(Reading time: 4 - 7 minutes)

கவி காவியம் - தி.இரா.வெங்கட்

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்   
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
- வள்ளுவர்.

யற்கை  எழில்மிக்க   அழகான கிராமத்தில் எளிமையான முறையில் மாமனார், மாமியார் , அண்ணன்,அண்ணி,நாத்தனார்,நாத்தனார் கணவர்,கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன்    கூட்டுக்குடும்பமாக மிக சந்தோஷமாக கவி வாழ்கிறாள்.குடும்பத்தில் அனைத்து வீட்டு வேலைகளும் தானே முன்னின்று செய்கிறாள் கவி.பல வருடமாக கூட்டுக்குடும்பமாக கிராம மக்களே பொறாமைப்படும்படியாக இக்குக்கிராமத்தில்  வாழ்கிறாள்.

ஒரு நாள் பக்கத்து வீட்டில்  வசிக்கும் மகி என்கின்ற
மகேஸ்வரி தோழி கவியிடம், " நான் என் மாமியாரிடம் நல்ல பாசத்துடன் தான் பழகிறேன்.ஆனால் அவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறார்கள். இதனால் நான்நிம்மதி இன்றி மன வேதனையுடன் வாழ்கிறேன்." என கூறினாள்.

Kavi kaviyam

கவி " நானும் கல்யாண ஆன புதியதில் கூட்டுக் குடும்பத்தில்

எப்படி வாழ்வது என்பது தெரியாது. என் மாமியார் தான் எப்படி எல்லாரிடம் பழக வேண்டும்   என்பதை சொல்லித் தந்தார்கள்."

மகி " எனக்கு புரியும்படி சொல் கவி, நானும் உன்னை போல் என்
குடும்பத்தில் நற்பெயருடன் வாழ்கிறேன்."

கவி " உன் மாமியார் உன்னிடம் சண்டைப் போடுகிறார்கள் என
நினைக்காதே. நீ தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாகவே
தோன்றும்.அவர்கள் எதில் குற்றம் சொல்கிறார்களோ அதை தவிர்.நீ எப்படி
நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய்  என்று மூத்தோர்கள் சொல்லி இருக்கிறார்கள்."

மகி " கண்டிப்பாக அப்படியே செய்கிறேன்" என்றாள்.

கவி "மகி என்றால்  குழந்தை இயேசுவைப் பார்க்க வந்த மூன்று
அறிஞர்கள். உன்னிடத்தில் ஞானம் உள்ளது. நீ அனைத்து பிரச்சனைகளையும் வெல்வாய்.

மகி " எனக்கு முழு நம்பிக்கை உள்ளது கவி." என்றாள்.

கவி "குடும்பத்தில் அனைவரிடம் ஒற்றுமையாக இருக்கவேண்டுமெனில் வெளிப்படையான கருத்தும், திறந்த மனதுடனும், புரிதலும் மற்றும் விட்டுக் கொடுக்கும்  மனப்பான்மை இருக்க வேண்டும்.வாழ்க்கையில் பொறுமையை மட்டும் மூலதனமாக கொண்டு வாழ்ந்தால் அனைவரிடம் நற்பெயரை பெறலாம்.

"பொறுத்தார் பூமி ஆள்வார்" "பொறுமை கடலினும் பெரிது." கடமைக்காகவும், ஆதாயத்திற்காகவும் பிறரிடம் அன்பு செலுத்தக்
கூடாது.

அன்பு தன்னுடைய இதயத்திலிருந்து தானாக வரவேண்டும். அன்பை
செலுத்துபவர்கள் நாம் இரு வகையாகப் பிரிக்கலாம்.

1.மனம் திறந்த அன்பு தானாக மலரும். இது மனநிறைவை தரும்.நட்பு
நிலைத்து நிற்கும்.

2.மற்றவர்கள் நம்மை புகழ வேண்டுமென்று அல்லது தனக்கு ஏதேனும் மற்றவர்கள் மூலம் காரியம் தேவைப் படுவதற்காக மலர்கின்ற அன்பு.இது நீண்ட நாட்கள் நிலைத்து நிற்காது.

மாமியார் எதை சொன்னாலும் காழ்ப்புணர்ச்சி இன்றி மகி  நீண்ட நாட்கள் வாழ்ந்தாள்.

ஒரு  நாள் மாமியாரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்
மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.மகி மாமியாருக்கு துணையாக கவனித்து வந்தாள்.குணமடைய தினமும் பிராத்தனை செய்தாள்.

மாமியாரின்  உடல் நிலை நல்ல முன்னெற்றம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து வீட்டிற்கு வந்தார்கள். ஆனால் முன்பு போல் எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்  படுக்கையாக இருந்தார். மகி மாமியாருக்கு அனைத்து உதவிகளும் செய்து வந்தாள்.

மாமியார் மருமகள் மகியிடம், நான் உனக்கு செய்த துரோகங்களை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்.ஒருவருக்கு இளமையில் தேவைப்படும் துணையைவிட முதுமையில் தான் துணை எந்தளவிற்கு முக்கியம் என்பதை உணர்ந்தார்.

மகி "நான் உங்களுக்கு செய்யும் பணிகள் என்னுடைய கடமை.நான் இந்த அளவிற்கு உங்களிடம் அன்பு வளர கவி தான் காரணம் அத்தை." என்று கூறினாள்.

" என்ன சொல்கிறாய் மகி ?" என மாமியார் கேட்க.

மகி, கவி சொன்ன அனைத்தையும் சொல்ல, அங்கே கவியும் வருகிறாள். மூன்று பேரும் அரவணைத்துக் கொள்கிறார்கள்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

- வள்ளுவர்.

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.