அவர்கள் course முடித்து அவர் அவர் வீடு செல்லும் முன்னே அவன் வந்து தாயாருடன் அவளை பெண் கேட்பது என்றும், அதற்கு அவன் ஒரு வாரம் எடுத்துகொள்ளலாம் .அந்த இடைவெளியில் அவளும் தன் தந்தையுடன் பேசி அனுமதியுடன் காத்திருப்பாள் என்று முடிவெடுத்து கொண்டார்கள் .சம்மதம் வாங்கிவிடலாம் என்ற இமாலய நம்பிக்கை தான் இரு வீட்டிலும் பொய்த்து போனது .
அவன் தாய்க்கு பெரிய இடம் வேண்டாம் என்ற எண்ணம் இருந்தது, எடுத்து சொல்ல தந்தை இல்லாததால் அம்மாவை ஒரு வழியாய் சமாளித்து தாய்மாமனுடன் பெண் கேட்டு வந்தான் .
இங்கேதான் அவள் தந்தையின் சூழ்ச்சிக்கு இரை ஆனான் .
தன் தந்தையுடன் காதலை பற்றி அவள் பேசியபோது அவர் சம்மதம் போல் நடித்து அவளை பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு , அவன் வந்த போது அவளுக்கு கல்யாணம் முடிந்து விட்டது என ஒரு பத்திரிக்கையை காட்டி அனுப்பி விட ...ஏற்கனவே பெரிய இடம் நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற அவன் வீட்டு பெரியவர்கள் கூற்று இப்போது மெய்யானது போல அவன் செயல் இழந்து போனான் . அவளையும் சந்திக்க முடியாமல் , பெரியவர்களை சமாளிக்க முடியாமலும் அவன் திணறிய அந்த பொன்னான பொழுதுகளில் அவளை மெல்ல அவன் பெண் கேட்டு வரவில்லை என்று நம்ப வைத்து கல்யாணத்தையும் முடித்தார் வெற்றிகரமாய் .
அந்த news பேப்பரில் பார்த்த போது தான் அவன் தலையில் அது பெரிய இடியாய் இறங்கி அவனை நிலை குலைய வைத்து பித்தன் ஆக்கியது .
இதை எதையும் அவள் அறியாத படி காத்து அவளை வடக்கே அனுப்பி வைத்தார் .
வசதி வாய்ப்பும் குறைந்த , மன தைரியமும் இழந்த அவன் தாய் அவன் உயிருடன் ஜடமாகவேனும் இருந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ள பட்டாள் .அவன் நிலை கண்டு வருந்தியே அவள் சீக்கிரம் போய் விட்டாள் .அவனால் யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை , அவனிடத்தில் உயிர் மட்டுமே இருந்தது .அவன் நிலை கண்டு தவித்த நண்பர்கள் அவனை பார்த்து கொள்வதை தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை.
இங்கே இவளோ தன் கணவரிடம் உண்மை கூறி ,அவள் அறிந்தவரையில் இணக்கமான வாழ்கையை ஆரம்பித்தாள் .வருடங்கள் பல உருண்டு ஓடியபின் தான் அவள் அம்மா மரண படுக்கையில் இருந்த போதே இவளுக்கு உண்மை தெரிந்தது . அவனுக்காக வருந்துவதை தவிர அவள் செய்வதற்கு ஏதும் இல்லாமல் போனது.
இப்போ இதனை வருடம் கழித்து மறுபடியும் விதி தன விளையாட்டை தொடங்கியிருக்கிறது .
நர்சிங் ஹோமை அடைந்த அவர்கள் அவனை காண செல்லும் முன் அவள் உள்ளம் பதறியது .அவள் மகளை அவள் என்று அவன் நினைத்து பார்த்தபின் அடுத்த கட்டம் என்ன, அங்கே இருந்து அடுத்து செய்ய போவது என்ன , ஒரு வேளை அவன் குணமாகிவிட்டால் அவள் மகள் தொடர்து நடிப்பது சாத்தியமா ...
அவள் மண்டை உடைந்து விடும் போல் இருந்தது .கண்களால் அவளுக்கு தைரியம் சொன்னபடியே அவள் மகளை உள்ளே அனுப்பினார் .
அவன் கண் மூடி படுத்திருந்தான் .அவன் காண முடியாத தூரத்தில் இருந்து அவனை பார்த்தவளுக்கு நெஞ்சம் பதறியது . ரத்தம் வடிந்தது அந்த நேசம் கொண்ட நெஞ்சில் இருந்து ...
படுக்கையை நெருங்கிய அவள் மகள் மெல்ல அவனை அழைக்க ,
மெல்ல கண் திறந்து பார்த்த அவன் கண்கள் பிரகாசம் அடைத்தது . ஒரு கை மெல்ல உயர அதன் மீது தன் கைகளை அவள் வைத்தாள் .
அவன் ஏதோ கூற அவள் அதை குனிந்து கவனமாய் கேட்டு கொண்டாள் .
அது வே பெரும் பிரவாசை யாய் போக அவன் ஆவி அடங்கியது .
வெடித்து கிளம்பிய அழுகையுடன் அனைவரும் உள்ளே செல்ல அவன் கடைசி வார்த்தைகள் என்ன என அவளிடம் கேட்க அவள் கூறியது
take care of your mummy she is priceless .... was his last words....
நெஞ்சம் மறப்பதில்லை
அது தன் நினைவை இழப்பதில்லை
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.