(Reading time: 12 - 24 minutes)

து ஒரு மிடில் கிளாஸ் பாமிலி. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். காலை அவசரமாய் சமையல் செய்து குழந்தைகளை டென்னிஸ் கிளாசுக்கு தயார் படுத்தி (இப்போ ஸ்கூல் லீவ்) , அந்த பெண் நிற்க கூட நேரம் இல்லாம வேலை செய்ய நம்ம ஆளு ஹாய்யா பேப்பர் படிச்சிட்டு அதை செய் இதை செய்ன்னு அதிகாரம் வேற பண்ணுவார். போதாதுக்கு வேலைக்குப் போய் சம்பாதிக்கும் திமிர் அப்படின்னு காயப்படுத்துவாரு..இப்போ இன்னிக்கு கணவனும் அவனே மனைவியும் அவனே... அப்போ தெரியும்" என விநாயகர் கூற

" இது தான் உள்ளதிலும் கொடுமை. இப்போ கொஞ்சம் கொஞ்சம் ஆண்கள் மாறிட்டு வர்றாங்க. வீட்டு வேலையில் ஹெல்ப் செய்றாங்க. ஆனாலும் இன்னும் நிறைய பேர் மாறல. அவங்களுக்கு மனைவி வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும். வீட்டை சமாளிக்கவும் செய்யணும். அவங்க எல்லோரும் இப்போ இது எவ்ளோ கஷ்டம்னு ரியலைஸ் பண்ணுவாங்கல்ல" என்றாள் நித்திலா.

"ஆமாம் பாரேன்.. என்னிக்கும் இல்லாம திருவாளர் ஓவரா அதிகாரம் பண்றார். மனைவி இடத்தில இருக்கிறது தான் தான்னு தெரியாம" என சிரித்துக் கொண்டே அடுத்து யார் என ஸ்க்ரோல் செய்தார் விநாயகர்.

"மெட்ரோ நகரத்தில் ஒரு கார்பரேட் நிறுவனம் நிலா. வேலைக்குப் போகும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலும் பல ஹாராச்மன்ட்க்கு ஆளாறாங்க. இந்த ஆபிஸ்ல அந்த மேனேஜர் அவ அப்பா வயசிருக்கும், அந்த பொண்ணுகிட்ட இரட்டை அர்த்த ஜோக் அடிப்பதும் அவளுக்கு விருப்பம் இல்லாத போதும் நியு இயர் பார்டிக்கு வரச் சொல்லிக் கட்டயப்படுத்துறதும், வரலைனா உன் கேரக்டர் சரியில்லைன்னு அவதூறு பரப்புவேன்னு சொல்லி மிரட்டுவதும் ..  எனக்கே கஷ்டமா இருக்கு" என விநாயகர் சொல்ல நித்திலா கொதித்துப் போனாள்.

"எவ்ளோ படிச்சிருந்தும் எவ்ளோ பெரிய பதவியில் இருந்தும் பாரேன்..இவனுங்களை எல்லாம்" என கோபமாய் சாடினாள் 

"கூல் நிலா.. இப்போ தான் இன்னிக்கு மேனேஜரும் அவனே..அந்தப் பெண்ணும் அவனே..அவளுக்கு இந்த வேலை முக்கியம்.அதே சமயம் இவனால் அனுபவிக்கும் கொடுமைகளை எண்ணி விடும் கண்ணீர்.. பாரு நாளைக்கு அவன் ரியலைஸ் செய்திடுவான்..ஏன்னா இப்போ அழுவது அவள் இடத்தில் அவனே" என விநாயகர் சொல்ல ஆறுதல் அடைந்தாள் நித்திலா.

"இந்த பொண்ணுக்கு தை மாசம் கல்யாணம். அவ இப்போ பால்ல தூக்க மாத்திரை கலந்து சூசைட் பண்ண டிரை பண்றா" என விநாயகர் சொல்ல, " ஐயோ வின்னு..ஏன் என்னாச்சு. நீ முதல்ல அவ சூசைட் பண்ணாம  தடுத்து நிறுத்து" என பதறினாள் நித்திலா.

