(Reading time: 21 - 42 minutes)

னு சிரித்துக்கொண்டே”மது செல்லம் எப்படிடி இருக்க? எப்போ டெல்லியிருந்து இருந்து வந்த?குட்டி எப்படி இருக்கான்? நீங்க வரதா ஒரு போன்கூட பண்ணல??”என்று பேசிக்கொண்டு இருந்தவளை...ஷாலினி”கொஞ்சம் மூச்சுவாங்கிக்கோடி எங்களையும் கொஞ்சம் பேசவிடு”என்று சொல்லிவிட்டு அவளுடன் உள்ளே வந்தாள்.வந்தவள் அவர்களுடைய திருமண அழைபிதலும்,ஆல்பம் எல்லாம் இருப்பதை கண்டு அவளை நோக்கினாள்.மதுவுடன் உள்ளே வந்தவள் இருவரும் தன்னை கேள்வியுடன் பார்ப்பதை கண்டு எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு ”டூ மினுட்ஸ் டி ரெப்ரெஷ் செய்துகொண்டு வரேன்”என்று உள்ளே சென்றாள்.மதுவும் ஷாலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.ரெப்ரெஷ் செய்துக்கொண்டு வந்தவள் கையில் காபி கப்பை கொடுத்துவிட்டு மதுவிற்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்புடன் அமர்ந்தாள் ஷாலினி.மூன்று நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது.அதற்கு மேல் மதுவால் பேசாமல் இருக்கமுடியவில்லை.மது திடிரென்று கப்பை கீழே வைத்துவிட்டு கண்ணை மூடி கைகூப்பினாள்.ஏதோ சிந்தனையில் இருந்த இருவரும் அவளை விநோதமாக பார்த்தனர்.பிறகு இருவரையும் நோக்கி மது”கடவுளுக்கு நன்றி சொன்னேன் என்றாள்”.அனுவும் ஷாலினியும் அவளை ஏன் என்பது போல் பார்க்க,மதுவோ “இந்த ஷாலினியை நம்பி என் உயிரை பணயம் வச்சு உன்னை பார்க்க வந்துருக்கேன்...அதான் என்னை பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தால கடவுளுக்கு நன்றி சொல்லி இந்த ஷாலினிக்கு மொட்டபோடுறதா வேண்டி இருக்கேன்”என்று சொல்லி முடிப்பதுக்குள் அனு சிரிக்க தொடங்கி விட்டாள்.

ஷாலினி அவளை முறைக்கமுயன்று தோற்று அவளிடம்”நீ எப்படியும் என் கூட தான் வந்தாகணும்..அப்போ கவனிச்சுக்கிறேன்”என்ற ஷாலினி அனுவிடம்”நான் வந்து ஒரு வாரம் ஆச்சு.உனக்கு கால் பண்ணா மேடம் போன் சுவிட்ச் ஆப்.சரி நேர்லய பார்த்து விடலாம் என்று கிளம்பினேன் இவ போன வாரமே சென்னை வந்துவிட்டாள் என்று தெரியும்.சரி இவளையும் வரசொல்லாம் என்று போன் பன்னனால் “சுந்தர் ஊருக்கு போயிருகாருடி நீயே வந்து என்னை பிக் அப் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.சரி போனா போகுது என்று இவளையும் அழைத்து வந்தால் என்னையே வாருகிறாள்”என்று அவளை பொய்யாக முறைத்தாள்.உடனே மது “ஹே ஷாலு மா அப்படியெல்லாம் பார்க்ககூடாது...இந்த ரொமாண்டிக் லுக்கை சுனிலிடம் வச்சுக்கோ”என்றாள்.உடனே அனு மதுவிடம்”ஹே மது அப்போ நீ சுந்தரை பார்த்து இந்த மாதரிதான் ரொமாண்டிக் லுக் விடுவியா??என்று கேட்டவள் ஷாலினியிடம் hifi கொடுத்துக்கொண்டாள்.இப்படியே மூவரும் மற்றவரை வாரிக்கொண்டு இருந்தனர்.ஷாலினி”நான்மட்டும் தான் வந்தேன். சுனில் ரெண்டு வாரத்தில் வராங்க என்று முடித்துவிட்டு அவளை பார்த்து”அப்புறம் நீங்க எப்படி மேடம் இருக்கீங்க?சீனியர் சார் எப்படி இருக்காங்க?எங்க ஆளையே காணோம்?”என்றவளை நோக்கி வருத்தமான புன்னைகையை சிந்தினாள்.

