(Reading time: 18 - 35 minutes)

 

கிலா உடை மாற்றி கதவை திறந்து வெளியே வரவும் விளையாடிக் கொண்டிருந்த  பிரணவ் கையிலிருந்த கோலிக் குண்டுகள் கீழே சிதறவும் நேரம் ஒன்றாயிருக்க கோலிக் குண்டுகள் மீது கால்  வைத்த அகிலா நிலை தடுமாறி விழுந்ததில் வலது முட்டியில் பலமான அடி.

டேய் பிரணவ் என்று அவனை அடிக்க கை ஓங்கியவளை தடுத்தாள். ஐயோ அடிக்காதீங்க தம்பி பாவம் தெரியாம தானே ..என்று சொன்னாலும் அடியின் வலியின் காரணமாக  கண்ணீர் திரண்டு விட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் பதற்றத்தில் அவளுக்கு அந்த வீட்டின் ஒவ்வொருவரின் அன்பும் புலப்பட அவளிடம் அறிவுரை சொன்ன அக்காவின் கூற்று மறந்தே போனது.

வேக வேகமாக படியேறிய ஆதவன் அவளால் எழுந்திருக்க முடியாதது கண்டு அவளை கரங்களில் தூக்கிக் கொண்டு படி இறங்கினான்.

ஐயோ வேண்டாம் நான் நடந்து வறேன் என்று கூச்சப்பட்டாள் அகிலா." சரி ,படி இறங்கின பின்னே நடந்துக்கோ" என்றவன், கீழே சோபாவில் அமரச் செய்தான். ராஜியம்மா அவளுக்கு உடனே குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர்  அவளுக்கு எங்கே ஆடிப் பட்டிருக்கிறது என விசாரித்தார்.

முதலில் நான் கண் த்ரிஷ்டி சுற்றியிருக்கணும். என் மருமகளுக்கு யார் கண்ணு பட்டதோ என்று மரகதம் அத்தை பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு அவசர அவசரமாக த்ரிஷ்டி சுற்றிய தாயை பார்த்தவன் அம்மாவிடம் அத்தை மந்திரம் ஒதியது எடுபடவில்லை என்று புரிந்து ரகசிய புன்னகை சிந்தினான்.அகிலாவிற்கு  தன் அத்தையின் செயல் பார்த்து மனம் நிறைந்து போனது.

அம்மா பக்கத்தில க்ளினிக் திறந்திருக்கும் செக் அப் செய்து கூட்டி வறேன் என்றவன் அவளை கைத்தாங்கலாக கூட்டிச் சென்றான்.

இரவில் மனைவியிடம் "ரொம்ப வலிக்குதா ஒழுங்கா மாத்திரை எடுத்துக்கோ சரியாகிடும்  என்று கூறியவன் உனக்கு கால்ல பட்டிருக்கிறதுனால சேலை கேட்டுறது கஷ்டமா இருந்தா நம்ம ரூம்ல இருக்கிற போது மட்டும் வேணும்னா  த்ரீ போர்த் இல்ல ஸ்கார்ட் போட்டுக்கோ மற்ற நேரம் வேண்டாம் .யாராவது நம்மை பார்க்க வந்திட்டு போயிட்டு இருப்பாங்க இல்ல அதான்" என்று நீண்ட வாக்கியம் பேசியது பார்த்து வியந்து போனாள் இது வரை 2 வார்த்தை பேசினால் அதிகம் இப்போது இவ்வளவு பேசுகிறானே என்றுதான்.

தொடர்ந்த நாட்களில் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசி நட்பாகினார்கள். அவள் தன் தாயோடும் தங்கையோடும் பாசமாக பேசி பழகுவது பார்த்து அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருந்தான். தொடர்ந்த நாட்களில் விருந்துகளில் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதில் நேரம் கழிந்தது.

அப்போது தான் ஆதவனுக்கு அவன் அலுவலகத்திலிருந்து அவசர வேலை காரணமாக அவன் உடனே வெளிநாடு பயணிக்க வேண்டும் என்று செய்தி வந்தது .

