திருமண நாளும் அழகாய் விடிந்தது. தமிழர் பண்பாடுகளின் இலக்கணங்களுள் ஒன்றாக திகழும் பட்டு வேட்டி சட்டையில் அழகிய ஆண்மகனாய் அவன்!! வெட்கமும், மகிழ்ச்சியும் முகத்தில் போட்டி போட அழகிய கூறை பட்டில் பெண்ணரசியாய் அவள்!!
இரு வீட்டு பெரியவர்களின் ஆசியோடு, தன்னவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவாறு, அவள் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தவன், அவளின் நெற்றியில் திலகமிட்டான்.
இரு மனங்களும் இணைந்து, அவர்களின் திருமணமும் அழகாய் அரங்கேறியது. அதன் பின் நடந்த அனைத்து சடங்குகளிலும், இருவரின் முகமும் மகிழ்ச்சியை மட்டுமே காட்டியது.
இரவின் தனிமையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமைதியாக இருந்தனர். அங்கே வாய் மொழி மௌனமாக, பாவையின் பார்வை மொழி மட்டும் அவனுக்கு எதையோ உணர்த்தும் செய்தியை காட்டியது.
அவளை பார்த்தவாறு எழுந்தவன், தன் கைகளை விரித்து, வா என்று கண்களால் அழைத்தவன், தன் தலையை அசைத்தான்.
மறு நொடி தாமதிக்காமல் ஓடி சென்று அவன் கைகளில் புகுந்து, அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
அவளை உச்சி முகர்ந்தவன், அவள் முகத்தை தன் நெஞ்சில் இருந்து பிரித்தவன் ”இந்த சின்ன மூளைகுள்ள என்ன ஓடிட்டு இருக்கு” என்று கேட்டான்.
“மதி! அது வந்து..... நா ... நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”
“அதுதான் வந்தாச்சே. இப்போ சொல்லு குழலி. உனக்கு என்கிட்டே என்ன கேட்டு தெரிஞ்சிகனுமோ தயங்காம கேளு.”
“அன்னிக்கு என்னை வேற ஒருத்தனோட பைக்ல போன போது பாத்திங்கல்ல. உங்களுக்கு என் மேல கோவமோ, இல்ல சந்தேகமோ ஏதும் வரலையா..” என்று தயங்கியபடியே சுவரை பார்த்து கொண்டே கேட்க, அவளின் செய்கையில் அவன் அவன் விட்டு சிரித்தான்.
“இப்போ எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருங்கிங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” சிணுங்கியவாறு அவள் சொல்ல
“குழலி ! இது தான் நான் உனக்கு கடைசியா சொல்லுற விளக்கம். இதை நல்ல ஞாபகம் வச்சிக்கோ. சரியா. அன்னிக்கு உன்னை அப்படி ஒரு நிலைமைல நான் பார்ப்பேன்னு கனவில் கூட நினைக்கல. ஒரு செகண்ட் உன்னை எதிர்பாராத விதமா சந்திச்சதுல ரொம்ப சந்தோச பட்டேன்.
அப்போ நீயும் என்னை பார்த்ததை நான் பார்த்தேன். அங்கேயே உன்னோட கைய புடிச்சிட்டு இந்த ஊர் முழுக்க சுத்தணும் ஆசை. இது தான் எனக்கு அப்போ தோணிச்சு. அதுக்குள்ள என்னோட ப்ரெண்ட் போன் பண்ணிட்டான். பேசிட்டு உன்னை தேடினா நீ ரொம்ப தூரம் போய்ட்டு இருந்த. நானும் சரி இன்னும் ஒரு வாரம் தானேன்னு என்னை நானே சமாதானப்படுத்திட்டு
என்னோட ஆசைகளை அடக்கி வெச்சிட்டேன்”
“ஆனா எனக்கு உன்மேல கோபமோ, வருத்தமோ, சந்தேகமோ ஒரு நிமிஷம் கூட வரவே இல்லைடா. அதுக்கு என்ன காரணம் தெரியுமா.” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவாறு கேட்க, அவள் தெரியாது என்பது போல தலை அசைத்தாள்.