அனு”சுஜித் நியூயார்க் போய்ட்டான்”என்று கூறியவள் கண்ணை மூடி ஷாலினியின் தோளில் சாயிந்தாள்.மது”ஓ அதான் ரொம்ப சோகமா இருக்கியா?ஆனா சுஜித் அங்க ஹப்பாடி ஒரு தொல்லைக்கிட்ட இருந்து தப்பிச்சோம் என்று சந்தோஷமா இருபாரு”...என்று அவள் சொல்லி முடிக்கும்முன் அனு தன் கைகளில் முகத்தை புதைத்து அழதொடங்கினாள்.இதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் அதிர்ச்சியுடன் அவளை பார்தார்கள்.ஷாலினி பதறிப்போய் அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு “அனு இங்க பாரு என்னாச்சு உனக்கு?என்று கேட்டவளிடம் தன் மன கோபங்களையும்,வருத்தங்களையும் சொல்ல ஆரம்பித்தாள்.

நமது சந்தோஷங்களை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்துக்கலாம்,அனால் நமது கஷ்டங்களையும்,மன வருத்தங்களையும் நம் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே பகிர்ந்துக்கொள்ளமுடியும்.

அனு”நீங்களே சொல்லுங்கடி எனக்கு வேலை அதிகமா இருக்கும்போதெல்லாம் லீவ் போடுன்னு சொன்னால் போடமுடியுமா?எனக்கு ப்ரோமோஷன் வர நேரம்வேற...சொன்ன புரிஞ்சுக்கமாட்டிகிறாங்க..லீவ் கிடைக்கும்பொழுது போய் அத்தைய பார்க்கலாம்னு இருந்தேன்..ஆனா அதுக்குள்ளே சண்டை போட்டு,கிளம்பி போயாச்சு.கிளம்பும் பொழுது இங்க வீட்ல ஒருத்தி இருக்காளே அவகிட்ட சொல்லிட்டு போவோம்கிறது கிடையாது.போறதும் நியூயார்க்,ஒரு மெசேஜ் தந்தா தான் என்ன?எதுவுமே இல்ல..ஒரே பிரச்சனையா இருக்கு..ஏன்டா லவ் பண்ணி கல்யாணம் பண்ணோம்னு இருக்கு. இவனுக்காக தான் அப்பா,அம்மாவிற்கு சம்மதம் இல்லையென்றாலும் பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்...இப்போ என்னடான எதற்கெடுத்தாலும் சண்டை..என்ன பண்றதுனே புரியல?”

ஷாலினி”அனு இதெல்லாம் பிரச்சனையே இல்ல.முதல்ல ரெண்டு பெரும் குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்குங்க. ரெண்டு பெரும் உட்காந்து பேசினாலே பாதி பிரச்னை முடிசிஞ்சிரும்.எந்த கல்யாணத்துல பிரச்சனை இல்லைன்னு சொல்லு.அது காதல் கல்யாணமாகடும்,இல்ல பெரியவர்கள் பார்த்து நடந்த திருமணமாகட்டும் எந்த திருமணமானாலும்....கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிஞ்சுக்குட்டு,விட்டுக்கொடுத்து போனாலே எப்படிப்பட்ட கஷ்டத்தையும் நம்மால் சமாளிக்க முடியும்.” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது.. மது”இதுக்கு தான் எங்க தலைவர் பேச்சை கேட்கணும்”...என்ன என்பதுபோல் இருவரும் பார்க்க மது”காதலிக்க ஆரம்பிக்கும்பொழுது பெத்தவங்களை மறந்துடுரிங்க...காதலிக்கும்பொழுது தன்னையே மறந்துடுரிங்க...கல்யாணத்துக்கு பிறகு காதலை மறந்துடுராதிங்க..”என்றாள்.

இருவரும் சிரித்துவிட்டார்கள்.ஷாலினி”மது ஒத்துக்குறேன் உனக்கும் மூளை இருக்கு என்றவள் அனுவிடம்,”அவ சொல்றது இல்ல... தலைவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.கல்யாணத்துக்கு பிறகும் சிறுசிறு செயல்கள் மூலம் அந்த காதலை உணர்த்த வேண்டும்.”

