அம்மா "ஆமாம்டா..ஒருத்தன் கொலை செய்தாலோ,திருடினாலோ,மற்ற குற்றங்களை செய்தாலோ நாம் அவனைதான் குற்றம் சொல்றோம். ஆனால் இதுவே பாலியல் பலாத்காரம்னா குற்றவாளியை விட அந்த பெண்ணையே குற்றம் சொல்றோம். இது நியாயமில்லை. அந்த பெண் மற்றவர்களை போலதான் வாழனும். அவள் எந்த தப்பையும் செய்லையே..என் பெண்ணு எந்த விதத்திலையும் மற்றவர்களைவிட குறைவில்லை.யோசி கண்ணம்மா"
என் சிந்தனையை இருவரும் மாற்றினர். நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். என் மாமனார் என்னிடம் அவ்வளவு பேசவில்லை என்றாலும் அவருக்கும் இதில் சம்மதமே என்பதை அறிந்தேன். இப்போது நாளை திருமணம் என்ற அளவில் உள்ளது.
"சின்னம்மா"
என் சிந்தனை கலைந்தது" ஹான்..என்ன "
"பால் குடிங்க"
வெளியே என்னை பற்றிய பேச்சு தொடர்ந்தது..
"இப்போ சொல்லுங்க என் பெண்ணை தரேன்..உங்களுக்காக நான் எதுவும் செய்வேன்"
செண்பகம் "போதும். நான் அமைதியா இருக்கேன்னு என் மருமகளை தப்பா பேசறீங்க. உன் மகளை விட என் மருமக ஒன்னும் குறைவில்லை..நீ வெட்டியா சுத்தற உன் மகனை திருத்து. ஏன் ஆத்தா மத்தவங்க பேசறாங்கன்னு நீயும் பேசறியே.. நீங்க வயசுல பெரியவங்க இவங்களுக்கு எடுத்து சொல்லவேண்டாமா..அவ இந்த வீட்டு பெண்ணு..அவளை தப்பா பேசறவங்க எங்களை பேசறாமாதிரி..எல்லோரும் வேலையை பாருங்க.."
அனைவரும் அதற்குமேல் பேசவில்லை. அத்தையின் பேச்சு எனக்கு கண்ணீரை வரவழைத்தது.
எதிர் பார்த்த நாளும் வந்தது. என்னை தயார் படுத்தினர். ஐய்யர் மந்திரங்களை ஓத அனைவரின் ஆசியுடன் பார்த்தி என் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார். மற்ற சடங்குகளும் முடிந்தது.
அன்று இரவு!!!
நான் அமைதியின்றி இருந்தேன். என்னை பார்த்து என்ன நினைத்தாரோ
அவரே "கொஞ்சம் பேசலாமா"
நான் "ம்ம்ம்"
பார்த்தி "பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்ட...இப்ப பேச்சே வரலை.பதில் சொல்லலை "
நான் கொஞ்சம் தெளிந்தேன் "ம்ம் னு சொன்னேன்"
பார்த்தி "உங்க ஊர்ல ம்ம்ம் னா வார்த்தையா"
நான் "எங்க ஊர்ல அப்படித்தான். இனிமேல் புரிஞ்சுகோங்க"..நான் முழுவதும் தெளிந்தேன்.
பார்த்தி "சரிங்க ஆபிசர்"...
முன்னால் நிகழ்ந்ததை சொன்னேன்.."அத்தை எப்படிங்க இப்படி இருகாங்க...நம்பவே முடியலை "
பார்த்தி சிரித்துகொண்டே "என் காதலையும் அவங்ககிட்டதான் முதலில் சொன்னேன்"
நான் "என்னது.."
பார்த்தி "எதுக்கு இப்படி முழிக்கற முட்டகண்ணி"
நான் "என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க...pls.."
பார்த்தி "உன்னை பத்தி கேட்டுட்டு சரின்னு சொல்லிட்டாங்க..உன் கிட்ட சீக்கரம் சொல்ல சொன்னதே அவங்கதான் "
நான் " ஓ..ஏன் நீங்க என்னை பத்தி சொன்னதும் எதுவுமே சொல்லலை"
பார்த்தி "உன்னை அணைத்து நான் இருக்கேன்னு சொல்ல தோனுச்சு..அடிச்சிட்டனா ..அதான் எதுவும் சொல்லலை "
நான் "நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரியாம கடுப்பா இருந்தது..ஆனால் அத்தை வருவாங்கன்னு நினைக்கலை"
பார்த்தி "அவங்ககிட்ட எல்லாத்தையும் சொன்னேன்..என்ன கேட்டாங்கன்னு தெரியுமா??"
நான் " சொல்லுங்க,,சொல்லுங்க... "
பார்த்தி "அதற்காக அவளை வேண்டாம்னு சொல்றியானு கேட்டாங்க..நான் இல்லைன்னு சொன்னதும்..நீ தியாகமா நினைத்து அவளை கல்யாணம் பண்ணிகிட்டா அவள் வாழ்கையே நரகமாகிடும்னு சொன்னாங்க..எனக்கு அவள் உயிர் அம்மானு சொன்னதுக்கு பிறகுதான் உன்னை பார்க்க வந்தாங்க..என்னை அப்படி அவங்க கேட்டது கோவம் தான் ஆனால் நம்ம வாழ்க்கைக்காக அப்படி பேசினாங்கன்னு புரிஞ்சுது "
என் கண்கள் கலங்கியது. பார்த்தி "பேசிகிட்டே இருக்கலாம்னு நினைக்காதே..அது என்கிட்ட நடக்காது"..என்னை அறியாமல் என் கன்னம் சிவந்தது..
என் கதையை சொன்னேன் ஆனால் என் பெயரை சொல்லவில்லையே...என் பெயர் "பவித்ரா"..உடலால் கலங்க பட்டாலும் உள்ளத்தால் என்றுமே பவித்ரமாக இருக்க விரும்புகிறேன்...
என்னை உணர்த்திய என் அன்னை,அத்தை போல் உலகத்தில் அனைவரும் இருந்தால்!!!
This is entry #44 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.