(Reading time: 21 - 42 minutes)

பாட்டை கேட்டவனுக்கு உடனே அவளிடம் பேசணும் போல் இருந்தது..நேரில் சென்று பேசினால் என்ன??என்று தோன்ற அவனின் வேலைகளும் முடிந்து விட்டதால் தன்னுடயவளை நோக்கி ஓடி வந்தான்.( ஓடி வரல..பறந்து வரான் என்று உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது எனக்கு கேக்குது..)தங்களுடைய திருமண நாள் வருவதால் அவளுக்கான சர்ப்ரைசை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.இப்போ புரியிதா அவன் ஏன் போனை எடுக்கலை என்று.

மறுநாள் காலையில் அவள் கிளம்பி சென்ற இடம் அவளின் புகுந்த வீடு.அவளுக்கு அன்று பல அதிர்ச்சிகள் காத்திருந்தன...ஆனால் அனைத்தும் இன்ப அதிர்ச்சிகள். ஆம் சுஜித்தின் அன்னை சாந்தி சென்னையின் புற பகுதியில் அவர்களுடைய சொந்த வீட்டில் இருந்தார்கள்.அவனின் அன்னை மீது அவனுக்கு பாசம் அதிகம் என்று தெரியும்.இருந்தாலும் அவளுக்காக தனிக்குடித்தனம் கூட்டிச்சென்றான்.அவள் அங்கு சென்றபொழுது சாந்தி அவளை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.சிறிது நேரம் அவளின் கையை பிடித்துக்கொண்டு இருந்தவர்”என்னை மன்னிச்சுருமா.நான் அப்படி செஞ்சிருக்க கூடாது.என்ன பன்ன படுகையில் இருக்கும்போதுதான் எல்லாம் புரியுது.அதான் அன்னைக்கு உடனே உன்ன பார்க்கணும்னு அவன்கிட்ட சொன்னேன்.உனக்கு வேலை இருந்ததால் இன்னொரு நாள் உன்னை வரசொல்றேனு சொன்னான்.”என்றவரிடம் அனு”ஐயோ அத்தை எதுக்கு மன்னிப்பெல்லாம்.நான் உடனே உங்கள பார்க்க வந்து இருக்கனும்.சாரி அத்தை வேலை அதிகமா இருந்ததால வர முடியல”...என்றவள் அவர் சொல்ல சொல்ல கேட்காமல் அவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

மது அவளுக்காக வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள்.மூவரும் உள்ளே சென்றனர்.ஷாலினி இன்னும் சிறிது நேரத்தில் வருவதாக இருந்தது.அனு எவ்வளவு சொல்லியும் கேட்காதவர் தன் மருமகளுக்காக தானே சமையல் செய்ய வேண்டும் என்று உள்ளே சென்றார்.இருவரும் பார்த்து சிரித்துக்கொண்டனர்.மது”அனு உனக்கு நேமாலஜி தெரியுமா? என்று கேட்டவளை பார்த்து இல்லை என்றாள்.மது”நேமாலஜி படி S என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவரின் உணர்வுகள் அதிகபட்சமாக(extreme)இருக்கும்.தங்களுடைய மகிழ்ச்சியையும்,பாசத்தையும்,கோபத்தையும் அதிகபட்சமாக வெளியிடுவார்கள் உதாரணத்துக்கு தான் நம்முடைய மூன்று பேரின் கணவர்களும் இருக்கிறார்களே,இப்பொழுது உன் அத்தையும் அதில் அடக்கம்”என்றாள்.ஆம் உண்மை தான் சுஜித் அவனுடைய காதலாகட்டும்,கோபமாகட்டும் எதை வெளிபடுத்தினாலும் அதிகம் தான் என்று நினைத்துக்கொண்டு இருந்தவள் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து சென்றாள்.ஷாலினியாக இருக்கும் என்று நினைத்து கதவை திறக்க சென்றவள்ளுக்கு தன்னுடைய நாயகன் நிற்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.நான்கு கண்களும் நோக்கின...அனு அழுதுக்கொண்டே அவனை அணைத்துக்கொண்டாள்.அவனும் தங்களுடைய பிரிவு என்பதுபோல் அவளை அணைத்துக்கொண்டான்.

