(Reading time: 12 - 24 minutes)

ப்ராஜெக்ட்மிஸ்டர் பெண்” - மது

This is entry #50 of the current on-going short story contest!Please visit the contest page to know more about the contest. 

ப்போதும் வேலை முடித்து வந்து  இரவில்  அன்றைய செய்திகளைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தாள் நித்திலா. " இப்போது எல்லாம் நியுஸ்ல பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் தான் அதிகம். ஒரு காலத்தில வீட்ல அடச்சு வச்சு கொடுமை படுத்தினாங்கன்னா இப்போ வெளியுலகத்தில் நடமாட விட்டு சூறையாடறாங்க.. ச்சே!" என ஆதங்கப் பட்டாள்.

நிஜம் தானே.. நமது நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பெண்ணுக்குத் தீங்கு ஒவ்வொரு வகையில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.  .

" எப்போ தான் விடிவு காலம் வருமோ" என்று புலம்பியபடியே ஐ போடில் பாட்டை ஓடவிட்டு காதில் ஹெட் போன் மாட்டிக்  கொண்டு கண்ணயர்ந்தாள் நித்திலா..

"என்னைத் தவிர ஆண்கள் எல்லாம் பெண்கள் ஆகிப் போனால் கூட" பார்த்தேன் ரசித்தேன் பாட்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில் ஆழ்ந்த நித்திரைக்குள் பயணித்தாள்.

ஆழ் மனதின் எண்ணங்களே கனவுகளா...இதோ நித்திலாவின் கனவுலகில் நாமும்  சஞ்சரிப்போம். வாருங்கள்..

 நிலா!! வை டல் யா! " எனக் கேட்டுக் கொண்டே தன் அதி நவீன கணினியையும் தாண்டிய அட்வான்ஸ்ட் மென்பொருளோடு விளையாடிக் கொண்டிருந்தார் நித்திலாவின் பெஸ்ட் பிரண்ட் விநாயகர். (சாட்சாத் நம்ம கடவுள் விநாயகப் பெருமான் தான்)

"வின்னு" (நித்திலா இப்படி தாங்க நம்ம விநாயகரை செல்லமா கூப்பிடுவாள்) நீ காட் தானே.. உன் டாட் பெண்களைப் போற்றும் விதமா பெண் இன்றி ஆண் ஒன்றும் இல்லைன்னு உன் அம்மாவுக்குத்  தன்னோட லெப்ட் பாதிய கொடுத்தார்ல.... இப்போ பாரு இங்க எவ்ளோ கொடுமை நடக்குது.. நீ கண்டுக்காம கெண்டி  கிரஷ் (candy crush)விளையாடிட்டு இருக்க" என ஆங்க்ரி பர்ட்டாய் (angry bird) செல்ல சண்டை போட்டாள்.

"நிலா, அதென்ன லெப்ட் பாதின்னு அழுத்தி சொல்ற.. அதில் என்ன இருக்கு" என்று வேண்டுமென்றே தெரியாதது போல் நடித்தார் விநாயகர்.

"இந்த தெரிஞ்சுட்டே தெரியாததைப் போல நடிக்கிறது எல்லாம் உன்னாலே மட்டும் தான் முடியும்.. லெப்ட் சைடு தானே ஹார்ட் இருக்கு...ஆணின் இதயம் பெண்..அவள் இயங்கினால் தான் ஆணால் இயங்க முடியும்.. இப்போ தெரிஞ்சுதா" என்று விளக்கம் கொடுத்தாள் தன் நண்பனுக்கு..

" நானும் அதை தான் பார்த்துட்டு இருந்தேன் நிலா, எனக்கும் கஷ்டமா இருக்கு. தெய்வம் நின்று கொல்லும். தப்பு செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு" விநாயகர் சமாதானம் சொன்னார்.