“நீ தான்” என்க அவள் திகைத்தவாறு
“நானா… நான் எப்படி” அவள் புரியாமல் விழிக்க
“ஆமாடா!! அன்னிக்கு நிச்சயம் முடிஞ்சு நம்மள தனியா பேச சொல்லி சொன்னதும் உன்னை பார்க்க வந்தப்போ, உன்னோட கண்ணும் முகமும் எவ்ளோ மலர்ந்து இருந்துச்சோ, அதே மாதிரி என்னை பார்க்கின்ற ஒவ்வொரு தடவையும் அப்படி தான் இருந்துச்சு. அன்னிக்கே நான் இங்க நுழைந்தது எனக்கும் தெரியும் என்று அவளின் நெஞ்சை சுட்டி காட்டினான்.”
“நம்ம திருமண வாழ்க்கைக்கு முக்கியமே இந்த நம்பிக்கை தான். ஒருத்தர் மேல இன்னொருத்தர் வெச்சிருக்கற பரஸ்பர நம்பிக்கை. எந்த ஒரு சூழ்நிலைல உன்னை பார்த்தாலும் நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன் குழலி. அப்படி பட்டால் என்னை நானே சந்தேகப்படறதுக்கு சமம்.
ஏன்னா
“அவனின் இதய பகுதியை சுட்டி காட்டியவன் - இங்க இருக்கறது நீ!!”
“அவளின் இதய பகுதியை சுட்டி காட்டியவன் - இங்க இருக்கறது தான் நான்.!!
அவனின் நம்பிக்கையை கண்டு அவள் தான் ஒரு நொடி அசைவற்று போனாள்.
“மதி !! நான் நிஜமாவே ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவள்”
“எதை. யார் கிட்டடா. ஆனா எனக்கு மட்டும் ஏதும் நீ கொடுக்கலையே“ அவன் அப்பாவியாய் கேட்க, முதலில் புரியாமல் விழித்தவள் , புரிந்த பின் சிரித்தாள்.
“மதி. ப்ளீஸ்டா. நீங்க கேட்கலை என்றாலும் நான் சொல்லாமல் விட மாட்டேன்.” அவள் கெஞ்சலாக கூற
“மரியாதை ரொம்பவே இடிக்குதே. சரி உன்னோட திருப்திக்காக சொல்லுடா” என்க அவளின் முகம் பிரகாசமானது.
“அன்னிக்கு பைக்ல என்னோட வந்தது என்னோட கஸின். நம்ம நிச்சியத்துக்கு வர முடியல. கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னாங்க. கடைசி நேரத்துல அவசர வேலைன்னு சொல்லி வரவே இல்ல . அன்னிக்கு உங்களுக்கு கிப்டு வாங்க தான் போனேன். உங்களை பத்தி தான் அவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.... அவன் நம்ம ரெண்டு பேரையும் கிண்டல் பண்ணிட்டு இருந்தான். அது தான் முதுகுல ரெண்டு அடி குடுத்தேன் ” அன்று நடந்ததை கூறி முடித்தாள்.
“மேடம் சொல்லியாச்சா. எங்க அந்த கிப்டு கண்ணுல கூட காணோம்” அவளை சீண்ட அவள் முறைத்தாள்.
“நாளைக்கு எடுத்து தரேன் . என்னோட ரூம்ல இருக்கும்”
“சரிடா . இன்னிக்கு நைட் இப்படியே பேசிட்டே இருக்க போறியா” அவன் கேட்க
“ஆமா “ என்று அழகாய் தலை சாய்த்தாள்.
“கண்டிப்பா மேடம். ஆனா வேற மொழில” என்று கூறி அவளை இறுக அணைத்தான்.
இந்த நம்பிக்கை இருவரின் இடையில் இருக்கும் போது மதி - குழலி வாழ்கையில் வசந்தம் மட்டுமே வீசும்.
This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.