(Reading time: 18 - 35 minutes)

 

து இத்தானூண்டு போட்டோ .. நிச்சயதார்த்த போட்டோல முகமே தெரியல......சுத்தி எல்லோரும் நின்னுகிட்டு 

முகம் முழுக்க சிரிப்பை பூசிக் கொண்ட ரவி..

ஏண்டா கல்யாணத்துக்கு நாங்க எல்லோரும் சுத்தி நிக்கலாமா இல்ல..

ச் ச்சு சும்மாயிருடா ...

அத்தை என்னடான்னா என் மகன் நீங்க பொண்ணு பார்த்தா போதும்னு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் பெருமை பேசிட்டு இருக்காங்க நீ என்னன்னா என் கிட்ட வந்து இப்படி ஐடியா கேட்டுட்டு இருக்கே.....ஏய் உன்னை எல்லாம் உலகம் நல்லவன்னு நம்புதேடா .

அதெல்லாம் எனக்கு தெரியாது ...இது உன்னால மட்டும் தான் செய்ய முடியும் ப்ளீஸ் ரவி...
ஆனால் ஒன்னு நான் அங்க போறது அவங்களுக்கு முன்னமே தெரியக் கூடாது 
எனக்காக அவங்க தடபுடல் செய்றது எனக்கு பிடிக்காது அதுதான் என்றவனை....

என்னடா இவ்வளவு தீவிரமா பேசிட்டிருக்கே அப்படின்னா கொஞ்ச நாள் முன்ன வந்திருக்கலாமில்ல.இப்போ கல்யாணத்துக்கு 10 நாள் முன்ன வந்து சந்திககணும்னா நான் என்ன செய்றது. அதுவும் அவங்களுக்கு சொல்லவும் கூடாதுன்னா அது எப்படி..

சரி நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன் என்று ரவி சென்று விட்டான்.

வன் சென்றதும் ஓய்வேடுக்க படுக்கையில் சரிந்தவன் நான்கு நாள் முன்பு வந்த அவன் நண்பன் குறித்த செய்தி குறித்து சிந்தனையில் ஆழ்ந்தான். சுந்தர் சில மாதங்கள் முன்பு திருமணமானவன் அவனைக் குறித்து தான் வேறொரு நண்பன் மூலமாக தெரிய வந்தது சுந்தரின் மனைவிக்கும் தாய்க்கும் பிரச்சினை வந்ததில் அவன் தனிக்குடித்தனம் போய் விட்டானாம். சுந்தர் அம்மா பற்றி இவனுக்கு நான்கு தெரியும் அவ்வளவு அமைதியான குணம் அவர்களுக்கு, சுந்தரின் மனைவியும் நல்ல மாதிரி தான் ஆனால் என்ன பிரச்சினையோ .அவனாவது சரி வீட்டில் இரண்டாவது மகன்தான், அவன் பெற்றோருக்கு துணையாக அவனுடைய அண்ணன் இருக்கிறான். தானோ வீட்டுக்கு ஒரே பிள்ளை தனக்கும் திருமணம் முடிந்ததும் மனைவி இப்படி ஏதாவது சொன்னால் என்ற குழப்பம்தான் இப்போது அவன் மனதில்.

அம்மாவை மட்டும் போய் பெண் பார்க்க சொன்னது தப்போ ஒரு வேளை தானும் கூடவே சென்று முதலிலேயே கல்யாணத்துக்கு பிறகு  தனிக்குடித்தனம் எல்லாம் வர முடியாது என்று பேசி முடிவு செய்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனை அது தான் எப்படியாவது அந்த  பெண்ணை அவள் பெயர் என்ன அகிலாவா பார்த்து பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வந்தான் அதற்காக தான் ரவியிடம் உதவியும் கேட்டு கொண்டான்.

டுத்த நாள் ரவி ஏய் மாப்பிளை உனக்கு ஒரு சான்ஸ் இருக்குடா பொண்ணு வளையல் சைஸ் வாங்கிட்டு வரணுமாம். அதான் நீ உன் ப்ரெண்ட்ஸ்க்கு கார்ட் கொடுக்க போய்ட்டு வர்றப்போ வாங்கிட்டு வருவேனு சொல்லிட்டேன் அங்க எப்போ போக முடியும்னு குறிப்பிட்டு சொல்ல முடியாதததால அவங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன் சரியா என்று கேட்ட ரவியிடம் தாங்க்ஸ்டா என்று கூறி எப்போ போகலாம், எப்படி பேச வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தான்.

