(Reading time: 5 - 9 minutes)

காதல் சூழ் உலகு - மனோ ரமேஷ்     

This is entry #49 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

ம்மா நீங்க எப்போ ரொம்ப சந்தோசமா இருந்தீங்க? கல்யாணத்துக்கு முன்னாடியா, கல்யாணத்துக்கு அப்புறமா”. நான் இல்ல என் தங்கச்சி தான், எங்க அம்மாவை இண்டர்வியு பண்ணிக்கிட்டு இருந்தா. இதுக்கு எங்க அம்மா வோட பதில் கல்யாணத்துக்கு அப்பறங்கறது நல்லாவே தெரியும். அதனால பதில் சொன்னதும் எப்படி சொல்றீங்கனு, அடுத்த கேள்வி.

ஏன்னா வேற ஒருத்தருக்கு பொண்ணு பார்க்க போனப்போ அவருக்கு தரலைன்னு எங்க அம்மா வீட்ல சொன்னதும். என் தாத்தா உடனே, என் அப்பாக்கு பொண்ணு குடுக்க சொல்லி கேட்டுட்டாரு. என் அப்பா பார்க்கவேற நல்லா இருப்பாரா, அதனால என் அத்தையும் சரின்னு சொல்லிட்டாங்க. எப்படியாவது கல்யாணம் நின்னுடும், நாம அப்பா கூட இருந்தடலாம்னு யோசிச்சிட்டு இருந்த என் அம்மாவும், சும்மா கூட வந்ததுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கறாங்களேனு என் அப்பாவும் யோசிச்சிட்டு இருந்தப்போ முடிவான கல்யாணம்.

விதினு ஒரு விஷயம் இருக்குனு, நான் நம்ப முதல் காரணம் இதுதான். 90ஸ் ஓட டிபிகல் மேரேஜ்.

“எப்படிமா கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லாம கல்யாணம் பண்ணி அதுல சந்தோசமாவும் இருக்க பழகிட்ட” இது நான் தான்.

இதுக்கெல்லாம் பதில் அப்போ அப்போ அவங்க பேச்சுல தெரியும்.

“புடவை எடுக்க கூப்பட போன் பண்ணா. சரிங்க, வந்தரோம்னு, அவங்க அண்ணனே பேசிக்கிட்டு இருக்காரு. நானும் பொறுமையை இழந்து, உங்க தங்கச்சி கிட்ட போன குடுங்கன்னு சொல்லிட்டேன்னு”. என் அப்பா சொல்லறப்போ தெரியும், எப்படி கல்யாணம் பண்ணலாம்னு எங்க அம்மாக்கு தோண ஆரம்பிச்சதுன்னு. புடவை வாங்க போனப்போ அவங்க சொந்தகாரங்க எல்லாம் வார்த்தைல சொன்ன புடவைய எல்லாம் எடுக்காம, என் அப்பா சும்மா பார்த்த புடவைய என் அம்மா எடுத்தப்போ என் அப்பாக்கு தோணி இருக்கும், கல்யாணமும் கொஞ்சம் ஈஸி தான் போலன்னு.

ன்றாட வாழ்க்கை போரட்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில அழகா ஒருத்தருக்கு ஒருத்தர் எவளோ நேசிக்கரோங்கறத புரிய வெச்ச ஜோடி இவங்க எங்க 2 பேர் கிட்ட பேசிகிட்டே சமையலையும் பண்ணிட்டு இருக்கும் போதே ல கல்யாண தேனிலா (என் அப்பாக்கு ரொம்ப புடிச்ச பாட்டு) பாட்டு போட்டதும் அப்பாக்கு போன் பண்ணி கேட்க சொல்லுனு போன் போட்டு பேச ஆரம்பிச்சிட்டாங்க. பாட்டு பாட்டுக்கு பேக் ரவுண்டுல ஓடிக்கிட்டு இருக்கு இங்க இவங்க கல்யாண தேனிலா தான் அது ஒருபக்கமா பாடிகிட்டு இருக்கு.

 நான் வரைய வந்தேன்

 நீ ஓவியமாய்

நான் செதுக்க வந்தேன்

 நீ சிலையாய்

நான் காதலிக்க வந்தேன்

 நீ மற்றொருவன் மனைவியாய்

 எப்போவோ, என் சித்தப்பா எழுதி நான் படிச்ச கவிதை. பேருக்கு தான் அவர் எனக்கு சித்தப்பா. எங்க 2 பேருக்கும் வயசு வித்தியாசம் கூட R.C கதைல, ஹீரோக்கும் அவரோட தங்கைக்கும் இருக்கற வித்தியாசம் தான்.அதனாலோ என்னமோ அவரோட காதலோட பல்வேறு பரிமாணங்கள நான் பார்த்தேன்.

