Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

அவனால் நான் அழகு - மது

                 அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை 

                 குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே

                 இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்

                 டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்

                 மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை 

                 நுண்வலைப் பரதவர் மடமகள்

                 கண்வலைப் படூஉங் கான லானே.

                                (ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன் குறுந்தொகை 184 )

 

நுண்ணிய வலையையுடைய நெய்தல் நில பரதவர் மகளது கண்வலையில் என் நெஞ்சம் பட்டு ஆண்டாண்டாய் தங்கிவிட்டது; இந்நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; யாராயினும் அவ்வலையிலே அகப்பட்டு தான் போவர் ; இது யான் அறிந்த உண்மை; ஆதலின் அங்கே ஒருவரும் செல்லற்க; செல்லின் துன்புறுவீர் என்று தலைவியின் கண்வலையில் அகப்பட்டு காதலால் வயப்பட்ட தலைவன் கூறுவதாக அமைந்த அழகான குறுந்தொகை பாடல்.

இந்த கவிக்கதையின் நாயகனும் நாயகியின் அழகிய கண்வலையில் சிக்கி அவள் நெஞ்சத்தில் உறைவதாக அமைத்திருக்கிறேன்.. கதைப் போக்கில் தெரிந்து கொள்வீர். 

 

Avanal naan azhaguழகு

கயல்விழி பாவையா

கருணை  பொங்கும் பார்வையா (1)

 

அழகு

செம்பருத்தி  இதழா

செந்தேன்  சிந்தும்  மொழியா (2)

 

அழகு

பால்நிலா முகமா

பிறர் நலம் பேணும் அகமா (3)

 

அழகு

மயக்கும் இளமையா

மெழுகென உருகும் தன்மையா (4)

 

அழகின் இலக்கணம்

எதுவென உணர்த்தும்

இக்கதை களம் (5)

 

 தித்யா

அறிமுகம் தேவையில்லை

அறியாதவர் எவருமில்லை (6)

 

ஆறடி அழகன்

அகிலம் ஆளும் இளைஞன்

மென்பொருள் உலகின் முடிசூடா மன்னன்

மெல்லிடை மாதரின்  மனம் கவர் கள்வன் (7)

 

கல்வியா செல்வமா வீரமா

சண்டை போட்டுக் கொள்ளும்

சரண் புகவே இவனிடம் (8)

 

பூர்வா

அரிதினும் அரிதானவள்

அன்பே உருவானவள்(9)

 

அறிவின் சுடரொளி

அரவணைக்கும் இனிய மொழி

மருத்துவ துறையில் ஒளிரும் வைரம்

மனதை ஈர்க்கும் அழகும் குணமும்(10)

 

இதழில் இரு விழியில்

இவள் சிந்தும் புன்னகை 

இதயம் இழுக்கும்  தூண்டில் (11)

 

வனிருந்தது ஓர் அரங்கம்

அங்கு அரங்கேறியது ஓர் நாடகம்

புற்று நோய் விழிப்புணர்வு இயக்கம் - கதா

பாத்திரமாய் அவள் சொன்னாள் விளக்கம் (12)

 

இயற்கையோடு இசைந்த வாழ்வும்

உணவே மருந்து முன்னோரின் தத்துவம்

இதை பின்பற்றாத வாழ்வியலின் தாக்கம்

உடலை துன்புறத்தும்  நோய்களுக்கு கொண்டாட்டம் (13)

 

அயல்நாட்டு மோகம் அனைத்திலும்

இறக்குமதி பொருளுக்கே முதலிடம்

நலமும் நாணயமும் அடகு போகும்

நலிவும் பண வீக்கமும் வந்து சேரும் (14)

 

உணவா உண்கிறோம் இல்லை ரசாயனம்

அருந்தும் திரவம் கெமிக்கல் கலப்படம்

சுவாசிக்கும் காற்றும் என்ன சுத்தம்

மார்டன் என்ற பெயரில் மரண சாசனம் (15)

 

இளநீர் அருந்தினால் தணியாதோ தாகம்

இளம்பிஞ்சும் நாடும் வண்ண பானம்

மண்பாண்டம் என்றால் இன்றைக்கு கேவலம்

பாலிதீன் பிளாஸ்டிக் இதுவே பெருமிதம் (16)

 

அறிவோமா அனைத்தும் - உடலை

அரித்து உருக்குலைக்கும்

புற்றாய் எடுக்கும் விஸ்வரூபம்

பிணியின் கொடுமைக்கு ஆளாக்கும்(17)

 

நோய் தீர்க்கும் மருந்தே

நரம்பில் நஞ்சாய் ஏறும்

பக்கவிளைவுகளின் தாக்கம்

கேட்டக் சொல்லும் மரண யாசகம்(18)

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Madhu Honey

Madhu Honey

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • NA
Add comment

Comments  
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுTamilthendral 2015-11-09 17:47
Kalakkitinga Madhu :clap:

Last paragraph is awesome (y)
Reply | Reply with quote | Quote
+1 # ANAJenitta 2015-11-04 13:46
Hi mathu..very nice and touching story... Keep writing.... God is always with u
Reply | Reply with quote | Quote
# RE: ANAMadhu_honey 2015-11-04 19:58
Thanks so much Jenitta...will try to write more
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுThenmozhi 2015-11-03 20:55
alagu kavithai kathai Madhu (y)

Aburva romba aburvamanavanga thaan. Very nice character.