மது”சீனியர் போதும் உள்ள வாங்க..நடுரோட்ல நின்னு ரொமான்ஸ் பண்ணது போதும்”என்றாள்.சாந்தி சத்தத்தை கேட்டு வெளியில் வந்தார். இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார்கள்.அந்த காட்சியை கண்ட மூவர்க்கும் மனம் நிறைந்தது.ஷாலினி இருவரையும் தொடர்ந்து உள்ளே வந்தவள் மதுவிடம்”மது சீனியர் சார் அவங்களுடைய வேலையில் கவனமாக இருப்பதால் நீ தப்பிச்ச...அதனால கொஞ்சம் வாயவச்சுகிட்டு சும்மா இரு” என்றாள்.மதுவும்,ஷாலினியும் நாளை வருவதாக கூறி விடைபெற்றனர். அவன் அம்மாவை எதிர்பார்கவில்லை “அம்மா நீங்க எப்போ வந்தீங்க”என்றவனிடம் எல்லாவற்றையும் கூறியவர் தன்னுடைய மருமகளை பெருமையுடன் பார்த்தார்.அதற்கு சற்றும் குறைவில்லாமல் காதலுடன் அவளை நோக்கினான்.சுஜித்தை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன்னுடன் உதவிக்கு வரேன் என்று சொன்ன மருமகளையும் அவனுடன் அனுப்பிவைத்தார்.

உள்ளே சென்றவுடன் அவனை அணைத்துக்கொண்டு அழதொடனங்கினாள்.அவனும் அவளை அணைத்துக்கொண்டு”கண்ணம்மா அழாதடா..உன்னைய நிறைய அழ வச்சுட்டேன்.இனிமே எந்த காரணத்துக்காகவும் நீ அழகூடாது.நான் இருக்கேன் உனக்கு.இனிமே உன்ன விட்டு ஒரு நொடி கூட பிரிய மாட்டேன். உன் பெயரை போலவே என் வாழ்க்கையில் நீ இருந்தால் மட்டும் தான் என் வாழ்கை முழுமை பெரும்.”என்று அவளை அணைத்து முத்தமிட்டான்.

அனு”சுஜித் எனக்கு நீங்க தான் முக்கியம்.வேலை எல்லாம் எனக்கு முக்கியமே இல்லை.இன்னொரு முறை இப்படி என்னைய விட்டுட்டு போகாதிங்க.நான் வேலைய வேணும்னா விட்டுடுறேன்”என்றவளை சுஜித்”வேண்டாம் கண்ணம்மா அன்னைக்கு நானும் ஏதோ கோபத்தில பேசிட்டேன்.நீ வேலையெல்லாம் விட வேண்டாம்.இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம் “என்றான்.அன்று முழுவதும் இருவரும் இடைகாலத்தில் பட்ட துயரினை பற்றியும் இனிமேல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பேசினார்கள்.இரவு 12 மணிக்கு அவனுக்கு தங்களுடைய முதல் திருமண நாள் வாழ்த்தை சொல்லலாம் என்று பார்த்தாள் அவனை காணவில்லை.அவனை தேடிக்கொண்டு வெளியில் வந்தவள் சுவிட்சை போட்டாள்.அங்கிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.அவளின் அம்மா,அப்பா,சுஜித்,சாந்தி அனைவரும் இருந்தார்கள்.ஓடி வந்து அவள் அம்மாவை அணைத்துக்கொண்டாள்.பிறகு அனைவரும் பேசியவள் அவனிடம் வந்தாள்”திருமண நாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா எப்படி என்னுடைய பரிசு”என்றான்.அவனுக்கும் தன்னுடைய வாழ்த்தை சொன்னவள் அவனிடம்”நான் அப்படியே ஷாக் ஆய்ட்டேன்” என்று கூறி சிரித்தாள்.அவனும் அவளை பார்த்து சிரித்தான்.தங்களுடைய பிள்ளைகள் என்றைக்குமே இதுபோல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பெற்றவர்கள் வேண்டிக்கொண்டார்கள்.