"வின்னு... உலகம் நல்ல படியா  செழிக்க  ஆண் பெண்  ரெண்டு பேரும் வேணும். நான் தப்புக்குத் தண்டனை தருவதை விட எப்படி தப்பு செய்வதையே தடுக்கலாம்னு யோசிக்கிறேன்" என தன் ஒற்றை விரலை நெற்றிப் பொட்டில் தட்டிக் கொண்டே (யோசனைங்க) கூறினாள்.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஒவ்வொரு ஆணும் இதை உணரனும் நிலா. அப்போ தான் இது பாசிபிள்" என்றார்.

"ம்ம்ம் ...அது சரி தான் " என்று தலையைத்  தட்டிக் கொண்டிருந்த போது திடீரென மண்டைக்குள் தான்  கேட்டப் பாடல்" என்னைத் தவிர ஆண்கள் எல்லாம் பெண்களாகிப் போனால் கூட" ப்ளாஷ் ஆனது நித்திலாவுக்கு.

உடனே," வின்னு வின்னு!! சூப்பர் ஐடியா  " என துள்ளிக் குதித்தாள்.

விநாயகர்,"  ஏதும் மொக்கை ஐடியா சொல்லுவ. அதுக்கு இவ்ளோ பில்ட்  அப். சரி சொல்லு" என்று சீண்டியவாறே பேசினார்.

"ஐடியா சொல்லுவேன்.. ஆனா நீ தான் அதை நிறைவேத்தனும். பிராமிஸ் பண்ணு" என்றாள்.

"என்னை வம்பில் மாட்டி விடாம விட போறதில்ல நீ! இருந்தும் உனக்காக சரி. நான் ஹெல்ப் பண்றேன். பிராமிஸ்" என நட்பிற்காக உறுதி அளித்தார் விநாயகர்.

"என் ச்வீட் வின்னு.  என்னோட ஐடியா இது தான். ஒரு நாள் முதல்வன் மாதிரி இந்த உலகத்தில் எல்லா ஆண்களும்  ஒரே ஒரு நாளைக்கு பெண்களா மாறிடனும். அதுவும் தாங்கள் ஆண்களா இருக்கிற  ப்ரீ டேட்டில்!!!" என தன் யோசனையைக் கூறினாள்.

"ஹே! என்னோட பிரண்ட் என்பதை நீ நிரூபிக்கிற...நல்ல ஐடியா..ஆனால் அது என்ன ப்ரீ டேட்"  என்றார் விநாயகர்.

"வின்னு..ப்ரீ டேட் ஏன் சொன்னேன்னா அப்போ தானே அவங்களுக்குத்  தாம் எவ்ளோ தப்பு பண்றோம். ஒரு பெண் எப்படி எல்லாம் கஷ்டப் படறான்னு ரெண்டு பக்கமும் புரியும். அதாவது தீங்கு செய்பவனும் தானே.. அதனால் பாதிக்கப்படுவதும் தானே!... எப்புடி" என இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

"நாட் பேட்.. இது ஒன்னும் சிரமம் இல்லை. இப்போவே ப்ராஜெக்ட் ஆரம்பிச்சுடலாம். பேர் வைக்கணுமே" என்றார் விநாயாகர்                                             

ப்ராஜக்ட் - மிஸ்டர் பெண்.. நல்லா இருக்கா" என்றாள் நித்திலா.

விநாயகர் சூப்பர்ப் என்று அப்ரூவ் செய்ய , “இதையே வச்சுக்கலாம். நாம் நியு இயர்க்கு முந்தின நாள் 24 மணி நேரம் இந்த பிராஜக்ட் நடத்தலாம். புது வருஷத்தில் மறுமலர்ச்சி வரட்டும்" என்று உற்சாகமானாள் நித்திலா.

"நிலா. ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவங்கள விட்டு பெண்களை மதிக்காமல் போற்றாமல் இருக்கிறவர்களை மட்டும் மாற்றலாமா" என்றார் விநாயகர்.

