(Reading time: 9 - 17 minutes)

 கசங்கினாலும் பூ மணக்கும் - அமுதவல்லி

This is entry #44 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest

லகத்தில் வேற பெண்ணே கிடைக்கவில்லையா இந்த செண்பகத்துக்கு", "என் பேரன் ராஜா. அவனுக்கு பெண் கொடுக்க அவன் இவன்னு போட்டி போடறாங்க", "அண்ணி என்னடான இப்படி ஒரு பெண்ணை பார்த்து இருக்கறாங்க..நம்ம பார்த்தி வாழ்கையை கெடுக்கரமாதிரி இருக்கு" இதையெல்லாம் கேட்ட எனக்கு கஷ்டமாக இருந்தது.

அடுத்த நாள் எனக்கு கோவிலில் கல்யாணம். ஆனால் அதற்கான சந்தோஷம் என்னிடம் இல்லை,,அப்படி சொல்லகூடாது சந்தோஷமாக இருக்கவிடவில்லை. நான் பலநாட்கள் கழித்து இந்த இரண்டு மாதம்தான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் இன்று அதுவும் இல்லை. என் சந்தோஷமான நாட்களை நினைத்துப்பார்த்தேன்.

என் அப்பா இறந்து 15 வருடம் ஆகிறது. என் அம்மா மஞ்சு என்னை வளர்த்தார். அம்மா ராமகிருஷ்ணர் ஆசிரமத்தை நிர்வாகிக்கிறார். அதன் உரிமையாளர் இங்கு இல்லை.

எனது b.com இறுதியாண்டு தேர்வு முடிவு வந்தது. நான் கல்லூரியில் இரண்டாவது இடம் எடுத்திருந்தேன். அம்மா பாயாசம் செய்து தந்தார். அவரிடம் செல்லம் கொஞ்சிகொண்டிருந்தேன். அதன் பிறகு எனது வாழ்கையில் ஏற்பட்ட சூறாவளியின் ஞாபகமும் வந்தது.

அடுத்தநாள் அம்மா ஆசிரமம் சென்ற பிறகு நான் எனது தோழி சத்யா வீட்டிற்கு சென்றேன். அரட்டை அடித்ததில்   நேரம் சென்றதே தெரியவில்லை. அங்கிருந்து இரவு 7 மணிக்கு கிளம்பினேன். எனது வீடு ஊரிலிருந்து சற்று வெளியே உள்ளது. எனது வண்டி பழுதடைந்தது. அந்த இரவின் தனிமையை ஒரு மனித மிருகம் அதற்கு சாதகமாக பயன்படுத்திகொண்டது . எவ்வளவு போராடியும் என்னால் என்னை காப்பாற்றி கொள்ளமுடியவில்லை. என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். சுயநினைவின்றி 6மணி நேரம் இருந்தேன். கண் விழித்து அம்மாவை பார்த்தபின் எனது நிலையை உணர்ந்தேன்.

நான் "அம்மா"

அம்மா "அழாதே கண்ணம்மா. நீ இப்போ தைரியமா இருக்கனும்"

நான் "என் வாழ்கையே முடிஞ்சு போச்சு. நான் செத்துபோறேன் அம்மா"

அம்மா "என்ன பேச்சு இது. உன்னிடமிருந்து இதை நான் எதிர்ப்பார்கலை. இதனால் உன் வாழ்கையே முடிஞ்சு போச்சுன்னு எப்படி சொல்ற. ஒரு பெண்ணிற்கு இது முக்கியம்தான். ஆனால் அது மட்டுமே வாழ்கையில்லை.உன்னை இந்தளவிற்கு வளர்த்தது இப்படி நீ தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்றத கேட்கவா ..இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் கஷ்டம் இருக்கும். அதை எப்படி எதிர்கொல்றாங்க அப்படிங்கறது ரொம்ப முக்கியம். அதையே நினைக்காத. என்னோட ஆசிரமத்திற்கு வா. முடிஞ்ச உதவியை செய். மற்றதை பிறகு பார்க்கலாம். "

நான் முழுவதுமாக மீண்டேன் என்று சொல்லமுடியாது . ஆனால் அம்மாவின் பேச்சால் தெளிவடைந்தேன். நான் இங்கு கஷ்டப்பட அவன் எங்கோ மகிழ்ச்சியாக இருக்கிறான் என்ற நினைவே என்னை காவல்துறையிடம் புகார் கொடுக்கும் எண்ணத்தை தூண்டியது. அம்மாவிடம் சொன்னேன். அதை அவர்களே நினைத்ததாகவும் ஆனால் அதற்கு என் சொந்தம் ஒத்துக்கொள்ளவில்லை என்று அம்மா சொன்னார்கள். அது அவர்களுக்கு அசிங்கமாம். மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு அம்மாவுடன் ஆசிரமம் சென்றேன். என்னால் முடிந்த உதவியை செய்தேன். நாட்கள் செல்ல செல்ல என் மனம் அமைதி அடைந்தது.