றுநாள் தைத்திங்கள் காலை அனு,அவளின் தாய்,மற்றும் மாமியாருடன் பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தாள்.அரக்கு நிறத்தில் தங்க நிற ஜரிகையில் பட்டுபுடவை கட்டிக்கொண்டு அவ்வபோது தன்னை பார்த்துக்கொண்டு இருந்த மனைவியை பார்த்க்கொண்டே மாமனாருடன் பேசிக்கொண்டு இருந்தவனை “தை பிறந்தால் வழி பிறக்கும்..எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்க”என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.மதுவும்,ஷாலினியும் வந்திருந்தார்கள்.இருவரையும் வரவேற்று இருவரையும் வாழ்த்தையும் ஏற்று வரவேற்றார்கள்.மது”சீனியர் நாங்க கிளம்புறோம் அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி காதல் திருமணத்துக்கும்,பெத்தவங்க பார்த்து செய்துக்குற கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்? “என்றாள் அவனுக்கு மட்டும் இல்லை எவருக்குமே தெரியவில்லை.

மது”சரி நானே சொல்லறேன்.காதல் திருமணம் என்றாள் சம்மதப்பட்டவர்கள் இருவரும் தாங்களாகவே கிணத்துல குதிக்கிறது..இன்னொன்னு பெத்தவங்க,உற்றார்,உறவினர் எல்லாரும் சேர்ந்து கிணத்துல தள்ளிவிடுறது”என்று சொன்னவளிடம் ஷாலினியும்,அனுவும்”அடிப்பாவி”என்றனர்.சுஜித் சிரித்துக்கொண்டே”சரி நான் ஒன்னு கேட்குறேன்” பொங்கலுக்கும்,தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்??என்றான்..மது”பொங்கல் ஜனவரில வரும் தீபாவளி நவம்பர்ல வரும்” என்றாள்..சுஜித்”இல்லை நான் சொல்லவா என்றவன் பொங்கல் அன்னைக்கு பொங்கல சாப்பிடலாம்...ஆனா தீபாவளிக்கு தீபாவளிய சாப்பிட முடியும்மா??என்றான்.மது”தெய்வமே உங்க கால காம்பிங்க முதல்ல..நாங்க இப்படியே கிளம்புறோம்”என்று கூறிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றனர்.பெரியவர்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கியவர்கள்,தாங்கள் எப்பொழுதும் இதே மாதிரி இருக்கனும் என்று கடவுளை வேண்டிக்கொண்டனர்.இருவரும் தங்கள் அறைக்கு வந்தனர்.

சுஜித் அனுவை பார்த்து பாடினான்...

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதாது...

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது...

அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே...

மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே...

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி..

சந்தோஷ சாம்ராஜ்யமே....”

அதை சிரிப்புடன் கேட்டவள்...அவனை ஒரு முறை பார்த்தாள்.பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நின்று இருந்தவனை பார்த்து அவன் விழிகளில் தன் விழிகளை கலந்தவள்.....

“தோல்வி இல்லாமல் வெற்றியில்லை

முள் இல்லாமல் ரோஜாயில்லை

உயிர் இல்லாமல் உடலில்லை

அலைகள் இல்லாமல் கடலில்லை

நீயில்லாமல் நானில்லை”....

திருமணத்திற்கு பிறகு சண்டைகள் வரலாம்,பிரச்சனைகள் வரலாம் ஆனால் காதல்,புரிதல்,அக்கறை,நம்பிக்கைக்கு முன்னால் அவைகள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.காதலே சிறப்பு தான் அதுவும் திருமணத்திற்கு பிறகு வரும் காதலுக்கு தனிச்சிறப்பு உண்டு.

This is entry #16 of the current on-going short story contest! Please Visit the contest page to know more about the contest.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.