(Reading time: 3 - 5 minutes)

திக்கற்றோர்க்கு... – ஜான்சி

This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ந்த அரசுமருத்துவமனையிலிருந்து தன் தாயுடன் திரும்ப வந்துக் கொண்டிருந்த வள்ளியின் காதுகளில் டாக்டர் சொன்ன வார்த்தைகளே எதிரொலித்தவாறு இருந்தது.

"உங்க அம்மா உடல் நிலை ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது அவங்க எந்தவொரு வேலை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள. "

வள்ளி ஓர் விதவை தன் தாயுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறாள்.தன்னுடைய ஏழ்மை நிலையிலும். தன் மகனை எப்படியாவது படிக்க வைத்து ஆக வேண்டும் என்ற மன உறுதியில் வாழ்ந்து வருகிறாள்.

Thikatror

இருவரும் வேலை செய்யும் போதே வாய்க்கும் வயிற்றிற்க்கும் காணாது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.வேக வேகமாக தன் தேவைகளை கணக்கு போட்ட மனது துவண்டது .

அமைதியாக வரும் மகளைப் பார்த்து

"நீ சும்மா யோசிக்காதே வள்ளி அதெல்லாம் ஒன்னு செய்யாது . 2 நாளுக்கு படுத்து எழும்புனா எல்லாம் சரியா போய்விடும். நீ பாட்டுக்கு நான் வரலன்னு அந்த வீட்டம்மா கிட்ட சொல்லிடாத..

சொல்லி முடிக்கும் முன் நான்கைந்து முறை மூச்சுவிட சிரமப்பட்டார் .

கடவுளே இந்த நோயாவது தராமலிருக்க முடியாதா?

தாயின் சிரமம் கண்ட மனம் புலம்பியது.

" அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஓய்வாக இருந்தா உடம்பு நல்லாயிடும். நீங்க எதையும் யோசிக்க வேண்டாம் அம்மா.கடவுள் ஏதாவதொரு வழி காண்பிப்பார். "

என்று ஆறுதல் சொன்னது தாய்க்காகவா இல்லை தனக்கேவா என் புரியவில்லை .

வீடு வந்து சேர்ந்து ஆசுவாசப் படுத்தி கொண்டிருக்கும் பொழுது நலம் விசாரிக்கவென வந்த பக்கத்து வீட்டு ரமணி அக்கா,

நீங்க இல்லாத போது ரெண்டு பேர் வந்து உங்களை கேட்டாங்க...அப்புறமா வர்றதாக சொல்லிட்டு போயிருக்காங்க.. என்றார்.

அவர்கள் யாராக இருக்கும் என சிந்தனை தோன்றினாலும் அடுத்ததாக உடனே வேலைக்கு செல்ல நேரமாகிவிட்டதால் வள்ளி அவசரமாக தாய்க்கு மாத்திரைகளை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு புறப்பட்டு சென்றாள்.

மாலை அந்த அடையாளம் தெரியாத இருவரும் வந்தனர்.

அம்மா நாங்க பக்கத்து ஏரியால இருக்கிறோம் . மாலை நேர உணவகத்துக்கு இடம் பார்த்துக்கிட்டிருந்தோம். அப்போ தான் உங்கள் வீட்டுக்கு முன் பக்கம் இருக்கிற காலி இடம் எங்கள் கவனத்தில் வந்தது . நீங்கள் மட்டும் அந்த இடத்தில் கடை போட அனுமதி தந்தா நல்லாயிருக்கும், மாத வாடகை தந்திடுவோம்."

என்று சொன்னவர்கள் யோசித்து பதில் கூறச் சொல்லி சென்றனர்.

அதை கேட்ட தாய் மகள் பிரமித்தனர். அவர்கள் வாடகையாக தருவதாக சொன்ன தொகை இவர்களின் வருமானத்தை விட அதிகம். உபயோகமில்லாமல் இருந்த இடத்தின் காரணமாக தேவையான நேரத்தில் இப்படி ஒரு வழி கிடைத்ததே கடவுள் உண்மையிலேயே வழி காட்டி விட்டார் என்று மகிழ்ந்தனர் .

இறைவன் அவன் தலைவன்.

அனைவோர் துன்பம் அவனறிவான் .

இறைவன் அவன் தகப்பன் .

தம் பிள்ளைகள் துன்புற அவன் வருந்துவான்.

இறைவன் அவன் நண்பன்.

தூய நல் நேசம் அவன் அருள்வான்.

இறைவன் அவன் தாயே.

தம் பிள்ளைகள் பசியாற்றியே அவன் இளைப்பாறுவான். 

This is entry #31 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.