(Reading time: 8 - 16 minutes)

என்னில் நீ!! உன்னில் நான்!! - கீர்த்தனா.ஆர்

This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.. பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்....

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...

ச்சேச்சே.... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது...

அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.... அது அவளே தான்....!

loveரு நொடி திகைத்தவன், தான் காண்பது கனவா நிஜமா என்று தன் கண்களை மூடி திறந்தான். ஆம்! நிஜத்தில் அது அவளே தான்....

பைக்கில் முன்புறம் அமர்ந்து இருந்தவன் ஏதோ கூற, சிரித்தவாறே அவனை அடித்தவள், தன் உள்ளுணர்வு உந்த, தன் கண்களை நாலாபுறமும் சுழல விட்டவளின் பார்வையில் விழுந்தான் அவன்.

அவனை பார்த்தவளின் விழிகள் தெறித்து விடும் அளவிற்கு விரிந்து அவளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இருந்தும் அவனை பார்த்ததில், அவளின் அகமும், முகமும் ஒரு சேர மலர்ந்தது .

அவனை பார்த்ததும், அவளின் பார்வையில் ஒரு நொடி ஆச்சிரியமும், அதன் பின் அவளின் வழக்கமான செய்கையும் கண்டு கொண்டவனின் இதழ்களும் மலர்ந்தது.

அதற்குள் அவனின் அலைபேசி ஒலி எழுப்பும் சத்தத்தில் கலைந்தவன் , மீண்டும் அவளை பார்த்தவாறு அழைப்பை ஏற்றான்.

“சொல்லு மச்சான்”

“டேய்... இப்போ எங்கடா இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு வண்டிக்கு நேரமாச்சு. சீக்கரமா வாடா “

“இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்டா. இங்க ஒரு சின்ன பிரச்சனை. ரோட்ல ட்ராபிக் க்ளியர் பண்ணிட்டு இருங்காங்கடா. வந்துறேன் மச்சி” என்று அழைப்பை துண்டித்தவனின் பார்வை மீண்டும் சாலையில் பதிந்தது.

அவள் அவனை கடந்து வெகு தூரம் சென்று கொண்டு இருந்தாள்....

அவனின் மனதிற்கு மட்டும் அவள் என்றும் நெருக்கமானவள்.. அவளை பார்த்த முதல் நொடி முதல் இன்று இந்த நொடி வரை அவனில் நிறைந்தவள்....

அவனின் இதயத்தில்..

அவனின் உயிரில்..

அவன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அவள் இருந்தாள்...

அவள் -      முகிற்குழலி

அவன் - மதிநயனன்  

அவனின் நினைவுகள் அவளை பார்த்த நொடியை நோக்கி சென்றது.

கோவையை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்தவன் மதிநயனன். தன் தந்தையின் உழைப்பை பார்த்து, விவசாயத்தில் ஆர்வம் கொண்டவன், பள்ளி படிப்பை முடித்ததும், கல்லூரியில் விவசாயத்தில் பட்ட மேற் படிப்பையும் முடித்தான். தன் சொந்த நிலத்திலே, இயற்கை வழி முறைகளை கையாண்டு மகசூலை அதிகம் கண்டான்.

அன்று கொடிசியா மைதானத்தில் நடைபெறும் அக்ரி கண்காட்சிக்கு சென்று வரும் வழியில் தான், அவளை பார்த்தான்.

தன் பெற்றோர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தன் திருமணதிற்கு சம்மதம் அளித்தவன், பெண்ணையும் அவர்களின் விருப்பத்திற்கே பார்க்குமாறு கூறினான்.

“தம்பி இந்த பொண்ணை  எங்க எல்லாருக்கும் பிடிச்சி இருக்கு. நீ சரின்னு சொன்ன நம்ம நல்ல நாள் பார்த்து உறுதி செஞ்சிட்டு வந்துடலாம்” என்று அவனின் தாய் கூறவும்  

“அம்மா உங்க எல்லாருக்கும் பிடிச்சி இருந்தால், எனக்கும் சரி தான். மானு கிட்ட கேட்டிங்களா. அவளுக்கும் சரி தான” அவன் கேட்க

“அவளும் ரொம்ப பிடிச்சி இருக்குன்னு சொல்லிட்டா.”

“அப்போ சரி.எனக்கும் சம்மதம்” என்றான்.

தன் தாய்-தந்தை, அவனின் குட்டி தங்கை மான்விழியும் தான் அவனின் உலகம்.

அதன் பின் நிச்சயதார்த்த வேலைகள் வெகு வேகமாய் நடந்தன. நிச்சய  நாளும் வந்தது.

பொள்ளாச்சியை தாண்டி, மரங்கள் அடர்ந்த தோப்பில் இருந்த அந்த வீடு அழகாக காட்சியளித்தது. அவனின் மனதில் அவனையும் அறியாமல் ஒரு வித அமைதி குடி கொண்டது.

பெரியவர்களின் சம்பிரதாயங்கள் முடிந்ததும், முகிற்குழலி அழைக்கப் பட்டாள். அவளின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்தவன், அதே நேரம் அவளின் கண்களை கண்டான். மிகச் சரியாய் அவளும் அவனை பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீண்டது.

அதன் பின் இருவரின் பெற்றோர்களும் தாம்பூல தட்டை மாற்றி, நிச்சயத்தை உறுதி  செய்து கொண்டு திருமண நாளையும் குறித்தனர்.  

அவளை தனிமையில் சந்தித்தவன் நேரடியாக அவளிடம் கேட்டான்.

“குழலி… எனக்கு உன்னை பார்த்ததும் ரொம்ப பிடிச்சி  போச்சு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா“ அவன் தவிப்புடன் கேட்கவும்

அவனை இமைக்காமல் ஒரு நொடி பார்த்தவள் “ எனக்கும் பிடிச்சிருக்கு” என்று மெல்லிய குரலில் கூறி நாணமுடன் தலை குனிந்தாள்.

அவளின் பதிலில் மகிழ்ந்தவன்” சரி இன்னும் கல்யாணத்துக்கு ஒன்றரை மாசம் தான் இருக்கு. அதனால போன்ல அதிகமா பேச நேரம் இருக்காது. உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே” அவன் கேட்க அவள் இல்லை என்றவாறு தலை அசைத்தாள்.

“சரி அப்போ பார்க்கலாம்” என்று கூறி வெளியேறினான்.

அதன் பின் இன்று தான் அவளை நேரில் பார்க்கின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.