ஐந்து மணியளவில் அகிலாவின்  வீட்டை அடைந்தவனை அவ்வீட்டின் பூட்டு வரவேற்றது.இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு பக்கத்து வீட்டின்  கரகோஷம் ஆர்வத்தை தூண்டியது என்னவென்று எட்டிப் பார்த்தால் அங்கே பிறந்த நாள் விழா போலும் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது அந்த குழந்தைகள் கூட்டத்தில் சற்றே பெரிய குழந்தையாக ரெட்டை பின்னலும் த்ரீ போர்த் & டீ ஷர்டில் விளையாடிக் கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி ஓ இது அகிலாதானே இல்லை ஒரு வேளை அவள் தங்கையோ? இல்லையே அம்மா சொன்னது ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கிறது அவங்க வீட்டில அவள் ஒரே பொண்ணு, அவளுக்கு ரெண்டு அண்ணனுங்க என்று அப்போ இது அவளேதானா அடக் கடவுளே இந்த ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடுற குட்டிப் பொண்ண எனக்கு கட்டி வைக்கிறாங்களே உயரம் ஐந்தடிதான் இருப்பா போலயே எங்க அம்மாக்கு ஆனாலும் இப்படி ஒரு ஆசை இருக்க கூடாது அமிதாப் ஜெயாபாதுரிக்கு அப்புறம் நாங்க தானா என தலை சுற்ற ஆரம்பித்தது.

அவன் வீட்டின் வாயிலில் நின்றது யார் சொல்லி தெரிந்ததோ அவள் மான் குட்டி போல துள்ளி ஓடி வந்தாள்.வாங்க வாங்க நீங்க ஆதவன் தானே உங்க போட்டோ பார்த்திருக்கேன் என்று சற்றும் தயக்கம் இல்லாமல் பேசியவளை பதில் சொல்லாமல்  பார்த்திருந்தான்.அம்மா அப்பா கார்ட் கொடுக்க போயிருக்காங்க என்றவள் காஃபி கொண்டு வந்தாள்.

ஆதவன்  வீட்டில் அம்மா அப்பா முதல் நாய் குட்டியிலிருந்து கிளி வரை எல்லாவற்றையும் ஐந்தே நிமிடத்தில் விசாரித்து முடித்து விட்டாள்.இவளுக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருக்கிறதே எப்படி ..என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் வேலை பார்க்கும் நிறுவனம் குறித்தும் தன் படிப்பு குறித்தும் சொல்லி முடித்தாள். 

வேறு என்ன பேச என்று தயக்கம் நிலவியப்போது அம்மா உன்னோட அளவு வளையல் வாங்கி வர சொன்னாங்க என்று சொல்லவும். வளையல் ஒன்றை கொண்டு வந்து தந்தாள். மறுபடி மௌனம் அவர்களை சூழ்ந்து கொண்டது ஆனால் அவள் ஏதோ கேட்க விரும்புவது மட்டும் அவனுக்கு புரிந்தது ஒரு வேளை அவளுக்கும் ஏதேனும் குழப்பம் இருக்குமோ என்று எண்ணியவன் என்ன ? என்றான்.

இல்லை நீங்க ஏன் இவ்வளவு ஹைட்டா இருக்கீங்க.. அதான் 

இதற்கு என்ன எக்ஸ்பிரஷன் காட்டுவது என புரியாமல் வந்த விஷயத்தையும் பேச முடியாமல் நான் வறேன் என்று சொல்லி புறப்பட்டான்.