"நிலா!!! அவள் சாக மாட்டாள். நம்ம மவுஸ் கரக்ட் டைம்ல பாலை தட்டி விட்டுடும். சூசைட் பண்றவங்களுக்கு அந்த இம்பல்ஸ் கொஞ்ச நேரம் இருக்கும். அதை தாண்டிட்டா அவங்களே திரும்ப பண்ணிக்க பயப்படுவாங்க" என ஆறுதல் சொல்லி அந்தப் பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்தார்.

"ஏன் வின்னு.. அவளுக்கு என்ன கஷ்டம் தற்கொலை பண்ணிக்க போற அளவுக்கு. கல்யாணம்ன்னு வேற சொல்ற. ஏதும் லவ் மேட்டரா" என்று கேட்டாள்.

"அதெல்லாம் இல்ல. அவ மிகவும் தைரியமான பொண்ணு தான். அவ முழு விருப்பத்தோடு தான் அவ பேரன்ட்ஸ் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. இவ லவ் பண்ணிருந்தாலும் ஓகே சொல்லிருப்பாங்க" என்று விநாயகர் சொல்ல

" அப்போ என்ன தான் பிரச்சனை" என்று பொறுமை இழந்தாள் நித்திலா.

"சைபர் கிரைம்" என விநாயகர் சொல்ல," என்ன சொல்ற நீ" என்று அதிர்ந்தாள்.

"கூட வேலை பார்க்கும் ஒருத்தன் லவ் பண்றேன்னு சொல்லியிருக்கான். இவளுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியிருக்கா. அவன் மோசமா நடக்க முயற்சி செய்ததை தைரியமா தடுத்து அதை ரிப்போர்ட் வேற பண்ணிட்டா. அவன் அதற்கு பழி வாங்க ஆபீஸ் டூர் போகும் போது குரூப் போட்டோ எடுக்கறேன்னு சொல்லி இவளை மட்டும்  தனியா போகஸ் செய்து  அதை போட்டோஷாப் பண்ணி இப்போ மாப்பிள்ளை வீட்ல காட்டுவேன் அப்படின்னு மிரட்டுறான்"  என்றார் விநயாகர்.

ஏற்கனவே கொதித்துப்  போயிருந்த நித்திலா எரிமலையானாள். “இவனை எல்லாம் நடு ரோட்டல நிக்க வச்சு கல் எரிஞ்சே கொல்லணும்" என்று சீறினாள்.

"இப்போ டெக்னாலஜி வளர்ந்தது ஒரு நன்மைனா இப்படி தீமைகள் குற்றங்களும் தான் நடக்குது. அதுவும் யார் கண்ணுக்கும் தெரியாமல் தப்பு செய்றாங்க. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் அந்தப் பெண்ணால் இந்த விஷயத்தில் அது தான் இல்லை பழி வாங்க யாரோ பண்ணினது என்று எத்தனை பேருக்கு விளக்கம் சொல்ல முடியும். இந்த சொசைடியில் தான் வாழ வேண்டி இருக்கு.” என்று நிலா சாட

“இதை அடியோடு மாற்றனும்னா  எல்லோர் மனதிலும் இப்படி குற்றம் செய்யும் நினைப்பே வரக் கூடாது. இப்போ அந்தப் பெண்ணாய் அங்கு இருந்து தற்கொலை முயற்சி செய்தது அவளை ப்ளாக் மெயில் பண்ணவன் தான். அந்த உணர்வே அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்து அவன் மனச மாற்றிடும். நம்ம பிராஜக்ட் நோக்கம் அது தானே. நீ அமைதியா இரு" என்று ஆறுதல் சொன்னார்.

 வின்னு... ப்ளிஸ் என்னால இதுக்கும் மேல பார்க்க முடியல.. சீக்கிரம் இந்த நாள் முடியட்டும்... அதோடு இந்த வன்முறைகள் கொடுஞ்செயல் எல்லாமே முடியட்டும்.. நியு இயர் மலர்ச்சியா ஒரு மாற்றமா விடியட்டும்" என வருத்தமும் ஒரு வித நம்பிக்கையுடனும் கூறினாள்.

ரி வா.. ஹாப்பி நியு இயர்.. நாம பார்த்த  நபர்கள்  என்ன மாற்றம் அடைஞ்சிருக்காங்கன்னு பார்க்கலாம்" என விநாயகர் கூற மகிழ்ச்சியுடன் தலை ஆட்டினாள் நித்திலா.