ரண்டு வருடம் கழித்து ஆசிரமத்திற்கு உதவும் பார்த்திபனை பார்த்தேன். அவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரின் அப்பா குமரன் நல்லூரில் பெரிய வீட்டுக்காரர். அம்மா செண்பகம் இல்லத்தரசி. அவர்கள் அந்த ஆசிரமத்திற்கு பல உதவிகளை செய்திருகின்றனர். இப்போது பார்த்திபன் வந்ததும் அதற்காகத்தான். அவரின் அம்மா,அப்பாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அவரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. இருவரையும் பரஸ்பரம் அம்மா அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு இருவரும் நன்றாக பேசிகொள்வோம். கருத்து பரிமாற்றமும் நிகழும். எனக்கு அவர் மீது ஈர்ப்பு இருந்தது. ஆனால் நான் காமித்துகொள்ளவில்லை.

ஒருநாள் நான் ஆசிரமத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பார்த்திபனை பார்த்தேன். சுற்றிவளைக்காமல் அவர் என்னிடம் "வாழ்கை பாதையில் உன்னுடன் வர விரும்புகிறேன். உனக்கு விருப்பமிருந்தால் என் அம்மாவை உன் அம்மாவிடம் பேச சொல்கிறேன்" என்றார்.

எனக்கு சந்தோஷம், துக்கம் இரண்டும் ஒன்றாக கிடைத்தது. அவரிடம் எல்லாவறையும் சொன்னேன். பதில் சொல்லாது சென்றார். எனக்கு அவர் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை.

அடுத்தநாள் அவரது அம்மா என்னை பார்க்க வந்தார்.

நான் "அம்மா எப்படி இருக்கீங்க. அய்யா எப்படி இருக்கிறார்"

செண்பகம் "நல்லா இருக்கோம். எப்போ கல்யாணம் வைத்துகொள்ளலாம்"

நான் இப்படி அவங்க கேட்பாங்கன்னு எதிர் பார்க்கவில்லை. தயங்கினேன் .

"அம்மா ..நா..நான்..”

செண்பகம் "எனக்கு தெரியும்மா. பார்த்தி சொன்னான்"

நான் "இருந்தும் என்னை போய்"

செண்பகம் "எதுக்கு இப்படி கேட்கற. உனக்கு என்ன குறைச்சல்"

நான் "நான் வேண்டாம், வேற நல்ல பெண்ணை பார்த்து"

செண்பகம் "ஏன் நீ நல்ல பெண் இல்லையா??"

நான் "அம்மா நான் அவருக்கு வேண்டாம். எனக்கு அதற்கு தகுதி இல்லை."

செண்பகம் "போதும் நிறுத்து. அது உன்னை மீறி நடந்த விஷயம். நீ தங்கமான பொண்ணு. உன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தவன் நல்லா இருக்கும்போது நீ ஏன் உன்னை வருத்திக்கற"

நான் "நீங்க சொல்றது புரியுது. ஆனால் இப்படியே சமூக சேவை செய்றேனே."

செண்பகம் "செய். வேண்டாம்னு சொல்லலை. கல்யாணத்துக்கு பிறகு செய். உன் மனசை தொட்டு சொல்லு இந்த சம்பவம் நடக்கமா இருந்தா கல்யாணம் வேண்டாம்னு நினைத்து சமூக சேவை செய்து இருப்பியா??"

நான் "இல்ல..இல்லை மா "

செண்பகம் "சமூகசேவை செய்யணும்தான்.நிறையப்பேர் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இதற்கு வாழ்கையை அற்பனிச்சாங்க.அது தவறில்லை. ஆனால் நீ பார்த்தியை விரும்புற...ஆனால் அந்த சம்பவத்தால் வேண்டாம்னு சொல்ற. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. யாரோ செய்த தப்புக்கு நீ ஏன் பொறுப்பு ஏதுக்கற?? நல்லா யோசிச்சு பதில் சொல்லு ..நான் கிளம்பறேன்"

அவர்களின் பேச்சு என்னை யோசிக்கவைத்தது. அதன் பிறகு மஞ்சு அம்மா என்னிடம் பேசினாங்க.

அம்மா "என்ன முடிவு பண்ணிருக்க"

நான் "அம்மா..எனக்கு கொழப்பமா இருக்கு"

அம்மா "இதுல என்ன கொழப்பம். உனக்கு அவரை பிடித்து இருக்கு. கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு"

நான் "இல்லைமா. என் நிலைமை..."

அம்மா "உன் நிலைமைக்கு என்ன. எவனோ செய்த தப்புக்கு நீ என்ன செய்வ. என் பொண்ணு இப்படி இருக்கறத என்னால பார்க்கமுடியலை. அவன...நான் அப்பவே காவல்துறையில் புகார் செய்திருப்பேன். ஆனால் எனக்கு யாரும் துணையில்லை. உன்னை மீட்கறதுதான் எனக்கு முக்கியமாபட்டது...ஆனால் இப்போ அதுக்காக வருத்தபடறேனு சொல்றதை விட வெட்கபடறேன். "

நான் "அம்மா"

அம்மா "அவங்களை கடுமையா தண்டிக்கணும்னு சொல்றோம். ஆனால் புகார் கொடுக்கமாற்றோம். மற்றவங்க என்ன சொல்வாங்கன்னு பயம். அதனாலதான் இந்தமாதிரி சம்பவம் நிறைய நடக்குது.நாம தைரியமா புகார் கொடுக்கணும். பாதிக்கபட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தையும் தப்பா பேசாம அவர்களுக்கு ஆதரவா இருக்கனும்"

நான் "மஞ்சுமா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.