குறித்த நாளில் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது.பெண்ணை மாப்பிளை வீட்டிற்கு விட்டுவிட்டு விடைபெற போகும் சமயம் அகிலாவின் முகத்தில் தெரிந்த சோகம் ஆதவனுக்கு இந்த ஏனோ வருத்தம் தந்தது.இந்த பெண்கள் வாழ்வு எவ்வளவு. மாற்றங்கள் கொண்டது.பிறந்த வீட்டை அறவே மறந்து விட்டு கணவன் வீட்டை சொந்தம் கொள்ள வேண்டும் நிர்மலாவும் அப்படித்தானே என தன் தங்கையையும ஒப்பிட்டு பார்க்க தோன்றியது.அப்பொழுது தான்  பெண் வீட்டிலிருந்த ஒருவர் பேசியது காதில் விழுந்தது.

அகிலா நீ முதலிலேயே  மாப்பிளையை முந்தானையில முடிஞ்சு வச்சிரு இல்லன்னா அம்மா பேச்சை கேட்டு ஆட ஆரம்பிச்சிடுவார் பிறகு  என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் சொல்லிட்டேன். 

அதைக் கேட்டவனுக்கு  மனதில் இருந்த நெருடல் கூடிப் போனது. இந்த அகிலா எப்படியோ தெரியவில்லையே ? என்ன ஆனாலும் சரி அம்மா அப்பாவை மட்டும் பிரியவே கூடாது என்று முடிவு செய்துக் கொண்டான். கொஞ்சம் தள்ளிப்போகலாம் என்று முடிவு செய்து அடுக்களைக்கு அருகில் செல்ல அங்கே மரகதம் அத்தை அம்மாவிற்கு மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

 இங்க பாரு ராஜி நீ ரொம்ப வெகுளி அதான் சொல்றேன் மருமககிட்டே ரொம்ப கண்டிப்பாக  நடந்துக்கோ என்ன ? இல்லன்னா என்னை மாதிரி தான் அவஸ்தை படணும என் மகன் என்னை நீ எப்படி இருக்க அம்மானு கூட கேட்கிறது இல்ல...ஹூம்...

என சோக குரலில் பேசி அம்மாவை பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் தானும் அப்படித்தானே சுந்தரை பற்றி கேள்வி பட்ட திலிருந்து நம்பிக்கை இழக்கவில்லையா ?ஏன் இன்னும் கூட மனதில் ஒரு நெருடல் இருக்கிறதே .ஏன் இந்த மனிதர்கள் மட்டும் எப்போதும் எதையாவது நினைத்து கலங்கி கொண்டே இருக்கின்றார்களோ?.திருமணம் எண்ணு பந்ததில் ஒருவரை ஒருவர் முழுவதும் நம்பாத வரையிலும் அங்கே முழுமையான அன்பு நிலவ வாய்ப்பே கிடையாது எண்ணிக் கொண்டான்.

பெண் வீட்டார் அனைவரும் விடைப் பெற்று செல்ல அம்மா அகிலாவிடம் 

சேலையை மாற்றிக் கொள்றியாம்மா ..

அத்தே என் துணில்லாம் எங்க இருக்கு ..

மாடியில அந்த முதல் ரூமில் உன்னோட சூட்கேஸ் இருக்கு பார்த்து கவனமா போ 
நிம்மி அகிலா கூட போயி அவளுக்கு ஹெல்ப் செய்யுமா..

சரிமா.. என்றவள்

ஹாய் அண்ணி எப்படி இருக்கு உங்க வீடு ....

எங்க வீடு இல்லன்னா  நம்ம வீடு என்று சொல்வாள் என நிலைத்திருக்க  தன் நாத்தனார் உங்க வீடு என்றது மனதை மகிழ்விக்க

ரொம்ப அழகா இருக்கு.இந்த படியில இருக்கிற டிசைன் மாதிரி நான் எங்கேயும் பார்க்கல 

அப்படியா இது அண்ணா சாய்ஸ்

என்று பேசியவாறு இருவருமாக மாடியில் ஏறினர். அம்மா என்று பிரணவ் பின்னாலேயே வந்து நின்றான்.  வாடா அம்மாவ தனியா எங்கேயும் விட்டுடாத என்று கொஞ்சி கொண்டு அவனை தூக்கிக் கொண்டாள்.நீங்க உள்ள போய் ட்ரெஸ் மாத்திக்குங்க அண்ணி நான் வெளியே நிக்கிறேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.