தன் மகளின் ஆசைகளை ,கனவுகளை உணர்ந்த தந்தை திருமணத்தை நிறுத்தி அவளைப் பள்ளியில் சேர்த்திருந்தார்.

புது வருடம் மனைவிக்குக் காலையில் காபி போட்டுக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததும் இல்லாமல் அன்பைப் பொழிந்த படியே அவளுக்கு சரி சமமாய் வீட்டு  வேலைகள்  அனைத்திலும் உதவி செய்தார் அந்தக் கணவர்.

மேனேஜருக்கு அந்தப் பெண் மீது மனதில் ஒரு தந்தையின் பாசம் பெருக அவளிடம் கனிவோடு நடந்து  கொண்டார். தன் மனைவிக்கு இவள் இனி நம் மகளாவாள் என்று அறிமுகப்படுத்தி அந்தப் பெண்ணின் வளர்ச்சிக்கு உதவி செய்தார்.

போட்டோ காட்டி மிரட்டிய அந்த கல்லீக் அந்தப் பெண்ணிடம் ஒரு ராக்கியைக் கொடுத்து தன் கையில் கட்டச் சொன்னான். இனி தான் அவளுக்கு அண்ணன் என்றும் அவள் திருமணத்தில் எல்லா வேலைகளையும் தானே முன்னின்று செய்யப் போவதாகவும் உறுதி அளித்தான்.

"வின்னு!!! ஐ ஆம் சோ ஹாப்பி..." என்று விநாயகருக்குச் செல்ல ஹக் கொடுத்தாள்.

" நிலா..இவங்க ஒரு சாம்பிள் தான். உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் இனி பெண்ணினத்தை சரிசமமா மதிச்சு போற்றுவாங்க. ஏன்னா ஒரு பெண்ணாய் அவங்க ஒரு நாள் அனுபவிச்சு பார்த்துடாங்க. இந்த பிராஜக்ட் ஐடியா கொடுத்து என் டாட் மாம் உலகத்துக்கு சொன்ன தத்துவத்தை பிராக்டிகலா என்னை இம்ப்ளிமன்ட் செய்ய வச்சிட்ட.. நானும் ஹாப்பி" என  நித்திலாவை அணைத்துக் கொண்டார் விநாயகர்.

பெண் என்பவள் ஒரு சக மனுஷி. தன்னைப் போலவே உணர்வுகள் கொண்டவள். அவளை  மதித்து போற்றி இணைந்து வாழ வேண்டும் என்ற மனமாற்றம் எல்லா ஆண்கள் மனதிலும் ஏற்பட்டு  ஒரு புதிய ஒளிமயமான எதிர்காலம் விடிந்தது.

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ரிங்க்க்க்க்க் " அலாரம் அலறியது

திடுக்கிட்டு விழித்தாள் நித்திலா. கண்டதெல்லாம் கனவா.  தலை மாட்டில் இருந்த டேபிளில் அவளின்  இஷ்ட தெய்வமான விநாயகர் சிரித்துக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் உன் கனவை நிறைவேற்றுவேன்.. “பிராஜக்ட் மிஸ்டர் பெண்”  வெற்றியாகும் என சொல்லாமல் சொன்னாரோ!!!

அந்த நாளுக்காக நம்பிக்கையுடன்  காத்திருக்கிறேன் நித்திலாவுடன் நானும்.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்" (பாரதியார்)

(இங்கு குறிப்பிட்ட சம்பவங்கள் ஒன்றுமே இல்லை எனும் படியாக  கொடூர வன்முறைகள் பெண்ணுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றன . தீய எண்ணங்கள் கொண்டிருப்போர் உணர்ந்து மாற்றம் கொண்டு நல்லவர்களாக ஆகி விட வேண்டும் என்ற ஆவலில் உதயமான கற்பனை. நல்லவர்களாக, பல வகையிலும் பெண்ணுக்கு உறுதுணையாய் நிற்கும் ஆண்கள் அனைவருக்கும் ஒரு பெண்ணாய் எனது நன்றிகள்!!!)

 This is entry #50 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.