அகிலா எனக்கு அவசர வேலையா போக வேண்டியிருக்கு 10 இல்ல 15 நாள் ஆகலாம்.கால் வலி மாத்திரை எல்லாம் சரியா  எடுத்துக்கோ.நான் போயிட்டு வாரேன் என்ன என்று விடைப் பெற்றவனை  மௌனமாக வழி அனுப்பினாள். 

அந்த சின்ன ஒரு பிரிவில் ஒருவர் மற்றவர் அருகாமையை விரும்பியது இருவருக்கும் புரிந்தது.ஆதவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் எனக் கேட்டு அவற்றை எல்லாம் சமைக்க கற்றுக்கொண்ட கொண்டாள் அவன் சர்டிபிகேட்  எல்லாம் பார்த்தவளுக்கு தன் கணவனின் புத்திசாலித்தனத்தை எண்ணி பெருமிதமாக இருந்தது.

அவனுக்கு அடிக்கடி  போன் செய்தால் பிடிக்காது நேரம் கிடைத்தால் அவனே ஸ்கைப்ல பேசுவான் என்று சொன்னதால் அவனிடம் பேச எண்ணினாலும் பேச இயலாமல் தவித்தாள்.அவன் ஸ்கைப்பில் பேசுகையில் எல்லோர் முன்பும் எப்படி பேச என்ற  கூச்சம் காரணமாக சாதாரணமாக பேசுவதோடு சரி . அவனோடு பேசிக் கொண்டு அமர்ந்திருந்த இடம், அவன் வாங்கி தந்த சேலை,தினம் தோறும் அக்கறையாக அவளை டாக்டரிடம் கூட்டிச் சென்றது எண்ணி அவன் மேல் பைத்தியமாகி போனாள்.அவன் எப்போது வருவான் என்று நாட்களை எண்ணத் தொடங்கினாள்.

அங்கே ஆதவனின் நிலையும் அதுவே ஆகியது இந்த சின்ன பொண்ணா என்று நினைத்தவன் திருமணம் அன்று அவளை சேலையில் பார்த்து மயங்கியது ஞாபகம் வந்தது. அவள் தன் அம்மாவின் மடியில் பிரணவிடம் போட்டி போட்டு படுத்தது, தன்னை பார்க்கும் போதெல்லாம் சிந்திய பிரத்தியேக புன்னகை எல்லாம் அடிக்கடி நினைவில் தோன்றியது.ஒரு வேளை நான் அவளை முதல் முறை பார்த்த பொழுதே அவள் என் மனதில் பதிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவளுக்கு அடிப்பட்ட பொழுது நான் அப்படி பதறி இருக்க மாட்டேன்.எது எப்படியோ இனி என் பெற்றோர் எனக்கு எவ்வளவு முக்கியமோ அது போல அவளும் எனக்கு முக்கியம் அவள் என்னில் சரி பாதி என்று எண்ணினான் .அவளிடம் போய் மனதிலிருப்பதை  சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். ஆனாலும் திருமணத்தன்று அவளின்  உறவினர் பேசியது குறித்த சலனம் மனதில் எழாமல் இல்லை.

ப்போது தான் ஒரு நாள் அகிலா ஆதவனுக்கு போன் செய்திருந்தாள். என்ன அகிலா என்றான்.

 உங்க கிட்ட தனியே  பேச வேண்டியிருந்தது. 

அதான் நேற்று பேசினேனே...

"அது இல்லங்க அப்போ அதை மாமா இருந்தாங்க இல்ல அவங்கள பற்றி பேசணுமா அது தான் இப்போ கால் பண்ணினேன். ஏன்னா  அத்தை மாமா இப்போ தான் வெளியே போனாங்க"  என்றவள் பேச்சுக் கேட்டு மனதில் கோபம் கணன்றது. இவள் அம்மா அப்பா பற்றி ஏதோ தப்பும் தவறுமாக பேசத்தான் கால் செய்திருக்கிறாள் என்று நினைத்தவன்.