"நான் ஒத்துக்கிறேன். ஆனால் எண்ண அளவில் ஒவ்வொருத்தரும் எப்படின்னு எப்படி கண்டுபிடிப்பது. நல்ல ஆண்கள்  பெண்ணாக மாறினாலும் இன்னும் அதிகமா பெண்ணோட உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுமே அவங்களால..பெண்ணை சம உயிராய் அவங்க உணர்வை  மதிக்கணும் என்ற இம்பக்ட் இன்னும் ஜாஸ்தியா இருக்கும்" என்றாள்.

"சரி... 31 டிசம்பர் 2014 க்கு இன்றைய ஆண்கள் அனைவரையும் பெண்களாக அனுப்பிடலாம். ஜனத் தொகை நெரிசல் ஏற்படாமல் இருக்க அன்றைய நாளை எல்லா பெண்களின் காலண்டர்ல ஸ்கிப் பண்ணி நேரா நியு இயர் 12 மணிக்கு அவங்களை கொண்டு வந்திரலாம்" என செம பிளானிங்கா சொல்லிக் கொண்டே தன் டேட்டா ஸ்கானிங்கில்  யார் யார் என்ன என்ன கேரக்டர்னு மின்னலை விட அதி வேகத்தில் பிராசச்சிங் செய்தார்.

"வின்னு..உன் சிஸ்டம்ல காமி.. நானும் பார்க்கிறேன்..என்ன அதியச மாற்றம் எல்லாம் நடக்குதுன்னு" என்றாள் நித்திலா.

"சரி வா.. எல்லா ஊருக்கும் ஒரு விசிட் கொடுப்போம்"  நாரதா சர்ச் என்ஜினில் விநாயகரின் கட்டளைகளை அவர் வாகனம் மவுஸ் தட்ட  ஒவ்வொரு இடமாய் திரையில் தெரிந்தது.

" இது  ஒரு கிராமம் நிலா. இங்கு இன்னும் பால்ய விவாகம் எல்லாம் நடக்குது. ஆணுக்குக் குடும்பத்தில் உயர்ந்த சலுகைகள் பெண்ணுக்கு மிகுந்த கொடுமை நிலை...வா என்ன நடக்குது பார்க்கலாம்" என்றார் விநாயகர்.

"நியு இயர்ல   திருமணம் இந்தப்  பெண் குழந்தைக்கு. படிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் கொண்ட 12  வயது குழந்தை. அவள் தந்தை அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துட்டார். அதுவும் பணத்திற்காக  ஆசைப்பட்டு. நம் பிராஜக்ட் படி அந்த பெண் குழந்தையாக இப்போது அதன் தந்தை...தந்தையாகவும் தந்தையே" என்றார் விநாயகர்.

பெண் குழந்தை (தந்தை ) படிக்கிறேன் என கெஞ்ச தந்தை பிரம்பால் அடித்துக் கட்டாயப்படுத்துகிறார். விடிஞ்சா கண்டிப்பா கல்யாணம் என அவர் மிரட்ட தனக்கு எப்படியாவது விடுதலை கிடைக்காதா என ஏங்குகிறாள் அவள்.

" இதெல்லாம் சரி..அந்த பெண் இடத்தில் அதன் தந்தையே இப்போ அந்த கொடுமைய அனுபவிச்சாச்சு. ஆனால் இதை ஒரிஜினல் தந்தை எப்படி உணர்வது" என அறிவுப்பூர்வமாகக் கேட்டாள் நித்திலா.

"நிலா! நிலா! அது அடுத்த நாள் எல்லாம் நார்மலா ஆனா பிறகு ஆண்கள் அனைவருக்கும் பெண்ணாக மாறியிருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள்  உணர்வுகளாய் பதிந்து போயிருக்கும். அதாவது அவங்க உள்ளிருந்து அதை உணருவார்கள். மற்றதெல்லாம் மறந்திருக்கும்..இந்த உணர்வு தான் நம் ப்ராஜெக்ட்டோட அடிப்படை "  என்றார் விநாயகர்.

"சூப்பர் வின்னு..யு ராக்" என ஐஸ் வைத்தாள் நித்திலா.

"வா அடுத்து அப்படியே ராண்டமா பார்ப்போம்" என விநாயகர் காரியத்தில் கருமமே ஆனார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.