(Reading time: 8 - 15 minutes)

நெஞ்சம் மறப்பதில்லை.... - சித்ரா

ற்றே இதமான  அந்த காலை பொழுதில்  அவளுக்கே அவளுக்கான நேரம் , coffee  with hubby .....

 இந்த  ஒரு சின்ன இதமான பழக்கம் அவர்களிடையே  ரொம்ப நாளாய் உண்டு .

பின் அவரவருக்கு உண்டான routines , ஆனால்  இது அவள் தினம் தினம் ஆசையோடு எதிர்பார்க்கும் நிகழ்வு ...இன்று அது போல்  காபி ரசித்து குடிக்கும் போது  வாசல்  அருகே  யாரோ தயங்கி நிற்க கண்டாள் ....

Nenjam marappathillaiஒரு நடுத்தர வயதுடைய  தலை முழுதும்  வழுக்கையாக  ஒருவரும் அவர் கூட அவள் மகள் வயதுடைய ஒரு இளையவனும்  நிற்க கண்டாள் 

யார்  என்று யோசிக்கும் போதே அவர்களும் மெல்ல உள்ளே நுழைந்தார்கள் ...

நீ  முத்து  தானே  எனும்  போதே அவளுக்கு சிரிப்பு வந்தது , தலை நிறைய இருந்த முடியின் சுவடே இல்லாமல்  அதனால்  அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருந்த அவன் முகம் அவளுக்கு சிரிப்பை  வரவைத்தது .அவனும்  சிரித்துக் கொண்டே  வந்தபடி  நீ மாறவில்லை  அப்படியே தான்  இருக்கிறாய்  என்றான் .

இதை  அமைதியாக  பார்த்து கொண்டிருந்த கணவரிடம் திரும்பி  என் college  friend  முத்து  என்றாள் .

அவர் எழுந்து கை குலுக்கவே ,பக்கத்தில் நின்றவனை  தன் மகன் கேஷவ் என்றான் .

உங்களுக்கும் coffee  கொண்டு வருகிறேன்  என கூறியவளை  அவசரமாக தடுத்து  நிறுத்தி அதெல்லாம் ஆச்சு மா உங்களிடம் அவசரமாக பேச வேண்டும் ... இங்கே  ... வேண்டாம்  உள்ளே போகலாம் என்று எழுந்த  கணவருடன் அனைவரும் உள்ளே சென்று study  ரூமில்  அமர அவள் கேள்வியாய்  நோக்கினாள் ...

ங்க ஒரு சின்ன intro ...

அவள்  உமா    42வயது   , 19  வயது  பொறியியல்  கல்லூரியில்  முதலாம் ஆண்டு  படிக்கும்    மகள்  முகில் மற்றும்  16 வயது school  finals  மகன் மூர்த்தி மற்றும்  small scale  industry  ஒன்றை  வெற்றிகரமாக  நடத்தி  வரும் இனிய  கணவர்  கொண்ட ideal  குடும்பம் ,  தெளிந்த  நீரோடை  போன்ற  சலனமில்லாத   வாழ்க்கை, செலவு  செய்ய  போதுமான  பணமும்  ,மனதுக்கு  கஷ்டம்  தராத  சமர்த்து  குழந்தைகள் , நிகழ்  காலத்தில்  மட்டுமே வாழும்  பொன்னான  மனமும்  கொண்டவள் .

இப்போதான்  அவள் கடந்து  வந்த கசப்பான  கடந்த காலத்தின்   ஞாபகமாக  முத்து  வந்து நின்றான் .

சொல்லுங்க   என்ற  கணவரை   தயக்கத்துடன்  ஏறிட்டான்  முத்து .....

மகேஷ்க்கு  உடம்பு  சரியில்லை , நர்சிங் ஹோமில்  இருக்கிறான் .... என்றபடி  அவன் தயங்க ...

அவருக்கு   மகேஷ்  பற்றி  எல்லாம் தெரியும்  நீ மேலே சொல்லு என்றாள்  நிதானமாக ...

aunty  உங்க  daughter  tv la  குடுத்த  ப்ரோக்ராம்மை  அங்கிள்  பார்த்து upset  ஆயிட்டார்  என்று சுருக்கமாக   உடன் வந்தவன்  கூற .... அவளுக்கு ஒன்றும் புரியவில்லை 

மறுபடியும்   முத்து  தயக்கத்துடன்  .... மகேஷ்  உன் பொண்ணை  நீ என்று நினைத்து  பார்க்க ஆசை படுகிறான்  ... அவனுக்கு  கொஞ்சம்  மன நிலை  சரியில்லை ... என கூற  ...

அவளுக்கு திக்  என்றது    ... மனநிலை சரியில்லையா  எப்போதிருந்து  அப்படி  என்றாள்  மனதில் சிறு வலியுடன் ...

அதற்கு நேரிடையாய்   பதில் கூறாமல்   ஒரு வாரமாய்  நர்சிங்  ஹோமில்  இருக்கான் ...உன்  மகளுடைய  பாட்டு  programai  tv il  பார்த்ததிலிருந்தே  அவனிடம்  ஒரு மூர்க்கம்  அதிகரித்துள்ளது , யாராலும் அவனை கட்டுபடுத்த முடியவில்லை ,,,உன் பெயரை சொல்லி அழைத்தபடியே  நிலை கொள்ளாமல்   தவிக்கிறான் .... பார்க்க  சகிக்கவில்லை   அதனால் ........என அவன் இழுக்க ...