இப்போ எனக்கு மீட்டிங் இருக்கு 

அப்போ நான் கொஞ்ச  நேரம் கழித்து பேசட்டுமா 

வேண்டாம் எனக்கு மெய்ல் அனுப்பிடு நான் ரிப்ளை  பண்றேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் .அவள் மெய்லை வாசித்தவன் அங்கே அவளின் செய்தி பார்த்து விக்கித்தான்.ஆதவனுடைய பெற்றோருடைய 30 வது திருமண நாளை எப்படியெல்லாம் சிறப்பிக்கலாம்  என்று ஐடியா கேட்டிருந்தாள் அவள்.

வன் மனதை வருத்திக் கொண்டிருந்த முள் அகன்று போனது. ஆசையுடன் தாயகம் திரும்பியவன் வீடு வந்து சேர மணி நள்ளிரவு 2.30 , விமானம் 2 மணி நேரம் தாமதமாகியிருந்தது.அவள் ஒரு போன் கூட செய்யவில்லையே ஒரு வேளை எனக்குதான் அவளை பிடித்திருக்கிறதோ அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று அலை பாய்ந்த மனதை அமைதி படுத்திக் கொண்டு கதவை தட்டினான் .கதவை திறந்தது  அம்மா, நான் வருவது தெரிந்தும் தூங்கி கொண்டிருக்கிறா என்று  மனம் இன்னும் சோர்ந்தது.

ஏண்டா நாங்க போன் செய்தாதான் உனக்கு பிடிக்காது  நீயாவது போன் செய்தா என்ன? உன் பொண்டாட்டி எப்ப வச்சி காத்துக்கிட்டு இருக்கிறா கொஞ்சமாவது அறிவிருக்கா ... என்று அதட்டவும்  புரிந்தது. அம்மா தான் போன் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். அம்மா தன் அறைக்கும் சென்று விட அகிலா வெளியே வந்து அவன் கையை பற்றிக் கொண்டாள். அவள் கண்ணில் மின்னிய மின்னல் என்ன செய்தி சொன்னதோ. 

நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா என்று சிறு பிள்ளையாக பேசியவளை  பார்த்து மனம் துள்ளியது. ரூமிற்குள் நுழைந்தவனை அதன்  நேர்த்தி ஒரு புறம் அசத்தியது என்றாலும் , புதிதாக இருந்த ஒரு அடி ஸ்டூல் ஒன்று கவனத்தை ஈர்த்தது. ஆமா எல்லா பொருளும்  என் உயரத்திற்கு இருப்பதால் இந்த  ஸ்டூல் அவளுக்கு தேவை தான் என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் முகம் கொஞ்சம் குறும்புத் தனமாக மாறியது.

நீங்க ஏன் இவ்வளவு ஹைட்டா  இருக்கீங்க என்றவள் அந்த ஸ்டூல் அருகே சென்றதும் அதில் ஏறி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள் .

கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் பேச்சு எழாமல் நின்றவன் என்ன? என்றான்

 என்ன என்ன? என் ஹஸ்பென்ட், நான் கிஸ் பண்ணேன் உங்களுக்கு என்ன? என்றாள் கெத்தாக.. 

ஏன்டி இதுக்காக்கத் தான் அன்னைக்கும் அப்படி கேட்டியா ..

பின்னே என்று சிரித்தவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை தன்னோடு அணைத்தவாறு படுக்கையில் அமர்ந்து அவள் கொடுத்த ஒரு முத்தத்திற்கு பதிலை மிக  தாராளமாக அளிக்க தொடங்கினான்.

நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்னினேன் குட்டிமா லவ் யூ 

லவ் யூ டூ ஆதவ் .

அந்த இரவில் அவர்கள் அறையில் கடிகார முட்கள் எழுப்பிய சப்தத்திற்கு இணையாக நெடு நேரம் முத்த சப்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.