காதலுக்குத்தான் ஜாதி மத பேதம்லாம் கிடையாது, ஆனா கல்யாணத்துக்கு கண்டிப்பா இருக்குனு, ரொம்ப சீக்கரமே எனக்கு உணர்த்தன காதல் அவரோடது. 20 வயசுக்கு முன்னாடி கடந்து போறதெல்லாம், காதல்னு என்னால ஏனோ இன்னும் ஏத்துக்க முடியல. ஆனா அப்படி ஒன்னும் இல்லன்னும், அந்த காதல் பத்தி சொல்லிட முடியாதுன்னு நெனக்கறேன். நெருப்பு சுடும்னு எல்லாருக்கும் தான் தெரியும். எப்படி,எவ்ளோ சுடும்னு சுட்டுகிட்டவங்களுக்கு தானே தெரியும். நாம காதல்னு நெனைக்கறது ஒரு ஈர்ப்புனு புரிய, ஒரு பலமான காதல் நம்மள கடக்கணும்னு சொல்லி தந்ததும் அவர் காதல் தான். என் சித்திக்கும் அவருக்குமான வாழ்க்கை காதல். சித்திக்கு படிப்பு என் சித்தப்பா விட அதிகம் இத என் சித்தி சொல்லி கேட்டதா எனக்கு நியாபகமே இல்லை, ஆனா என் சித்தப்பா சொல்லி அடிக்கடி கேட்ருக்கேன்,.

பம்பாய் படம் பார்க்கறப்போ எல்லாம், மணிரத்னம்க்கு வேற ஹீரோயின் பேரே கெடைக்கலையானும். என் சித்தப்பா இருக்கப்போ மட்டும் “கண்ணாலனே” பாட்ட மாத்தறப்பவும் தான், நெஜமான & நியமான பொசசிவ்னெஸ பார்த்தேன் சித்திகிட்ட.

இவங்களுக்கு எல்லாம் எப்போ காதல் வந்ததுன்னு எனக்கு தெரியல. ஏன், அவங்களுக்கே தெரியாதுன்னு நெனக்கறேன். அந்த மேஜிக் அதுபாட்டுக்கு நடந்திடும் அப்படி ஒரு மேஜிக் நடக்க ஆரம்பிச்சி இருக்கு எனக்கு ரொம்ப நெருக்கமான 2 பேருக்கு .ஆனா முழுசா நான் ஏத்துக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகனும். நான் தெரியாம விதைச்ச காதல் என் அண்ணனோட காதல். அதிகமா புடிச்சவங்கள பத்தி, அதிகமா பேசறது என் பழக்கம். அப்படி நான் பேசனத கேட்டு கேட்டு என் தோழிக்கு இவனையும், என் அண்ணாவுக்கு அவளையும் புடிச்சிடுச்சு.

இவங்க காதல் அலைபாயுதே ஆல்பம் மாதிரி இன்னைக்கு "பச்சை நிறமே" & "சிநேகிதனே" பாடுவாங்க. திடீர்னு "எவனோ ஒருவன்" வயலின் வாசிப்பாங்க, இல்லேன்னா "துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் மோதல்" கேக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி காதல் மட்டும் பண்ணிட்டு கல்யாணத்துக்கு அப்புறமா சண்டை மட்டும் போடுவாங்கலோனு, நான் கூட ஆரம்பத்துல யோசிச்சேன், ஆனா இவங்க இப்போவே சண்டையும் போட்டு ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியோ அந்த மேஜிக் இவங்க வாழ்க்கைளையும் நடக்கும்னு கண்டிப்பா நம்பறேன் (எப்படியாவது என் நம்பிக்கைய காப்பாத்திடுங்க 2 பேரும்)

“காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்னு” கவிப்பேரரசு சொல்லி இருக்காரு. காதலிக்கறவங்கல பார்த்தே எனக்கு ஒளிவட்டம் தலைய சுத்தவிட்டுச்சு ஆனா எல்லார்கிட்ட இருந்தும் எனக்கு தெரிஞ்சது காதலே ஒரு லாஜிக் தான் அதனால அதுக்குனு தனியா லாஜிக்லாம் தேவை இல்ல    

 This is entry #49 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.