அதனால்  என்ன என்றாள்  அவள் சற்று  வேகமாக .....

உமா   அவரை   பேச விடு  என்றது அவள்  கணவரின்  அழுத்தமான  குரல் ...

என்னங்க   அவன் என்ன சொல்ல  வரான்  தெரியுமா  என்றாள்  அவள் சற்றே சுருதி  இறங்கியவளாக ...

தெரியும்  அவர் என்ன சொல்ல வராருன்னு  கேட்போம்  முதலில் , அப்புறம்  தேவையான  முடிவை எடுக்கலாம்  என்றார் அவர் தீர்மானமாய்  ...

அங்கே நிலவிய  மௌனத்தை  மறுபடி கலைத்து  அந்த கேஷவ் தான்  uncle  ஒரு முறை  உங்க daughter  அங்கே  வந்து  அவரை  பார்த்து விட்டு  வர விடுங்கள் , நாங்க  அவங்க safety ikku  guarante ...

ஒரே ஒரு முறை  எங்களுக்காக  please  என்றான் ,he  is  in his  deathbed  uncle ,this would  be his last  wish ,,please  do not  say  no  uncle ... என்று  கெஞ்சியவா ரே   அவர்  கைகளை  பிடித்துகொண்டான் ....

அவர்  அவளை ஏறிட்டு   பார்க்க  அவள் கண்களில்  நிறைந்த  கண்ணீர்  கன்னங்களில்  வழிய செய்வதரியாது   நின்றாள் ...

எந்த  nursinghome ... என்று  அவர் வினவ   கோவையில்  இருந்த ஒரு பிரபல  இடத்தை சொன்னான் 

அவர் புருவம் யோசனையில் நெறிந்தது ...

அவள் காதுகளில்  எதுவும்  விழவில்லை   ... அவள் கண்  முன்னே  ஆறடி  உயரத்தில்  கம்பீரமாய்  ஒருவன்  நடந்து  வரும் காட்சியும் , கூடவே   ஒரு hospital  படுக்கையில்  செயின்  போட்டு  கட்டியபடி அவனே  போராடும்  காட்சியும்  மாரி மாரி  தெரிந்து   அவளை  வதைத்தது .பூவுக்கு கூட  வலிக்குமோ  என்று  பறிக்காமல்  விடும்  அவனின்  இந்த  நிலைக்கு  தானே  காரணம்  என்ற உண்மை தீயாய்  அவளை சுட ,நிற்க  மாட்டாமல்  பொத்தென்று  அருகே  இருந்த சோபாவில்  சரிந்தாள் .

உமா  என்ற  அழைப்புடன்  அவள் கணவர் அருகே வர, தன்  கைகளில்  முகம் புதைத்து  குலுங்க தொடங்கினாள் ......அவள் தலையை  ஒரு கையால்  வருடியபடியே  ,எனக்கு புரியுது உமா  உன் வலி  , ஆனா  அவங்க அவசரம்  என்கிறார்களே   அதனால் என்ன செய்யலாம்  என்று யோசிக்கணும்  மா.  அதற்கு  நீ தைரியமாய்  இருக்கனும்  என்றார்  மென்மையாகவும்    அழுத்தமாகவும் 

இங்கு நடக்கும்  களேபாரத்தை  என்னவென்று  பார்க்க  வந்த முகிலை  முதல் முறையாக  பார்த்த  முத்து   அதிர்த்து  உமா உன்னை 20 வருடம் முன்னே  பார்த்த  மாதிரியே இருக்கிறாள்  no  wonder  என்றான் ...

நிலைமையை  கட்டுக்குள்  கொண்டு வந்த அவள்  கணவர் ,முகிலுக்கு  சுருக்கமாக  எல்லாத்தையும் எடுத்து கூறி  அவள் சம்மதத்துடன்  அனைவரும்  கோவை  செல்வதென  முடிவெடுத்தார் .

கன் மகள் மற்றும்  கணவருடன்  அவள் கோவை பயணத்தை  ஆரம்பித்தபோது ,  மனம் படு வேகமாய் பின்னே  ஓடியது .

இப்போது போல் அப்போதெல்லாம்  புற்றீசல்  போல engineering  colleges  கிடையாது . engineering  பெண்கள் படிபதுவும்  அபூர்வமே , doctor ,teacher ,nursing  என்ற  சிறு வட்டத்தை  தாண்டி அவள் engineering  படிக்க  ஆசைப்பட்ட போது  , ஒரே செல்ல  மகளின் ஆசைக்கு அப்பா குறுக்கே நிற்கவில்லை . ஆனால்  காதல் கீதல்  செய்யகூடா தென்பது   எழுதப்படாத  விதி .

 கூடவே    அவள் தலை விதி  வேறு பாதையில்  அவளை  விரட்டியது .

ஆறடி உயரமும் , apple  போன்ற உருவமும் கொண்ட அவனிடம்  தலை குப்பிற  காதலில்  விழ வைத்தது .

ஆனாலும்   இருவரும்  வளர்த்த சூழ்நிலை  மற்றும் அவர்களின்  இயல்பான குணம் காரணமாக  decent distance  உடனே  அவர்கள்  காதல் வளர்த்தது, அதுவே அவர்கள் காதல் வெளியில் தெரியாமல்  நான்கு  வருடம் கடக்க  உதவியது .

எல்லாவற்றிற்கும்  ஒரு முடிவு எடுக்கும் காலமும்  வந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.