Padika romba inimaiya irunthathu.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 19:59
Thanks so much Then for ur sweet comments :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுKeerthana Selvadurai 2015-11-03 13:05
சிறு இடைவெளிக்கு பிறகு வந்திருந்தாலும் உன் அழகு தமிழின் இனிமை குறையாமல் அசத்தலாய் அமைந்திருக்கிறது கவி கதை. :clap: :clap: :clap:

குறுந்தொகை பாடலிலே மனதை கொள்ளையிட்டு விட்டாய். (y)

எது அழகு?
அகமா? புறமா?
இந்த பட்டிமன்றத்தின் தீர்ப்பை பாராட்ட வார்த்தை இல்லையடி தோழி.

நம் அன்றாட தேவைகளான உணவு,காற்று மற்றும் நீரே கலப்படமாய் தான் உள்ளது மற்றும் நாகரீகம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் ஆபத்தை எடுத்து சொன்ன விதமும் சபாஷ்.

கன்னியவளின் பாவனைக்கும் பார்வைக்கும் மயங்காதோர் உண்டோ?ஆதித்யன் மட்டும் என்ன விதிவிலக்கு??!!!

கண்ணும் கண்ணும் நோக்கி காதல் விருட்ஷம் மனதில் விழுந்தது.காதல் உண்டான கணத்தை ஏனோ இருவரும் வாய் விட்டு சொல்லாமல்,மனசுக்குள்ளே அன்பு நீர் ஊற்றி வளர்த்தனர்.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுKeerthana Selvadurai 2015-11-03 13:18
செய்யும் தொழிலே தெய்வம் இருவருக்கும்.காதல் நெஞ்சம் காண ஆசை கொண்டாலும் தொழில் பக்தி அதை செய்ய விடவில்லை.

உலகுக்கே சித்த மருத்துவத்தின் உன்னதத்தை எடுத்துக்காட்ட ஆராயிச்சியாய் எடுத்துகொண்டது அவளையே.இப்படி ஒரு செயல் செய்ய எத்தனை பேருக்கு மனம் வரும்!!! :hatsoff:

உற்றாரும் பெற்றோரும் கை விட்ட நிலையில்,கை கொடுக்க வந்து சேர்ந்தான் அவளின் கண்ணாளன்.என்னே அவனின் காதல்!!! :hatsoff: அவளின் அகத்தை பார்த்து ஏற்று கொண்டான் அவனின் பாதியாய்.அவளின் லட்சியம் அவனின் லட்சியம் ஆனது.விளைவு அவள் மறு பிறப்பெடுத்தாள் அவனுக்காக அவளின் ஆராயிச்சி வெற்றி என்று உலகுக்கே பறை சாற்ற.... :yes:

புறம் பார்த்து வரும் காதல், புற அழகு அழிந்தவுடன் அழிந்து விடும்.

அகம் பார்த்து வரும் காதலுக்கு அழிவென்பதே இல்லை.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுKeerthana Selvadurai 2015-11-03 13:26
ஆதித்யனின் அபூர்வ மலர் அவள் அவனுக்கு மட்டுமல்ல உலகுக்கும் தான். :yes:

கவி கதையில் பிடித்த வரிகளை கோடிட்டு காட்ட தேடுகிறேன்.ஏனோ ஒரு வரியை விட்டு, மற்ற வரியை காமிக்க மனம் வரவில்லை.அனைத்து வரிகளும் இணைந்து தானே எங்களுக்கு இப்படி ஒரு விருந்து கிடைத்திருக்கிறது.இதில் பிடித்தது எது பிடிக்காதது என எப்படி சொல்ல??!!!! :D


இப்படி ஒரு மையக் கருத்தை எடுத்து சொல்லியிருக்கும் விதத்திற்க்கே :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:

Eagely waiting for next my dear.... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:06
உன்னால் தான்
மீண்டும் எழுதுகோல் பிடித்தேன்
உன்னால் தான்
கவிதையாய் கதை புனைந்தேன்
கற்பனை கரு எனதே ஆனாலும்
ஊக்கமளித்து உரு பெற செய்தது நீ தானே
நட்புக்குள் நன்றி நோ என்ட்ரி என்பாய்
இருந்தும் விதியை மீறி சொல்கிறேன் நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுChillzee Team 2015-11-02 20:12
Romba naalaiku appuram vanthirukum unga kavithai kathai. Arumaiyo arumai.

