன்னிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டனா??அவன் கிளம்புவானே என்று நினைத்து தன் கோபங்களை விட்டுவிட்டு வந்தவளுக்கு அவன் தன்னிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டான் என்றதை நம்பமுடியவில்லை.நம்பியவளுக்கு ஏமாற்றமும் கோபமுமாக இருந்தது.

இரண்டு வாரம் கடந்து இருந்தது.இருவருக்குமே வேலை அதிகம் இருந்ததால் ஒருமுறை கூட இருவரும் பேசமுயற்சிக்கவில்லை.இருவரும் தங்கள் துணையின் துணையை தவிர வேலையின் துணையையே நாடினர்.அனு அவளுடைய ப்ராஜெக்ட் வேலை முடிந்த நாள் மாலையில் விரைவில் வீட்டுக்கு திரும்பினாள்.கதவில் ஒரு திருமண பத்திரிகை இருந்தது.அதை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.தன் வேலைப்பளு குறைந்ததலோ அல்ல ஒரு வாரம் முதல்முறையாக அவனை பிரிந்ததலோ அன்று காலையில் இருந்து அவன் நினைவாகவே இருந்தது.திருமண பத்திரிகையை பார்த்தவளுக்கு அவன் தன்னிடம் காதலை சொன்ன விதமும் அதை தொடர்ந்த சம்பவங்களும் நினைவிற்கு வந்தன.(ஒரு குட்டி பிளாஷ்பேக்...அப்படியே எல்லாரும் மேல பாருங்க)

சுஜித் ,அனுவிற்கு இரண்டு வருட சீனியர்.அதனால் சீனியர்-ஜூனியர்களின் அறிமுக நாள் அன்று அவளை பார்த்த முதல்நாளே அவள் மீது ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு உண்டாயிற்று.பின்பு அவளின் திறமையும் புத்திசாலிதனத்தையும் கண்டு அவள் மீது காதல் கொண்டான்.அதனால் ஏதோ ஒரு காரணம் கொண்டு அவளிடம் பேசுவான்.அப்படி ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தவன் திடிரென்று அவளை நோக்கி “உன் பெயர் ரொம்ப குட்டியா இருக்கு..அதுனால என் பெயரையும் பின்னாடி சேர்த்துக்கோ”என்று சொன்னான்.அவன் சொன்னதை புரிந்துகொள்ளவே பத்து நிமிடங்கள் ஆயிற்று.இப்பொழுது நினைத்தாலும் அவள் முகத்தில் புன்னகை தோன்றியது.அதற்கு பின் அவளும் சம்மதம் தெரிவித்து,இருவரும் காதல் பறவைகளாக சுற்றினர்.அவளும் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த பின் தங்கள் காதலை வீட்டில் சொன்னார்கள், இருவர் வீட்டிலும் மறுப்பு தெரிவித்தனர்.அதிலும் இவள் வீட்டில் அதிக மறுப்பு.எட்டு மாதகாலம் இருவர் வீட்டிலும் போராட்டம் சண்டை தான்.அவன் வீட்டில் அம்மாவின் சம்மதம் வாங்கிய பின்னும் இவள் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.கடைசியில் அவளின் பிடிவாதத்தால் சம்மதம் , திருமணம் செய்தார்கள்.அவர்கள் திருமணத்தில் யாரும் எதிர்பாக்காத ஒன்று அவர்கள் திருமணம் முடிந்த உடனே சுஜித்தின் தாய் இனி அவள் பிறந்த வீட்டோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தது.சுஜீத் அவன் வீட்டில் சம்மதம் பெற்ற நிலையில் தன் தாய் கேட்ட சத்தியத்தை செய்து கொடுத்தான்.அந்த சத்தியம் அவன் தாய் அவனிடம் “உன் காதலுக்கு நான் சம்மதம் சொல்லவேண்டும் என்றால் நீ என் சத்தியத்தை மீறக்ககூடாது என்பது தான்”.அவனும் தன் காதலுக்கு சம்மதம் வாங்க வேண்டும் என்ற நோக்கில் அந்த சத்தியம் எதற்கு என்று கேட்காமல் சத்தியம் செய்ததால் அவனால் அன்று எதுவும் பேச முடியாமல் போனது.

ஆனால் தங்களுடைய வேலையே காரணம் காட்டி அவளை தனிக்குடித்தனம் அழைத்துவந்திருந்தான்.அதற்கு பிறகு அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான்.இருவருக்கும் சண்டைகள் வரும் என்றாலும் சீக்கிரம் சரியாகிவிடும்.ஒரே நேரம் வேலை,ஒரே இடம் என்பதால் இருவரும் ஒன்றாக சென்று வருவார்கள்.என்றைக்கு அவனுக்கு இரவு நேர ஷிபிட் என்று மாறியதோ அன்றிலிருந்து இருவரும் சேர்ந்து செலவிடும் நேரம் குறைந்து சண்டைகள் அதிகமானது....

அவனின் நினைவுகள் அதிகமாக அவளுக்கு கண்ணீர் வரத்தொடங்கியது.இன்னும் இரண்டு நாளில் அவர்களுடைய முதல் திருமண நாள்..தங்களுடைய திருமண புகைப்படங்களை எடுத்து அதனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.காலையில் வீட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தவளால் எழ முடியவில்லை.எப்படியோ எழுந்து கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.அவளுடைய உயிர் தோழிகளான மதுவும் ஷாலினியும் நின்றுக்கொண்டு இருந்தனர்.அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து,ஒன்றாக லூட்டி அடித்து எல்லாவற்றிலும் அவளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.அவரவர் திருமணத்திற்கு பின் ஷாலினி நியூயார்க்கிலும்,மது டெல்லிலியும் இருந்தார்கள்.அனு”ஹே ஷாலு “என்று தாவி அவளை அணைத்துக்கொண்டாள்.தன்னவன் தன்னை விட்டு சென்றுவிட்டான் என்ற எண்ணத்தில் சோர்ந்து இருந்தவளை உன்னை எப்பொழுதும் சோர்வடைய விட மாட்டோம் என்பது போல் வந்து நின்றார்கள்.மது”ஹே போதும் டி நானும் வந்துருக்கேன் என்னையும் கொஞ்சம் கவனி”என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.