இன்னும் அவள் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு மது”சரிடி நான் ஒன்னு கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லு இப்போ உனக்கு அந்த பிரச்சனை முக்கியமா இல்லை சுஜித் முக்கியமா?உனக்கு சுஜித் தான் முக்கியம்னா பிரச்சனைய தூக்கி போட்டு போய்டே இரு.”என்று சொல்லி முடிக்கும்முன் அனு”எனக்கு சுஜித் தான் முக்கியம்”என்றாள்.

இருவரும் சிரித்துக்கொண்டே சிறிது நேரம் பேசிவிட்டு நாளை காலை வருகிறோம் என்று சொல்லி கிளம்பினார்கள்.ஒரு பெண்ணிற்கு நல்ல கணவன் அமைவது மட்டும் இல்லை நல்ல நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

ங்களுடைய திருமண ஆல்பத்தை எடுத்துக்கொண்டு பால்கனியில் அமர்ந்தாள்.தான் பேசியதையும் அவன் பேசியதையும் நினைத்து பார்த்தவள் சுஜித் நான் பேசினது தப்புதான் என்னை மன்னிச்சிருங்க...ஐ லவ் யூ சோ மச்....ஐ மிஸ் யூ என்று மானசிகமாக அவனிடம் பேசியவள் அவனிடம் பேசுவதற்காக அவனுக்கு போன் பண்ணால் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.சிறிது நேரம் கழித்து போன் செய்யல்லாம் என்று அவனை நினைத்து ஒரு கவிதை எழுதினாள்.( என்னடா நம்ம ஹீரோவ எங்க ஆளையே காணோம் என்று தானே யோசிக்கிறிங்க.. அவர்தான் நியூயார்க் போய்டாரே...சரி இப்போ எங்கே இருக்காருன்னு பார்போம்)சுஜித் நியூயார்க்கிலிருந்து கிளம்பி சென்னை வந்துகொண்டிருந்தவனின் நினைவுகள் தான் நியூயார்க் சென்றடைந்த தினம் நோக்கி சென்றது.

நியூயார்க் வந்து இறங்கும் வரை அனு மீது கோபம் இருந்தது.பிறகு சிறிசிறு செயலும் அவளின் நினைவு அவனை வாட்டியது.பகல் முழுதும் வேலை பளுவால் அவளின் நினைவு இல்லாமல் இருப்பவன்..வேலை முடிந்த மறுநொடி இவளின் நினைவு வந்துவிடும்.அவன் நியூயார்க்கில் ஒரு நாள் இரவு கூட அவனால் தூங்கமுடியவில்லை.சின்னச்சின்ன விஷயங்களை கூட பார்த்துப்பார்த்து செய்திருக்கிறாள்.என்ன தான் வேலைகள் அதிகமாக இருந்தாலும் தினமும் மூன்று வேளையும் வீட்டில் சமைத்துவிடுவாள்.அவனிடம் எதைபத்தியும் குறை கூறியதில்லை.ஏன் அவன் அம்மா தங்கள் கல்யாணத்தில் அப்படி கூறியும் அவர்களை பற்றி ஒருமுறை கூட தவறாக சொன்னதில்லை.இவனின் சத்தியத்தை தெரிந்துகொண்டதொடு சரி..ஏன் அப்படி செய்திர்கள் என்று கூட கேட்கவில்லை.

இதெல்லாம் எதற்காக அவனுக்காக அல்லவா?அவனுடைய காதலுக்காக அல்லவா??என் மீது எவ்வளவு காதல் இருந்தால் அவளின் பெற்றோருக்கு சம்மதம் இல்லை என்று தெரிந்தும் பிடிவாதம் பிடித்து தன்னை மனந்திருப்பாள்??இதற்கெல்லாம் தான் என்ன செய்தோம்??அதே துறையில் இருந்துக்கொண்டு அவளின் வேலை பற்றியும் அறிந்துக்கொண்டு அன்று நான் அப்படி சொல்லிருக்க கூடாது.ஏனோ அன்று அவளின் அரை வாங்கிய முகம்தான் நினைவுக்கு வந்தது.தப்பு பண்ணிவிட்டோம் என்று உணர தொடங்கினான்.அவளிடம் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாம்.....என்று நினைத்தவன் தனது ஐபாடில் பாட்டை போட்டவனுக்கு ஏனோ அவனுக்காகவே எழுதின வரிகள் போல் இருந்தது..

“பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை..

தினமும் ஒரு முத்தம் தந்து காலை காப்பி கொடுக்க நீ இல்லை..

விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை....

நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ

வான் இங்கே நீளம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது”.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.