kavithai, karu irandume azhagu!!!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:07
Thanks Chillzee team... its ur constant support and encouragement tat makes me write more
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுSharon 2015-11-02 19:45
Rombavum Azhaagaana Kadhai Kavidhai :clap: :clap: ..
Unga tamil eppavum pola thaen inimai (y) (y) ..
Karuthu semma :) .. Unga padaipugalai padikka rasikka waiting Madhu ji :) :)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:08
Thanks Sharon for ur lovely comments :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுKalpana V 2015-11-02 17:27
Romba alagana arthamullaheart touching kavithai kathai. (y) Putru noiyil noyin theeveeram oru pakkam endral, Meendavargalai intha ulagam parkkum paarvai matrum oru murai noi kuliyal. Nijathai yetru kolvatu nammudaiya kathaigalilum karpanaiyilum matume.Aana ungaludaiya ennam paaratukkuriyathu. (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:10
Thanks Kalpana... Yes putru noyaal pathikapattavargalukku moral support romba avasiyam... thanks for ur comments
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுSujatha Raviraj 2015-11-02 16:42
madhu kutty ......... romba ormba romba happy aah irukken ... :dance: :dance:
padichittu koncha neram am speechless …. ippo kooda enna comment podrathine therilla ….... :yes: :yes:

superb messg …..... :hatsoff: :hatsoff: :hatsoff:

love oru beautiful feeling … adhai romba romba azhaga kavidhaiya sollirkka thangam ….. :clap: :clap:
apoorva mattum indha kavidhai kooda oru apoorvam aana padaippu … (y)

thousands of huggs and kisses chellam …..madhu kutty mayakkitta da …....... :yes: :yes: (y) (y)
Reply | Reply with quote | Quote
+2 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:11
Suji chellam... intha happiness paarka thaan intha come back... its ur love chellam tat made me write again :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுPrama 2015-11-02 11:35
அவனால் நான் அழகு
அதனால் தெரிந்தது மீண்டும்
எனக்கு மதுவின் அழகு .... :hatsoff:

மிக அருமையான புதுமையான மிகவும் அவசியமான கவி கதை ....மிகவும் விரும்பி மீண்டும் என்னை வாசிக்க தூண்டியது ... :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:12
கவிதை கதையை ரசித்துப் படித்து அழகாய் கருத்து சொல்லியிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி பிரேமா..
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுManoRamesh 2015-11-02 09:37
Welcome back Madhu.
Re entry ku thaguthantha content and unga spl tamil ellame super.
(y) (y) .
keep cont.
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:13
Thanks Mano :) will try to keep writing
Reply | Reply with quote | Quote
+2 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுAnna Sweety 2015-11-02 09:17
Ungalai thirumbavum Chillzee la paarpathil romba santhosham Madhu...As usual ungal Tamizh azhaku... :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:13
Thanks so much sweety:)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுThangamani.. 2015-11-02 07:14
ஹாய் மதூஊஊஊ...ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் கழிச்சு ஒங்க அருமையான எழுத்து..ரொம்ப சந்தோஷாஅ இருக்கு ஒங்கள மீண்டும் சந்திக்கிறது
இனிமே இப்பிடி நீண்ட விடுப்பு எடுக்காதீங்க..
ப்ளீஸ்..இதுபோல் நிறைய கொடுங்க..ஆவலுடன் இருக்கிறோம்...என்றும் அன்புடன் அம்மா..
இனிக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:16
அன்பு அம்மா!!! நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்னேன்.. சாரி அம்மா ..சில சொந்த அலுவல் காரணமா ஒரு சின்ன ப்ரேக் எடுக்க வேண்டியது போச்சு.. இனிமே தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா..
Reply | Reply with quote | Quote
+2 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுchitra 2015-11-02 06:52
நானும் ஜான்சி சொன்னதையே சொல்கிறேன் , அருமை ,உங்கள் முத்திரை கவிதை சிறுகதை ,மிக அருமை , தொடர்ந்து இது போல் அறுசுவை விருந்தை எதிர்பார்கிறோம் .
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:19
மிக்க நன்றி சித்ரா... தொடர்ந்து எழுத ஆசை தான்... காலம் கை கொடுத்தால் அன்பு நெஞ்சங்களுக்கு அறுசுவை விருந்து படைத்துக் கொண்டே இருப்பேன்
Reply | Reply with quote | Quote
+2 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுJansi 2015-11-02 05:50
நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பெயரை Chillzee-யில் வாசித்ததே மிகவும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது மது...... :yes:

இந்த அருமையான கவிதைச் சிறுகதை தந்திருப்பதற்க்கு பாராட்டுக்கள்.

கதைக்கரு, அதைச் சொன்ன விதம் மிக மிக அருமை.இன்றைய காலக் கட்டத்திற்கேற்ற கருத்து.
:hatsoff: மது.

எனக்கு அபூர்வாவின் நாடகத்தில் லயித்து அவள் முக பாவஙளுக்கேற்ப தானும் உணரும் ஆதித்யா குறித்த சீன் மிகவும் பிடித்து இருந்தது.

:clap: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை சிறுகதை - அவனால் நான் அழகு - மதுMadhu_honey 2015-11-04 20:21
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி ஜான்சி... கதையின் உயிரோட்டமான பகுதியை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.. ரசித்து படித்து கருத்துகள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top